search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கோனியம்மன் ஆலயத் தோற்றம்
    X

    கோனியம்மன் ஆலயத் தோற்றம்

    • பெயர் பெற்ற கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.
    • மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.

    பெயர் பெற்ற கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.

    நமது செந்தமிழ்நாட்டிலே ஓரிடத்தில் பத்து குடிசைகள் சேர்ந்தாற்போல் அமைந்தாலும்,

    அந்த இடத்தில் ஒரு மண்மேடை கட்டி அதன் மீது கூரை வேய்ந்து நடுவில் மண் திட்டில் ஓர் பிம்பத்தை அமைத்து,

    தெய்வமாக தொழுவதும், அரசும்,வேம்பும் சேர்ந்து மரமாக வளர்ந்த நிழலில் கல்நட்டு தெய்வமாக வழிபடுவதும்

    நம் முன்னோர் வகுத்த வழியாகும்.

    இவ்வாறு தான், காடு திருத்தி மக்கள் வாழும் நிலமாக பண்படுத்தியபோது இருளர் தலைவனான கோவன்

    தங்கள் குடிசைக்கருகில் வடபாகத்தில் சிறு கோயிலொன்றெடுத்து ஒரு கல் நட்டு,

    அவனும் அவன் இனத்தார்களும் குலதெய்வமென வழிபட்டு, விழாசெய்தும் கொண்டாடினார்கள்.

    இக்கோவில் கோயம்புத்தூருக்கு வடக்கில் துடியலூருக்கு செல்லும் வழியில்,

    சங்கனூர் பள்ளத்தருகே இருந்து பாழடைந்தது.

    மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.

    பல்லாண்டுக்கு பின் இளங்கோசர் கொங்கு நாட்டினை ஆண்ட காலத்தில் சேரர் படையெடுத்தால் தடுக்க,

    ஒரு மண்கோட்டையையும், மேட்டையும் புதிதாக கோவன் புத்தூரிலே கோசர்கள் கட்டினார்கள்.

    அங்ஙனம் கட்டிய கோட்டைக்கு காப்பு தெய்வமாகவும் தன் பெயர் விளங்கும் வண்ணமும் சிறுகோவிலொன்றெடுத்து

    அதில் வைத்து வணங்கிய தெய்வத்துக்கு கோனியம்மன் என பெயரிட்டு கோவில் கொள்ள செய்தனர்.

    அக்கோயிலே தற்போது கோவை மாநகரின் நடுவில் விளங்கும் கோனியம்மன் கோவில் ஆகும்.


    Next Story
    ×