search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector information"

    • சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
    • இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.

    சிவகங்கை

    சிகவங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படு த்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகிற 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேலும் இந்த முகாமில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவ தற்கான விண்ணப்ப படிவமும் வழங்கப்படும்.

    விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ படித்த இளைஞர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் கழிவு புதுப்பிப்பாளர்களால் மட்டுமே மின்கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும்.
    • மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

    கள்ளக்குறிச்சி:

    இந்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின், மின் விதிகள் மற்றும் மேலாண்மைக் கழிவு விதிகளின்கீழ், அங்கீகரி க்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுபு துப்பிப்பாளர்களால் மட்டுமே மின்கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும். மேலும், நடுவண்மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் பொறுப்பு சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள், மின் கழிவுகளை சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீக ரிக்கப்பட்ட மின்-கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், மின்னனு கழிவு விதிகளின்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கைவிடப்பட்ட மின்-கழிவுப் பொருட்களைச் சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின் -கழிவுகளைபி ரித்தெடுப்போர் அல்லது மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.

    முறைசாரா வர்த்தகம் அறிவியல்பூர்வமற்ற செயலாக்கம் மற்றும் மின் கழிவுகளை எரித்தல் பேன்ற சம்பவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொது மக்களின் குறைகளாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனவே, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின்கழிவுகளைஅறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை மனிதஆரோக்கியத்திற்கும், சுற்று ச்சூழலுக்கும் எதிர்ம றையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே, மின்னனு கழிவு மேலாண்மை விதிகளின்படி, மின் பொருள் உற்பத்தியாளர்கள்,தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செ ய்வோர், பிரித்தெடுப்போர்மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோர் மீறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் கீழ்தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அபராதம் விதிக்க ப்படும். மேலும், அந்நிறு வனத்தைமூடிவிடவும் அல்லது அந்நிறுவனத்தில் மின்சாரம், நீர் அல்லது வேறு ஏதேனும் சேவையை நிறுத்தவும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது.

    மேலும், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனைஅல்லது ரூ.1 இலட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட பொது மக்கள் சட்டவி ரோதமாக அல்லது முறைசாரா செயலாக்கத்தைத் தடுக்கும் பொருட்டு மின் கழிவுகளை அங்கீகரி க்கப்பட்ட பிரித்தெ டுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களிடம் திரும்ப ஒப்படைத்திட வேண்டும். மேலும்,பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள், மின் கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்கத்தைத் தவிர்த்து மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற்று செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • பி.நெற்புகப்பட்டி கிராமத்தில் வருகிற 9-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பி.நெற்புகப்பட்டி கிராமத்தில், வருகிற 9-ந் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதில் அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். தகுதிவாய்ந்த பயனாளிகள் பயன்பெறச் செய்வதே இந்த முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • மிகக்குறைந்த வட்டியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • ஆண் 5 சதவீதம், பெண் 4 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பா ட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்த ங்கிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு, விராசாட் திட்டத்தின் மூலம் கைவி னைப்பொருட்கள் செய்யப் பயன்படும் மூலப்பொருட்கள், கருவிகள், எந்திரங்கள் வாங்குவதற்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    தனிநபர் கடன் திட்டங்களில், திட்டம்-1-ன் கீழ் கடனுதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரம், நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து க்குள் இருப்பின், ஆண் 5 சதவீதம், பெண் 4சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். தவணைத் தொகை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய காலம் 5 ஆண்டுகள், அதிகபட்சம் 60 தவணைகள் ஆகும்.

    தனிநபர் கடன் திட்டங்களில், திட்டம்-2-ன் கீழ் கடன் உதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறம் மற்றும் நகாப்புறம் ரூ.8,லட்சத்துக்கு மேல் இருப்பின், ஆண் 6சதவீதம், பெண் 5சதவீதம் வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். தவணைத் தொகை வட்டியுடன் திரும்பசெலுத்த வேண்டிய காலம் 5 ஆண்டுகள், அதிகபட்சம் 60 தவணைகள் ஆகும்.

    கடன் பெற இணைக்க ப்பட வேண்டிய ஆவணங்கள்: சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று நகல், கடன் பெறுவதற்கான தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஆதார் அட்டை நகல், கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள், பாஸ்போர்ட் புகைப்படம்-3.

    கடன் விண்ணப்பப் படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் இருந்து விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகம் (மாவட்ட கலெக்டர் அலுவலகம்), கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், விருதுநகர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், விருதுநகர் மாவட்டம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.
    • விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட–த்தில் அக்டோபர் 2022-ம் மாதத்திற்கான விவசாயி–கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 28-ந் தேதி (வெள்ளி–க்கிழமை) அன்று முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறையிலான தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகளை தெரிவித்தும், தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கறவை மாடு வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
    • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2022 - 2023 ஆண்டு தாட்கோ மூலம் பெருமளவில் விவசாய தொழில் புரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை பொருளாதாரத்தில் தற்சார்புஉடையவர்களாக மாற்றிடும் வகையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கறவை மாடு வாங்க ரூ.1.50 லட்சம் திட்டத்தொகையில் 30 சதவீதம் அதாவது ரூ.45 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட உள்ளது.

    மேலும் தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கறவை மாடு வாங்க நிர்ணயிக்கப்பட்ட திட்டத்தொகை ரூ. 1.50 லட்சத்தில் 30 சதவீதம்அதாவது ரூ.45 ஆயிரத்து மானிய தொகையும் மீதமுள்ள தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்பட உள்ளன.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்திற்குஇதுவரை மானியம் பெற்றிருக்கக் கூடாது.

    இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிப்பவர்கள் ஆதிதிராவிடராக இருப்பின்http://application.tahdco.com மற்றும் பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்றஇணையதள முகவரியில் தொழில் முனைவோர் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர் புகைப்படம், சாதி சான்றிதழ், வருமானச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, மாடு வாங்குபவர்களிடமிருந்து பச்சைத்தாலில் மாடுகளின் நிலையை குறிப்பிட்டு எழுதி வாங்க வேண்டும் மற்றும் கால்நடை மருத்துவரிடம் அறிக்கை ஆகிய சான்றுகளுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இணையதளத்தில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணியளவில்ந டைபெறுகிறது.
    • பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்புகளும், நிரந்தர பணி நியமனமும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் தமிழ்நாடு ஊரக, நகர்ப்புற வாழ்வாதா ரஇயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும்டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்புத னியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றனர். முகாம் வருகின்ற 22.10.2022 அன்று ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணியளவில்ந டைபெறுகிறது. இதில் 2020, 2021 மற்றும் 2022-ம்கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சிபெற்று, 18 முதல் 20 வயதுடைய விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்.

    அவ்வாறு தேர்வு செய்யப்படும் பெண்வி ண்ணப்பதாரர்களுக்கு 12 நாட்கள் பயிற்சியும், மாத சம்பளமாக ரூ.16,557-ம்,உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி, பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்புகளும், நிரந்தர பணி நியமனமும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும். எனது கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார்தெரிவித்து ள்ளார்.

    • ஆண்டுதோறும் நிலமற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றனர்.
    • நிலம் வழங்க விருப்பம் உள்ள நில உரிமையாளருக்கு நியாயமான இழப்பீட்டு வழங்கப்படும்.

    தேனி:

    தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் இருந்து ஆண்டுதோறும் நிலமற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ேடார், சிறுபான்மையின மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றனர்.

    தேனி மாவட்டத்தில் இந்த நிதியை பயன்படுத்தி நிலம் எடுப்பு செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. வீடு இல்லாத பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு நிலம் வழங்க விருப்பம் உள்ள நில உரிமையாளருக்கு நியாயமான இழப்பீட்டு உரிமை மற்றும் வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச்சட்டம் 2013-ன்படி நில எடுப்பு செய்யப்பட உள்ளது.

    எனவே நில உரிமையாளருக்கு அடிப்படை நில மதிப்புடன் நிலத்தில் இருக்கும் கட்டுமானங்கள், மரங்களுக்கும் மதிப்பீடு நிர்ணயித்து ஆறுதல் தொகையும் சேர்ந்த வழங்கப்பட இருக்கிறது. எனவே நில உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீட்டு தொகை கிடைக்கும். நல்ல அணுகு சாலை உள்ள நிலம், உறவுகளுக்குள் சொத்துப்பிரச்சினை இல்லாத, கோர்ட்டு வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் இல்லாத நிலம்,

    தனிநபர் பட்டாவாக உள்ள ஒருஏக்கருக்கு மேற்பட்ட நிலம் இருந்து அதனை நிலம் இல்லா ஏழை, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்களுக்கு வழங்க விருப்பம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    • உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள்,
    • வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரி–வில் நேரில் வந்து சமர்ப்பிக்கலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    சேலம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திற–னாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாதமொன்றுக்கு, 10-ம் வகுப்பு தோல்விக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு ரூ.400 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600 வீதம் காலாண்டிற்கு ஒருமுறை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

    மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 10-ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600, மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000 வீதம் மாதந்தோறும் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவ–சமாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்–பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரி–வில் நேரில் வந்து சமர்ப்பித்துப் பயன்பெறலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் தங்கி கல்வி பயின்று
    • மாவட்டத்தில் வாழ்வியல் வழிகாட்டு மையம் திட்டம்

    சேலம்

    சேலம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்துறையின் சார்பில் வாழ்வியல் வழிகாட்டு மையம் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

    சேலம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்துறையின் அங்கீகாரம் பெற்று செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் தங்கி கல்வி பயின்று உயர்கல்வி அல்லது தொழிற்கல்வி கற்க நிறுவனத்திலிருந்து வெளியேறும் நிலையில் அவர்களின் எதிர்கால நலனிற்கான கல்வி, தொழிற்கல்விக்கான வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித்தரவும், சமூக மீள்சீராக்கம் செய்யவும், சுயசார்பில் தன்னிறைவு அடைய செய்தலை நோக்கங்களாக கொண்டு அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு குழந்தைகள் நலன் சார்ந்த அனைத்து விதமான சேவைகளை வழங்கவும், அரசின் விதிகளுக்கு உட்பட்டு பணிபுரிய விருப்பம் உள்ள வெளிமுகமை நிறுவனம் மூலம் மாவட்டத்தில் வாழ்வியல் வழிகாட்டு மையம் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் தங்கி குழந்தைகள் பயன்பெறும் வகையில் தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி கற்க வெளியேறியதில் இருந்து 5 ஆண்டுகள் வரை குழந்தை தொடர்பான தனிப்பட்ட விபரங்களை பராமரிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட குழந்தைகள் இல்லம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    அரசின் விதிகளுக்கு உட்பட்டு சேவைகளை வழங்க விருப்பமுள்ள வாழ்வியல் வழிகாட்டு மையம் திட்டத்தை செயல்படுத்த நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்ப டுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்திட தேவைப்ப டும் நிதி, பணியாளர்கள் விபரத்துடன் கூடிய முழு அளவிலான கருத்து ருக்களை வருகிற 31-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு கிடைக்கும்படி அனுப்பி வைக்கவேண்டும்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • திருச்சி மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி மாநில கல்விக் கொள்கை தொடர்பான கருத்து கேட்புக்கூட்டம் நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் கல்வியார்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    திருச்சி :

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருச்சி மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி மாநில கல்விக் கொள்கை தொடர்பான கருத்து கேட்புக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கல்வியார்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    திருச்சி மாவட்டத்தில் ஒன்றிய அளவில் கருத்து கேட்புக்கூட்டம் நடை பெறும் இடங்கள் பின்வருமாறு :-

    அந்தநல்லூர் - ஸ்ரீரங்கம் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, லால்குடி - நெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மண்ண ச்சநல்லூர் - அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி, மணிகண்டம் - சோமரச ம்பேட்டை ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளி, மணப்பாறை- ஜீவன் கல்வியியல் கல்லூரி, மருங்காபுரி - கோவில்பட்டி விடியல் மெட்ரிக் மேல்நிலைப்ப ள்ளி, முசிறி - எம்.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரி, புள்ளம்பாடி - குழந்தை யேசு மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி,

    திருச்சி - தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலை ப்பள்ளி, திருவெறும்பூர் - பாய்லர் பிளான்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொட்டி யம் - கொங்கு நாடு (பி.எட்) கல்லூரி, தா.பேட்டை - சௌடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உப்பிலியபுரம் - எரகுடி ஆர்.எஸ்.கே.மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி, வையம்பட்டி - ஆர்.சி.மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி ஆகிய இடங்களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை அருகே விரைவில் அரசு மாதிரி பள்ளி தொடங்கப்படும் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • அரசு மாதிரிப்பள்ளியின் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கீழக்கண்டனி, பண்ணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக தொடங்கப்பட உள்ள அரசு மாதிரிப்பள்ளியின் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். அந்தவகையில், அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை அகில இந்திய நுழைவுத்தேர்வு போன்ற உயர்கல்விக்கு தயார் செய்யும் வகையில் உண்டு உறைவிட அரசு மாதிரிப்பள்ளிகளை தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் தொடங்க அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி, சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி பண்ணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரிப்பள்ளியை தற்காலிகமாக தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பள்ளியில் அக்டோபர் மாதத்திற்குள் 12-ம் வகுப்பு உயிரியல், கணிதம் படிக்கும் 80 மாணவ, மாணவிகள் கல்வி கற்க உள்ளனர். அதனைத்தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் உயிரியல் பாடப்பிரிவு மற்றும் கணினி–கணிதம் பாடப்பிரிவு வகுப்புகளிலிருந்து 160 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது.

    மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தங்கும் விடுதி போன்றவை தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது. அரசின் அறிவுரையின்படி, விரைவில் மாதிரிப்பள்ளி தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் முத்துசாமி, மாதிரிப்பள்ளி தலைமையாசிரியர் போஸ், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அருளானந்தம், ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×