search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு மாதிரி பள்ளி"

    • கீழப்பூங்குடியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கலெக்டர் திறந்து வைத்தார்.
    • மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் முதல்-அமைச்சர் ஏற்படுத்தி வருவதாக விழாவில் கலெக்டர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள கீழப்பூங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தனியார் பங்களிப்பு மூலம் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கிராமப்புறங்களில் வளர்ச்சி பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் வளர்ச்சிபணிகள் நடைபெறுகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் சிறப்பாக கல்வி பயில அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் முதல்-அமைச்சர் ஏற்படுத்தி வருகிறார்.

    அதன்படி கீழப்பூங்குடி ஊராட்சி ஒன்றிய அரசு மாதிரி பள்ளியில் தனியார் பங்களிப்புடன் ரூ. 24 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், கீழப்பூங்குடி ஊராட்சி மன்றத்தலைவி சண்முக வள்ளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை அருகே விரைவில் அரசு மாதிரி பள்ளி தொடங்கப்படும் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • அரசு மாதிரிப்பள்ளியின் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கீழக்கண்டனி, பண்ணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக தொடங்கப்பட உள்ள அரசு மாதிரிப்பள்ளியின் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். அந்தவகையில், அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை அகில இந்திய நுழைவுத்தேர்வு போன்ற உயர்கல்விக்கு தயார் செய்யும் வகையில் உண்டு உறைவிட அரசு மாதிரிப்பள்ளிகளை தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் தொடங்க அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி, சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி பண்ணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரிப்பள்ளியை தற்காலிகமாக தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பள்ளியில் அக்டோபர் மாதத்திற்குள் 12-ம் வகுப்பு உயிரியல், கணிதம் படிக்கும் 80 மாணவ, மாணவிகள் கல்வி கற்க உள்ளனர். அதனைத்தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் உயிரியல் பாடப்பிரிவு மற்றும் கணினி–கணிதம் பாடப்பிரிவு வகுப்புகளிலிருந்து 160 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது.

    மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தங்கும் விடுதி போன்றவை தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது. அரசின் அறிவுரையின்படி, விரைவில் மாதிரிப்பள்ளி தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் முத்துசாமி, மாதிரிப்பள்ளி தலைமையாசிரியர் போஸ், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அருளானந்தம், ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×