search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிஷா ரெயில் விபத்து"

    • ஒடிசா ரெயில் விபத்தில் மேற்கு வங்காளத்தினர் அதிக அளவில் பாதிப்பு
    • ரெயில்வே அதிகாரிகள் பேசிய உரையாடல் கசிந்ததாக குற்றச்சாட்டு

    ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பினார்.

    ஒரு ரெயில் மேற்கு வங்காளத்தில் இருந்து புறப்பட்டது. மற்றொரு ரெயில் அங்கு சென்றது. இதனால் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ரெயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது. உயர்மட்ட குழு விசாரணையும் நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணிக்கு மேற்கு வங்காள அரசு மிகப்பெரிய அளவில் உதவி செய்து வருகிறது.

    இந்த நிலையில் ஒடிசா ரெயில் விபத்து திரிணாமுல் காங்கிரசின் சதி என மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் சுவேந்து அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஒடிசா ரெயில் விபத்து திரிணாமுல் காங்கிரசின் சதி. வேறு மாநிலத்தில் விபத்து நடந்திருக்கும்போது, நேற்றிலிருந்து அவர்கள் ஏன் அதிக அளவில் பீதி அடைந்துள்ளனர். சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் பயப்படுகிறார்கள்?. போலீஸ் உதவியுடன் ரெயில்வே அதிகாரிகளின் ஒட்டுக் கேட்டுள்ளனர். இரண்டு அதிகாரிகளின் போன் உரையாடல் இவர்களுக்கு எப்படி தெரிந்தது. எப்படி உரையாடல் கசிந்தது. இது சிபிஐ விசாரணையில் வரவேண்டும். இது வரவில்லை என்றால், நான் நீதிமன்றம் செல்வேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 205க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், ஒடிஷா ரெயில் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பயணி அனுபவ தாஸ் என்பவர் தான் எதிர்கொண்ட திகில் அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பான பதிவில் அவர், "ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று மாலை ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு, பக்கத்தில் லூப் டிராக்கில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் மீது மோதியது. பின்னர், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.

    ஹவுராவில் இருந்து சென்னை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்த நான், காயமின்றி தப்பியதற்கு கடவுளுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது மிகப்பெரிய ரெயில் விபத்து.

    பெங்களூரு-ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் மூன்று பொது பெட்டிகள் முற்றிலும் தடம் புரண்டு சேதமடைந்துள்ளன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஜெனரல், ஸ்லீப்பர், ஏசி 3 அடுக்கு மற்றும் ஏசி 2 அடுக்கு உட்பட கிட்டத்தட்ட 13 பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

    விபத்தில் சிக்கி குடும்பங்கள் சுக்கு நூறாக நொறுங்கின. எங்கேயும் கைகால்கள் இல்லாத சிதைந்த உடல்கள் சிதறிக்கிடந்தன. ரெயில் தண்டவாளங்கள் எங்கும் ரத்தக்களமாக காட்சியளித்தன. இது என்னால் மறக்க முடியாத ஒரு காட்சி. விபத்தில் சிக்கிய குடும்பங்களுக்கு கடவுள் உதவுவார். அவர்களுக்கு எனது இரங்கல்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டம் ரத்து.
    • அரசு சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து.

    ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்பட அரசு சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    ×