search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Pinarayi Vijayan"

    கேரளாவில் சமீபத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது.

    திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. எனவே 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன.

    இதுவரை 97 பேர் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கேரளாவில் சமீபத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கேரளாவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலியானோரின் எண்ணிக்கை 97ல் இருந்து 164 ஆக அதிகரித்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    மீட்பு பணிக்காக கூடுதலாக இந்திய கடற்படைக்கு சொந்தமான 4 கப்பல்கள் கொச்சி வந்துள்ளது. இந்த மீட்புக்குழுவில் இந்த கப்பலில் வந்த கடற்படையினரும் இணைய உள்ளனர். நிவாரணப் பொருட்களும் கப்பல் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaRain #PinarayiVijayan
    கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை நூறை நெருங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KeralalRain #Keralafloods
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

    மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 72 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

    இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவாலும் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.



    இன்று ஒரே நாளில் 30க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இன்று மலப்புரம் மாவட்டத்தில் வீடு இடிந்ததில் 8 பேர் பலியாகினர். பத்தனம்திட்டா, கண்ணூர், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, இடுக்கி, எர்ணாகுளம் உள்பட பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பில் சிக்கி 30-க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்று காலை 8.30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை கேரளாவில் மிதமிஞ்சிய மழை பெய்யும் என்றும் நாளை (17-ந் தேதி) காலை 8.30 மணி முதல் 19-ந் தேதி காலை 8.30 மணி வரை பலத்த காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்று  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.

    கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் சென்று பார்வையிட்டார். முதல் கட்டமாக கேரள வெள்ள பாதிப்புக்கு ரூ.100 கோடி நிதி உதவியையும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

    மேலும், கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். #KeralaRain #Keralafloods
    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக ஒடிசா மாநில அரசு இன்று 5 கோடி ரூபாயை இன்று வழங்கியுள்ளது. #KeralalRain #Keralafloods #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

    மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 72 பேர் பலியாகியுள்ளனர்.

    வெள்ளம் பாதிப்பு அடைந்த கேரளா மாநிலத்துக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிவாரணம் அளித்துள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்கள் நிவாரண தொகை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் 5 கோடி ரூபாய் அளித்து உத்தரவிட்டுள்ளார். 

    இது தொடர்பாக, நவீன் பட்நாயக் கேரளா முதல் மந்திரி பினராயி விஜயனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிவாரண நிதி அளிப்பது குறித்து பேசினார். மேலும், தேவைப்படும் உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார். #KeralalRain #Keralafloods ##NaveenPatnaik
    கேரளாவில் மீன் விற்று படித்துக்கொண்டிருக்கும் மாணவி ஹனன், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். #HananHamid #PinarayiVijayan #Cyberbullying
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் ஹனன் என்ற 21 வயது மாணவி, தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் பகுதி நேரமாக மீன் விற்று தனது அன்றாட செலவை சமாளிப்பதுடன், குடும்ப செலவிற்கும் உதவுகிறார். இவரது வாழ்க்கை தொடர்பாக மாத்ருபூமி நாளிதழில் சிறப்பு கட்டுரை வெளியானது. வீடியோவும் வெளியானது. இந்த கட்டுரை மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பரவிய நிலையில், பலரது ஆதரவையும் பாராட்டையும் பெற்றார். சிலர் உதவி செய்வதாகவும் உறுதி அளித்துள்ளனர்.



    அதேசமயம் ஒரு சிலர் இதை போலி செய்தி என்று கூறி தாறுமாறாக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யத் தொடங்கினர். பின்னர் அவர் படித்த கல்லூரியின் முதல்வரும், தெரிந்தவர்களும் ஹனன் குறித்து நாளிதழில் வந்த செய்தி உண்மைதான் என்று ஆதரவுக் கரம் நீட்டினர். இந்த விவாதம் நீண்டுகொண்டே சென்ற நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தனம் ஆகியோரும் மாணவிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில், மாணவி ஹனன் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, மாணவிக்கு அறிவுரைகள் வழங்கிய முதல்வர், அரசு சார்பில் அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதி அளித்தார்.

    இது தொடர்பாக பினராயி விஜயன் கூறும்போது, “அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு ஹனனை சந்தித்தேன். அவளது சிரித்த முகத்தைப் பார்த்தபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன். யாருடைய உதவியும் இன்றி படிப்பதற்கு முயற்சி எடுத்ததாக தகவல் வெளியான பிறகு, அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

    மாணவிக்கு தேவையான உதவிகள் செய்ய அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தவறாக விமர்சனம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே மாணவி என்னை சந்தித்தார். அவருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். #HananHamid #PinarayiVijayan #Cyberbullying
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையில் இருந்து லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #PinarayiVijayan #PetrolDiesel
    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 16 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 1 காசு மட்டுமே நேற்று குறைக்கப்பட்டது.

    இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையில் இருந்து லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆலோசனை நடந்தது. இதில், மாநில அரசு தனது விற்பனை வரியை குறைத்து கொள்வதென முடிவானது. 

    இதுதொடர்பாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், மாநிலத்தின் விற்பனை வரியை குறைப்பதன் மூலம் பெட்ரோல் டீசல் விலையில் ஒரு ரூபாய் குறையும். இது மக்களுக்கு ஓரளவு ஆறுதல் தரும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.

    தற்போது, கேரளாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 81.40 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 74.05 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. முதல் மந்திரியின் உத்தரவை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது. 
    #PinarayiVijayan #PetrolDiesel
    கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #PinarayiVijayan #Kamalhassan
    திருவனந்தபுரம்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக கேரள மாநிலம் கொச்சி சென்றார்.

    அங்கு பிற்பகலில் கேரள முதல் மந்திரி பினராய் விஜயனை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் அரசியல் பற்றியும், காவிரி பிரச்சினை குறித்தும் பேசினர்.

    ஏற்கனவே, நீட் தேர்வு எழுத கேரளா சென்ற தமிழக மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு உதவிகள் செய்ததற்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

    மேலும், கட்சி தொடங்கும் முன்பு பினராயி விஜயனை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து கட்சி தொடங்கி நடத்துவதற்கான ஆலோசனைகளை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. #PinarayiVijayan #Kamalhassan
    அரசு அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்குவதால் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல் மந்திரி எச்சரித்துள்ளார். #PinarayiVijayan #officialstakingbribes
    திருவனந்தபுரம்:

    அரசு அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்குவதால் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.

    கோழிக்கோடு பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், அரசு அதிகாரிகள் யார் லஞ்சம் வாங்கினாலும் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதைப்போன்ற சில அதிகாரிகளின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக அரசு இயந்திரத்துக்கே அவப்பெயரை எற்படுத்தி விடுகிறது.

    அவர்களின் தேவைக்கேற்ப, நியாயமான, கைநிறைய சம்பளம் தரப்படுகிறது, எனவே, அதற்கேற்ப கண்ணியமாக வாழ அவர்கள் கற்றுகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். #PinarayiVijayan #officialstakingbribes
    ×