search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அருள் உள்ளம் கொண்டு காத்தருளும் அம்பாள்
    X

    அருள் உள்ளம் கொண்டு காத்தருளும் அம்பாள்

    • மகிஷாசுவர்த்தனி நமது கோவை மாநகரில் கோனியம்மன் என்று பெயர் பெற்று விளங்குகிறாள்.
    • தன்னை அன்புடன் பணிவோரை அருள் உள்ளம் கொண்டு காத்து வருகின்றாள்.

    கனிந்த உள்ளமும் கருணைக்குணமும் படைத்து அருள் வடிவு தாங்கிய அன்னை பராசக்தியின் போர்முக வடிவான

    துர்க்காதேவி கோட்டைகளில் காவல் தெய்வங்களாக விளங்குவதோடன்றி எவரும் கும்பிட்டு தொழுதெழும்

    கோவில் தெய்வங்களாகவும் விளங்கி தம்மை வழிபடும் அன்பர்கள் அனைவருக்கும்

    வேண்டியன வேண்டியவாறே விரைந்தளிக்கும் வித்தக செல்வியாகவும் ஆனதால்,

    சிதம்பரத்தில் தில்லை காளியாகவும், தொண்டை நாட்டு திருவாலங்காடு மற்றும் கல்கத்தாவில் (காளி கோட்டம்) காட்சிமிக்க காளிதேவியாகவும், மும்பாயில் மொம்பாதேவியாகவும்,

    அண்மை மாவட்டமாகிய ஈரோட்டில் பண்ணாரி மாரியம்மனாகவும் பெயரும் புகழும் பரவி விளங்குவது போல,

    மகிஷாசுவர்த்தனி நமது கோவை மாநகரில் கோனியம்மன் என்று பெயர் பெற்று பெருமையுடன் விளங்குகிறாள்.

    முன்பு ஒரு சிலர் வழிபடும் தெய்வமாக இருந்த கோனியம்மன்,

    ஊர் முழுவதும் ஒருங்கே கூடி கொண்டாடும் நகர் தெய்வமாக பெருமை சிறந்து விளங்குகிறாள் இன்று.

    தன்னை அன்புடன் பணிவோரை அருள் உள்ளம் கொண்டு பல்லாண்டுகளாய் காத்து வருகின்றாள்.

    இதனால் இன்றும் நோய் வந்தாலும், வைசூரி, காலரா போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டாலும்

    கோனித்தாயை நம்பி அவள் திருவடிகளே துணை என்று நம்பி பூசிப்போர்

    மாவிளக்கேற்றியும் பொங்கற்படையலிட்டும், அகங்குளிர அபிஷேக ஆராதனை புரிந்தும்,

    கும்பம் தாளித்து கொண்டாடியும் காணிக்கை செலுத்தியும் வருவதனால் பல நன்மைகளை அடைகின்றனர்.

    Next Story
    ×