search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coromandel train derail"

    • ஒடிசா ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது.
    • ரெயில் விபத்து காரணமாக இதுவரை 90 ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது

    புதுடெல்லி

    ஒடிசாவில் நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே, ஒடிசா ரெயில் விபத்து காரணமாக இதுவரை 90 ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 46 ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதுடன்,11 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் போராடிய மீட்புக்குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், துன்பத்திலும் மக்களின் தைரியம் ஊக்கமளிக்கிறது. துன்பங்களை எதிர்கொண்டாலும் நமது தேசத்தின் மக்கள் காட்டிய தைரியமும் கருணையும் ஊக்கமளிக்கிறது. விபத்து நடந்தவுடன் ஏராளமான மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ரத்த தானம் செய்ய வரிசையில் நின்றனர்.

    மீட்புப் பணிகளை வலுப்படுத்திய பேரிடர் மீட்புக்குழு, காவல்துறை, தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். இரங்கல் தெரிவித்த உலகத் தலைவர்களின் வார்த்தைகள் துயரில் இருக்கும் குடும்பங்களுக்கு வலிமை தரும். உலகத் தலைவர்கள் அளித்த ஆதரவிற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • ரெயில் விபத்து காரணமாக இதுவரை 90 ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • மேலும், ஒடிசா ரெயில் விபத்தால் 6 ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

    புதுடெல்லி

    ஒடிசாவில் நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து காரணமாக அந்த வழியாகச் செல்லும் பல ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரெயில் விபத்து காரணமாக இதுவரை 90 ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 46 ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதுடன்,11 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும், ஒடிசா ரெயில் விபத்து காரணமாக 6 ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

    மங்களூருவில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு சந்திரகாஞ்சி செல்லும் விவேக் விரைவு ரெயில், சென்னையில் இருந்து நாளை காலை 7 மணிக்கு ஷாலிமர் புறப்படும் கோரமண்டல் விரைவு ரெயில், சென்னையில் இருந்து நாளை காலை 8.10 மணிக்கு சந்திரகாச்சி புறப்படும் ஏ.சி. விரைவு ரெயில் உள்ளிட்ட 6 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • ஒடிசா சென்ற பிரதமர் மோடி காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
    • மிகப்பெரிய ரெயில் விபத்தாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது

    ஒடிசா ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப்பணி, சிகிச்சை பெறுதல் போன்ற வேலைகளில் அரசு இயந்திரம் துரிதமாக இயங்கி வருவதால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் எழுப்பவில்லை. ஆனால் விபத்து குறித்து பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

    இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய ரெயில்வே மந்திரி ஆகியோரிடம் கேட்க ஏராளமான கேள்விகள் உள்ளன என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் சீரமைப்பு பணியில் ஈடுபடுமாறு வலியுறத்தியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''ஒடிசா ரெயில் விபத்து மூலம் நாடு முழுவதும் பெரும் சோகம் ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் முடிந்த அளவிற்கு உதவி செய்ய வலியுறுத்தியுள்ளேன்.

    பல மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் ஒடிசா சென்றிருப்பார்கள் அல்லது விரைவில் சென்றடைவார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எங்களிடம் பிரதமர் மோடி மற்றும் ரெயில்வே மந்திரி ஆகியோரிடம் கேட்க ஏராளமான கேள்விகள் உள்ளன. ஆனால், மீட்பு மற்றும் நிவாரணம் தற்போது முக்கியம் என்பதால் கேள்விகள் காத்திருக்கின்றன.

    இந்த விபத்து எப்படி நடந்தது? யார் பொறுப்பு ஏற்பது என்பதை கண்டறிய வேண்டும் என்று பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன். நாம் அனைவரும் ஏற்கனவே பாதுகாப்பு பற்றி பேசுகிறோம். ஆனால், ரெயில்வே வரலாற்றில் இதுவரை நடைபெறாத நிகழ்வு தற்போது நடைபெற்றுள்ளது. ஆனால் இதுகுறித்து பின்னர் விவாதிக்கலாம். ஆனால், மத்திய அரசுடன் ஒன்றிணைந்து மக்களுக்க உதவி செய்யக் கூடிய நேரம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • இந்த நிகழ்வு அரசுக்கு மிக அபாயமானது
    • அனைத்து வகையான விசாரணைக்கும் உத்தரவு

    ஒடிசாவில் நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, நிவாரணம் அறிவித்தார். ஒடிசா அரசுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என அறிவித்தார்.

    இன்று காலை உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதன்பின் டெல்லியில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு விமானம் மூலம் விரைந்தார். அங்கிருந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தார். அங்கு விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

    அதன்பின் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    ரெயில் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள். இது ஒரு வலியை ஏற்படுத்தக் கூடிய சம்பவம். உயிரிழந்தவர்களை அரசு மீண்டும் கொண்டு வர முடியாது. ஆனால், அவர்கள் குடும்பத்தினரின் துக்கத்துடன் இருக்கும். இந்த விபத்து அரசுக்கு மிகவும் சீரியஸ் ஆனது. காயம் அடைந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் நபர்களை அரசு கை விட்டுவிடாது. ஒவ்வொரு வகையிலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டால் யாராக இருந்தாலும் தப்பிடவிட முடியாது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • மீட்பு பணியில் ஒடிசா அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என ஏற்கனவே மம்தா அறிவிப்பு
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்

    மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளான பகுதிக்குச் சென்று பார்வையிட்டார் மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    இந்த நூற்றாண்டின் இந்தியாவில் மிகப்பெரிய ரெயில் விபத்து இது. பலியானோர் எண்ணிக்கை உயரலாம். ரெயில்வே துறை உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவாக அறிவித்துள்ளது.

    நாங்கள் மேற்கு வங்காள மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க இருக்கிறோம். வேலை முடியும் வரை மேற்கு வங்காள மக்கள் ரெயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் இணைந்து வேலை செய்வார்கள்'' எனத் தெரிவித்தார்.

    இந்த விபத்தில் இரண்டு ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டன. இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    மீட்பு பணி நிறைவடைந்த நிலையில், தற்போது தண்டவாளம் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோரில் கோர விபத்தில் சிக்கியது.
    • விபத்து நடந்த பகுதிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசு சார்பில் குழுவை அனுப்பியுள்ளார்.

    மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோரில் கோர விபத்தில் சிக்கியது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விபத்து நடந்த பகுதிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசு சார்பில் குழுவை அனுப்பியுள்ளார்.

    இந்த நிலையில் ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கு இன்று பிற்பகலில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்று நிலைமையை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

    • இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 205க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், ஒடிஷா ரெயில் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பயணி அனுபவ தாஸ் என்பவர் தான் எதிர்கொண்ட திகில் அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பான பதிவில் அவர், "ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று மாலை ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு, பக்கத்தில் லூப் டிராக்கில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் மீது மோதியது. பின்னர், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.

    ஹவுராவில் இருந்து சென்னை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்த நான், காயமின்றி தப்பியதற்கு கடவுளுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது மிகப்பெரிய ரெயில் விபத்து.

    பெங்களூரு-ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் மூன்று பொது பெட்டிகள் முற்றிலும் தடம் புரண்டு சேதமடைந்துள்ளன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஜெனரல், ஸ்லீப்பர், ஏசி 3 அடுக்கு மற்றும் ஏசி 2 அடுக்கு உட்பட கிட்டத்தட்ட 13 பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

    விபத்தில் சிக்கி குடும்பங்கள் சுக்கு நூறாக நொறுங்கின. எங்கேயும் கைகால்கள் இல்லாத சிதைந்த உடல்கள் சிதறிக்கிடந்தன. ரெயில் தண்டவாளங்கள் எங்கும் ரத்தக்களமாக காட்சியளித்தன. இது என்னால் மறக்க முடியாத ஒரு காட்சி. விபத்தில் சிக்கிய குடும்பங்களுக்கு கடவுள் உதவுவார். அவர்களுக்கு எனது இரங்கல்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டம் ரத்து.
    • அரசு சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து.

    ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்பட அரசு சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    ×