search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore"

    • மகிஷாசுவர்த்தனி நமது கோவை மாநகரில் கோனியம்மன் என்று பெயர் பெற்று விளங்குகிறாள்.
    • தன்னை அன்புடன் பணிவோரை அருள் உள்ளம் கொண்டு காத்து வருகின்றாள்.

    கனிந்த உள்ளமும் கருணைக்குணமும் படைத்து அருள் வடிவு தாங்கிய அன்னை பராசக்தியின் போர்முக வடிவான

    துர்க்காதேவி கோட்டைகளில் காவல் தெய்வங்களாக விளங்குவதோடன்றி எவரும் கும்பிட்டு தொழுதெழும்

    கோவில் தெய்வங்களாகவும் விளங்கி தம்மை வழிபடும் அன்பர்கள் அனைவருக்கும்

    வேண்டியன வேண்டியவாறே விரைந்தளிக்கும் வித்தக செல்வியாகவும் ஆனதால்,

    சிதம்பரத்தில் தில்லை காளியாகவும், தொண்டை நாட்டு திருவாலங்காடு மற்றும்  கல்கத்தாவில் (காளி கோட்டம்) காட்சிமிக்க காளிதேவியாகவும், மும்பாயில் மொம்பாதேவியாகவும்,

    அண்மை மாவட்டமாகிய ஈரோட்டில் பண்ணாரி மாரியம்மனாகவும் பெயரும் புகழும் பரவி விளங்குவது போல,

    மகிஷாசுவர்த்தனி நமது கோவை மாநகரில் கோனியம்மன் என்று பெயர் பெற்று பெருமையுடன் விளங்குகிறாள்.

    முன்பு ஒரு சிலர் வழிபடும் தெய்வமாக இருந்த கோனியம்மன்,

    ஊர் முழுவதும் ஒருங்கே கூடி கொண்டாடும் நகர் தெய்வமாக பெருமை சிறந்து விளங்குகிறாள் இன்று.

    தன்னை அன்புடன் பணிவோரை அருள் உள்ளம் கொண்டு பல்லாண்டுகளாய் காத்து வருகின்றாள்.

    இதனால் இன்றும் நோய் வந்தாலும், வைசூரி, காலரா போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டாலும்

    கோனித்தாயை நம்பி அவள் திருவடிகளே துணை என்று நம்பி பூசிப்போர்

    மாவிளக்கேற்றியும் பொங்கற்படையலிட்டும், அகங்குளிர அபிஷேக ஆராதனை புரிந்தும்,

    கும்பம் தாளித்து கொண்டாடியும் காணிக்கை செலுத்தியும் வருவதனால் பல நன்மைகளை அடைகின்றனர்.

    • தமிழில் கோ என்றால் மன்னர் மன்னர் என்றும் வடமொழியில் ராஜாதிராஜன் எனவும் கூறுவர்.
    • கோனியம்மனை வணங்குவோர் செல்வங்கள் அனைத்தும் பெறுவர்.

    கோனி அம்மன் என்றால் அரசர்களால் வழிபடப்படும் தெய்வம் எனவும் தெய்வங்களுக்கு எல்லாம் அரசி எனவும் பொருள்படும்.

    தமிழில் கோ என்றால் மன்னர் மன்னர் என்றும் வடமொழியில் ராஜாதிராஜன் எனவும் கூறுவர்.

    இவ்வாறு கோன் திரியும்போது கோனி எனில் "அரசர்க்கரசி" அல்லது "அரசிக்கரசி" எனவும் பொருள் கொள்ளலாம்.

    நன்னூற் சூத்திர வாயிலாக ஆ,மா,கோ,வை வணையவும் பெறுமே.

    கோ என்னும் சொல் கோன் என்றாயிற்று.

    கோன்-ஆண் பால், கோனி-பெண்பால் ஆதலின் கோனியம்மன் என்றாயிற்று.

    கோனியம்மனை வணங்குவோர் செல்வங்கள் அனைத்தும் பெறுவர்.

    அவ்வம்மையே ராஜராஜேஸ்வரி எனக்கூறினும் சால பொருந்தும்.

    சங்க காலத்து கோசர்கள், மண் கோட்டையிலும், ஊர்க்குடிகளும் படை வீரர்களும் பேட்டையிலும் வசித்தனர்.

    இப்போது கோட்டை மேடு என்று வழங்கப்படும் இடம் தான் அக்காலத்தில் மதில்களோடும், அகழிகளோடும் விளங்கியுள்ளது.

    இப்போது இருக்கும் ஈசுவரன் கோவிலும், சுப்ரமணியர் ஆலயமும் கோட்டைக்குள்ளும் கோனியம்மன் ஆலயம் கோட்டைக்கு வெளியிலும் அமைந்திருந்தன.

    சேரன் செங்குட்டுவன் வடக்கே கற்புடைதேவி கண்ணகிக்கு கற்சிலை கொணர படையெடுத்து சென்றபோது கோவன்புத்தூரும், கோட்டையும் சிதைந்தன.

    அதன் விளைவாக கொங்கில் கோசர் ஆட்சியும் மறைந்தது.


    • பெயர் பெற்ற கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.
    • மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.

    பெயர் பெற்ற கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.

    நமது செந்தமிழ்நாட்டிலே ஓரிடத்தில் பத்து குடிசைகள் சேர்ந்தாற்போல் அமைந்தாலும்,

    அந்த இடத்தில் ஒரு மண்மேடை கட்டி அதன் மீது கூரை வேய்ந்து நடுவில் மண் திட்டில் ஓர் பிம்பத்தை அமைத்து,

    தெய்வமாக தொழுவதும், அரசும்,வேம்பும் சேர்ந்து மரமாக வளர்ந்த நிழலில் கல்நட்டு தெய்வமாக வழிபடுவதும்

    நம் முன்னோர் வகுத்த வழியாகும்.

    இவ்வாறு தான், காடு திருத்தி மக்கள் வாழும் நிலமாக பண்படுத்தியபோது இருளர் தலைவனான கோவன்

    தங்கள் குடிசைக்கருகில் வடபாகத்தில் சிறு கோயிலொன்றெடுத்து ஒரு கல் நட்டு,

    அவனும் அவன் இனத்தார்களும் குலதெய்வமென வழிபட்டு, விழாசெய்தும் கொண்டாடினார்கள்.

    இக்கோவில் கோயம்புத்தூருக்கு வடக்கில் துடியலூருக்கு செல்லும் வழியில்,

    சங்கனூர் பள்ளத்தருகே இருந்து பாழடைந்தது.

    மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.

    பல்லாண்டுக்கு பின் இளங்கோசர் கொங்கு நாட்டினை ஆண்ட காலத்தில் சேரர் படையெடுத்தால் தடுக்க,

    ஒரு மண்கோட்டையையும், மேட்டையும் புதிதாக கோவன் புத்தூரிலே கோசர்கள் கட்டினார்கள்.

    அங்ஙனம் கட்டிய கோட்டைக்கு காப்பு தெய்வமாகவும் தன் பெயர் விளங்கும் வண்ணமும் சிறுகோவிலொன்றெடுத்து

    அதில் வைத்து வணங்கிய தெய்வத்துக்கு கோனியம்மன் என பெயரிட்டு கோவில் கொள்ள செய்தனர்.

    அக்கோயிலே தற்போது கோவை மாநகரின் நடுவில் விளங்கும் கோனியம்மன் கோவில் ஆகும்.


    • கோவை மாநகரின் மையமாகவும் கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
    • கோவை நகரத்தில் உள்ள சிவாலயம் கோனியம்மன் ஆலயத்திற்கு தெற்கிலே உள்ளது.

    வளமையும், பெருமையும் மிக்க கோவை மாநகரில் கோட்டை ஈசுவரன் கோவில், பேட்டை ஈஸ்வரன் கோவில் என்ற

    இரண்டு சிவாலயங்களுக்கு மத்தியில் பழம் பெருமையுடன் விளங்குவது அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில்.

    3 கோவில்கள் 3 கண் போலவும் அதில் கோனியம்மன் திருக்கோவில் நடுவில் உள்ள நெற்றிக்கண் போலவும் அமைந்துள்ளது.

    கோவை மாநகரின் மையமாகவும் கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

    கோவை மாநகரின் தனிப்பெரும் அரசியாக கோனியம்மன் விளங்கி தன்னை வணங்குவார்க்கு தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வரியா மனந்தரும் என்ற அபிராமி அந்ததி கூறும் முறையில் திருவருட்செல்வம் வழங்கி வருகின்றாள்.

    கோவை மாநகரின் தனிப்பெரும் அரசியாகவும், காவல் கடவுளாகவும், வணங்கி வழிபாடு செய்வோர்க்கு அருளும்,

    திருவருட் சக்தியாகவும், சாந்தி துர்க்கா பரமேஸ்வரியாகவும்

    கோனியம்மன் திருவருட் பொலிவுடன் விளங்குகின்றாள்.

    சைவாகம விதிப்படி தமிழகம் முழுக்க எந்த சிவாலயம் எடுப்பித்தாலும் அதன் வடவெல்லை காவல் தெய்வம்

    காளி அல்லது கொற்றவை அல்லது பிடாரியேயாகும்.

    இப்பெண் தெய்வம் அன்னை பராசக்தியின் கோப சக்தியான ஒரு கூறு என நூல்கள் கூறும்.

    அக்கூறே உலக உருண்டைகளை பந்தாக விளையாடும் ஆற்றலை இறைவியிடம் பெற்றது என்றால்

    அன்னை பராசக்தியின் பெருமையும் ஆற்றலும் உயிர்களால் அளவிட முடியுமா?

    மேற்கு காவல் தெய்வம் மகாவிஷ்ணுவே, கிழக்கிற் பெரும்பாலும் நேர்பார்வையாதலின் கணேசரோடு விளங்குவது வழக்கமாகும்.

    இவ்வாறுள்ள சைவாகம விதிப்படி அமைந்த துர்க்கா தேவியே நம் கோனியம்மையாகும்.

    கோவை நகரத்தில் உள்ள சிவாலயம் கோனியம்மன் ஆலயத்திற்கு தெற்கிலே உள்ளது.

    கோட்டை ஈசுவரன் ஆலயம் தான் அது.

    அவ்வாலயத்து இறைவன் சங்கமேஸ்வரர், அம்மை அகிலாண்டேஸ்வரி.

    தெற்கு காவல் தெய்வம் மகாசாஸ்தா ஆவார்.

    சிவபிரானின் புருஷ சக்தியாகிய திருமால் மோகினியாகிய பெண்ணரசியாக நின்றபோது இறைவன் பேரழகில்

    தம் நெஞ்சை பறிகொடுத்து பெற்ற பிள்ளையாகிய மஹாசாஸ்தாவே ஐயப்பன் ஆவர்.

    இதற்கு ஆதாரம் சுந்தரபுராணம் மகாசாத்துப்படலம்.


    • பேரூர் பழமையாதலின் புதிய ஊர் பேரூருக்கு கிழக்கிலே தோன்றலானது.
    • தமிழ்நாடு முகம் என்றால், நெற்றியில் திலகம் என விளங்குவது கோவை மாநகரம்.

    ஆறு இல்லாத ஊருக்கு அழகு இல்லை என்பதற்கு இணங்க, கோவில் இல்லாத ஊரில் குடி இருக்காதே என்ற ஒளவை சொல்லின்படி,

    தமிழகம் கோவில்கள் நிறைந்த மாநிலமாக திகழ்கின்றது.

    பாரத நாட்டின் முகம் என விளங்குவது தமிழ்நாடு.

    தமிழ்நாடு முகம் என்றால், நெற்றியில் திலகம் என விளங்குவது கோவை மாநகரம்.

    தொழில் வளத்தாலும், வாணிப வளத்தாலும், வேளாண்மை வளத்தாலும், மக்கள் முயற்சியினாலும் முன்னணியில் விளங்கும் பெருமை உடையது கோவை மாநகரம்.

    கோவன்புத்தூராகிய கோயம்புத்தூர், கோயமுத்தூர், கோவை என வழங்க பெறுகிறது.

    600 ஆண்டுகளுக்கு முன் திருப்பேரூர் வந்த அருணகிரிநாத சுவாமிகள் கோட்டை ஈசுவரன் கோவில் முருகபெருமானை பாடியுள்ளார்.

     பேரூர் பழமையாதலின் புதிய ஊர் பேரூருக்கு கிழக்கிலே தோன்றலானது.

    இவ்வாறு கிழக்கே தோன்றிய இந்த புத்தூரை கோவன் என்ற இருளர் தலைவன், "காடு திருத்தி நாடு" செய்தபோது

    உண்டான காரணத்தால், கோவன் புத்தூர் என பெயர் பெற்றதாகவும் பின்னர் நாளடைவில் இதுவே

    கோயமுத்தூர் எனவும் கோயம்புத்தூர் எனவும் மருவிற்று என்பர்.

    • தை- தைப்பூச விழா 10 நாட்கள் நடைபெறும். தேர் திருவிழா- முருகன்- வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்
    • வைகாசி- வைகாசி விசாகம்

    மருதமலை கோவிலில் ஆண்டு முழுவதும் முருகப் பெருமானுக்கு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சித்திரை - தமிழ் வருட பிறப்பு

    வைகாசி- வைகாசி விசாகம்

    ஆடி-ஆடி கிருத்திகை, ஆடி18

    ஆவணி-விநாயகர் சதுர்த்தி

    புரட்டாசி- நவராத்திரி

    ஐப்பசி-கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் விழா 7 நாட்கள் நடைபெறும், திருக்கல்யாணம்

    கார்த்திகை- கார்த்திகை தீபம்

    மார்கழி- தனூர் மாதம் பூஜை (ஜனவரி - ஆங்கில புத்தாண்டு)

    தை- தைப்பூச விழா 10 நாட்கள் நடைபெறும். தேர் திருவிழா- முருகன்- வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

    மாசி- சிவராத்திரி

    பங்குனி- பங்குனி உத்திரம். பங்குனி மாத ரோகிணி நட்சத்திரத்தில் கும்பாபிஷேக விழா

    • இந்த மரம் வேறு எங்கும் காண கிடைக்காத அபூர்வமான ஒன்றாகும்.
    • இந்த மரத்தடியில் விநாயகர் சிலை ஒன்று உள்ளது.

    5 மரங்கள் ஒன்றாக பின்னி பிணைந்து வளர்ந்த அழகிய பழமையான மரம் ஒன்று ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது.

    இந்த மரத்தடியில் விநாயகர் சிலை ஒன்று உள்ளது.

    இந்த மரத்தின் காற்று எல்லா நோய்களையும் தீர்க்கவல்லது என்றும் பல முனிவர்கள் இன்றும் கண்களுக்கு தெரியாமல் மரத்தில் தவம் செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    இந்த மரம் வேறு எங்கும் காண கிடைக்காத அபூர்வமான ஒன்றாகும்.

    இந்த மரம் நெடுங்காலமாக உள்ளது. இதன் வயது கணக்கிட முடியவில்லை.

    இந்த மரத்தின் இணைந்த மரங்கள் குறித்து இந்த மலையில் புராதனமாக வாழும் இருளர்கள் கூறும் போது, "கொரக்கட்டை, இச்சி, ஆலமரம், வக்கணை மரம் மற்றும் ஒட்டுமரம் ஆகிய 5 மரங்கள் தற்போது உள்ளது" என தெரிவித்தனர்.

    • கற்கள் மீது கற்கள் வைத்து வழிபட்டால் முருகப்பெருமான் கருணை தம் மீது விழும்.
    • மருதமலை முருகன் கோவிலுக்கு வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு உள்ளது.

    மருதமலை முருகன் கோவிலுக்கு வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு உள்ளது.

    மருதமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள்.

    அந்தளவுக்கு முருகப் பெருமான் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைக்கிறார்.

    புதுவீட்டில் குடியேறலாம்

    குறிப்பாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையடிவார படிக்கட்டுகளில் இருந்து கற்கள் மேல் கற்கள் வைத்து அடுக்கி கொண்டு வழிபட்டு செல்கிறார்கள்.

    அதென்ன.. புதுவித வழிபாடாக உள்ளதே? என்று கேட்கிறீர்களா.!

    ஆம்! கற்கள் மீது கற்கள் வைத்து வழிபட்டால் முருகப்பெருமான் கருணை தம் மீது விழும்.

    இதனால் கற்களை எப்படி பக்தர்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்தார்களோ, அதுபோல் புது வீடு கட்டி குடியேறுவார்கள் என்று இன்றளவும் பக்த கோடிகளால் நம்பப்பட்டு வருகிறது.

    மருதமலை முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகிறார்கள்.

    இங்கு முருகப் பெருமானை மனமுருக வேண்டி படிக்கட்டுகளில் கற்களை அடுக்கி வைத்து வழிபட்டு செல்கிறார்கள்.

    இதனால் பக்தர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து முருகப்பெருமான் நிவர்த்தி செய்கிறார்.

    விரைவிலேயே பக்தர்கள் வேண்டிய வரங்களை அளித்து அவர்களின் வாழ்க்கையில் செல்வத்தை வாரி வழங்குகிறார் என்பது ஐதீகம்.

    • நீண்ட வேலோடு உலகைக் காக்கும் மருதாசல மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினார்க்கு வரத்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே!

    இயற்கையழகுமிகு மலைகளுக்கிடையில் இதயம் போல காட்சியளிக்கும் அழகிய மலைக்கோவிலாம் மருதமலை இதயத்தை ஈர்க்கிறது.

    பேரெழில் வாய்ந்த முருகப்பெருமானின் பேரழகைக் கச்சியப்ப முனிவர்,

    'ஆயிரங்கோடி காமர் அழகெல்லாம் திரண்டு எழுந்த மேயின எனினும் செவ்வேள் விமலமாற் சரணந்தன்னில் தூய நல்லெழிலுக்கு ஆற்றாது என்றிடில் இணைய தொல்லோன் மாயிருவடிவிற்கெல்லாம் உவமையார் விடுக்க வல்லார்',

    என்று பாடுவார்.

    அதே போல் இத்திருக் கோவிலில் மருதமலையான், சிரசில் கண்டிகையுடனும், பின் பக்கம் குடுமியுடனும், கோவணங்கொண்டு, வலது திருக்கரத்தில் ஞானத்தண்டேந்தி,

    இடது திருக்கரத்தை இடையில் அமைத்து வினைகளை வேரறுத்து யமன் பயம் தீர்த்து உண்மையறிவை அறியச் செய்யும் நீண்ட வேலோடு உலகைக் காக்கும் மருதாசல மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினார்க்கு வரத்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே!

    • மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றனுள் மூன்றாவதாக உள்ளது தீர்த்தம்.
    • இத்தலத்தின் தீர்த்தங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றனுள் மூன்றாவதாக உள்ளது தீர்த்தம்.

    நம் நாட்டில் விளங்கும் புனிதமுடைய பற்பல கிணறு, குளம், ஆறு, கடற்கரை இவையாவும் சிமயத்தன்மை பெற்றிருப்பதால் நீராடியோரது உடற்பிணியையும், பிறவிப்பிணியையும் அவை போக்குகின்றன.

    இதனை திருநாவுக்கரசர், 'சென்ற நாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே' என்கிறார்.

    இத்தலத்தின் தீர்த்தங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை.

    அவை....மருததீர்த்தம், கன்னி தீர்த்தம், கந்த தீர்த்தம் என்னும் தெய்வத்தன்மை மிக்க மூன்று தீர்த்தங்கள் உள்ளன.

    இத்தீர்த்தங்களில் நீராடுவோர்க்குச் செல்வங்கள் பெருகும் எனவும், உடற்பிணி நீங்குமெனவும் திருத்துடிசைப் புராணம் கூறுகிறது.

    • கல்யாண உற்சவம் நடத்தினால் கட்டாயம் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
    • அமெரிக்கா, மலேசியா, நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற தலங்களில் மருதமலை முருகன் கோவிலும் ஒன்றாகும்.

    இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கிறார்கள்.

    முருகனை மனமுறுகி வேண்டினால் வேண்டும் வரத்தை தந்தருளுவார் என்பதால் தமிழகம் மட்டுமின்றி

    அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் திருமணத் தடை ஏற்படுவோர் இக்கோவிலில் சுவாமிக்கு பொட்டுத்தாலி, வஸ்திரம் வைத்து

    கல்யாண உற்சவம் நடத்தினால் கட்டாயம் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

    குழந்தை இல்லாத தம்பதியினர் 5 வாரம் வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்தாலும்

    சஷ்டி தோறும் விரதம் இருந்து மருதாசல மூர்த்தியை வழிபட்டாலும் நிச்சயம் முருகனின் அருள் கிடைக்கும் என்பதும் தொன்று தொட்டு இருந்து வரும் ஐதீகமாகும்.

    • மலைச்சாரலில் மூன்று கற்கள் மாறுபட்ட நிறத்தோடு இருப்பதைக் காணலாம்.
    • இம்மூன்று கற்களும் சிலையாய் போன திருடர்கள் என்பர்.

    பதினெட்டாம்படி கடந்து மேல் சென்றால் மலைச்சாரலில் மூன்று கற்கள் மாறுபட்ட நிறத்தோடு இருப்பதைக் காணலாம்.

    இம்மூன்று கற்களும் சிலையாய் போன திருடர்கள் என்பர்.

    முருகனடியார்கள் கோவில் திருப்பணி நடந்த போது பொன்னையும், பொருளையும் உண்டியலில் போட,

    இதை கண்ட மூன்று கள்வர்கள் ஒருநாள் இரவில் உண்டியலை உடைத்து பொன்னையும், பொருளையும் களவாடி மலைச்சரிவு வழியாக சென்றனர்.

    முருகப்பெருமான் குதிரை வீரனைப்போல சென்று அவர்களைப் பிடித்து, "நீவிர் கற்சிலைகளாகக் கடவீர்" எனச் சபித்ததால் அம்மூன்று கள்வர்களும் கற்சிலைகளாக நிற்பதாகச் செவி வழிச் செய்தி கூறுகின்றது.

    ×