search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleaners"

    • துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
    • தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் செயல்பட்டுவரும் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் தொண்டி சார்பில் தொண்டி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பெண்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    செயலாளர் முருகேசன், பேரூராட்சி மன்ற தலைவி ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பட்டய தலைவர் ஷேக் மஸ்தான் ராஜா வரவேற்றார். முன்னாள் துணை ஆளுநர் சண்முகம், முன்னாள் தலைவர் சிவராமகிருஷ்ணன், பொருளாளர் பாண்டி, ரஜினி பிரசாந்த், சீத்தாராமன், எல்லார்சி சீனிவாசன் செயல் அலுவலர் செல்வராஜ், மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாள ர்களுக்கும் மாதத்தின் முதல் தேதி அன்று ஊதியம் வழங்க வேண்டும். மலேரியா, டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தின ஊதியம் ரூ.707 ஆக வழங்க வேண்டும்.

    480 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மை பணி, குடிநீர் வழங்கல், தெருவி ளக்கு பராமரிப்பு ஆகிய வற்றை ஒப்பந்த முறையில் தனியார் இடம் கொடுக்க வகை செய்யும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியு றுத்தி கண்டன ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    • துப்புரவு பணியாளர்கள் 10 வாகனம் மூலம் தலா 5 பேர் என தனித்தனி குழுவாக பிரிந்து பயனற்ற பழைய டயர்களை அகற்றினர்.
    • மழை காலம் தொடங்குவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் வெளிப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    கும்பகோணம்:

    பருவமழை தொடங்கு வதை முன்னிட்டு, கும்பகோணம் மாநகராட்சி பகுதியிலுள்ள 48 வார்டு களிலும் ஒருங்கிணைந்த டெங்கு தடுப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதில், மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்து தெருக்கள் மற்றும் காலிமனைகளில் மாநகர் நல அலுவலர் பிரேமா தலைமையில் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 10 வாகனம் மூலம் தலா 5 பேர் என தனித்தனி குழுவாக பிரிந்து பயனற்ற பழைய டயர்களை அகற்றினர். அந்தவகையில் மொத்தம் 2 டன் எடையுள்ள டயர்கள் சேகரித்து அகற்றப்பட்டன.

    இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரேமா கூறுகையில், மழை காலம் தொடங்குவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் வெளிப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பழைய டயர்கள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்களை அகற்ற வேண்டும். அப்போது தான் டெங்கு போன்ற காய்ச்சல் வருவதை தடுக்க முடியும். வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி வரும் டிசம்பர் 11ஆம் தேதி வேலை நிறுத்தம் அதைத்தொடர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு சுகாதார நிலைய துப்புரவு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் கூறியதாவது:

    அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு செய்துள்ள தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை தமிழகம் முழுவதும் 2,500 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    தினசரி 12 மணி நேரம் பணியாற்றி வரும் இவர்களுக்கு வாரவிடுமுறையயோ பண்டிகை கால விடுமுறையோ வழங்கப்படுவதில்லை. அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் பணியாற்றிவரும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் டிசம்பர் 11ஆம் தேதி வேலை நிறுத்தம் மற்றும் அதைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது இதுகுறித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிரச்சார கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.

    இவர் அவர் கூறினார். #tamilnews
    கரூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டடனர்.
    கரூர்:

    கரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் தங்களுக்கு கூடுதலாக பணிசுமை கொடுக்கப்படுவதாகவும், துப்புரவு பணிகளை மேற்கொள்வதோடு மட்டும் அல்லாமல் மருத்துவமனை நர்சுகளுக்கு சிலர் ஊசி எடுத்து கொடுப்பது, நோயாளிகளுக்கு கட்டு போடுவது என்கிற வகையில் எங்களை வேலை வாங்குகின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு பணியை வரன்முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனை அதிகாரி மணிவாசகம் உள்ளிட்டோர் நேரில் வந்து அந்த பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், உங்களது குற்ற சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதியளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×