search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chris Gayle"

    வெஸ்ட்இண்டீஸ் வீரர் கெய்லுக்கு பேர்பேக்ஸ் நிறுவனம் ரூ.1.52 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #ChrisGayle #DefamationCase
    2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற வெஸ்ட்இண்டீஸ் அணியின் உதவி மசாஜ்தெரபிஸ்டாக பணியாற்றிய பெண், சிட்னியில் அந்த அணியினர் தங்கி இருந்த அறைக்குள் சென்ற போது கிறிஸ் கெய்ல் தான் உடுத்தி இருந்த துண்டை கழற்றி விட்டு இங்கு எதை பார்க்க வந்தாய்? என்று ஆபாசமாக பேசியதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேர்பேக்ஸ் மீடியா குழுமம் செய்தி வெளியிட்டது.

    இதனை அடுத்து கெய்ல், ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மெக்கல்லம் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் கெய்ல் மீது குற்றம்சாட்டி வெளியிட்ட செய்தியை உண்மை என்று நிரூபிக்கவில்லை என்று கடந்த அக்டோபர் மாதம் தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார். ஆனால் இழப்பீடு தொகை விவரம் வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில் இழப்பீடு தொகை நேற்று அறிவிக்கப்பட்டது. கெய்லுக்கு பேர்பேக்ஸ் நிறுவனம் ரூ.1.52 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக அப்பீல் செய்யப்போவதாக பேர்பேக்ஸ் மீடியா குழுமம் தெரிவித்துள்ளது. 
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் தனது கடைசி ‘லிஸ்ட் ஏ’ போட்டியை சதத்துடன் நிறைவு செய்துள்ளார். #ChrisGayle
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். டி20-யில் வாணவேடிக்கை நிகழ்த்தி ரசிகர்களை உற்சாகம் படுத்துவதால் இவரை ‘சிக்கர் மன்னன்’ என்றும், ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்றும் செல்லமாக அழைப்பதுண்டு.

    39 வயதாகும் இவர் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியான ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

    இவர் விளையாடும் ஜமைக்கா அணி நேற்று பார்படோஸ் அணியை ‘ரீஜினல் சூப்பர் 50’ தொடரில் எதிர்கொண்டது. இதுதான் கிறிஸ் கெய்லின் கடைசி போட்டியாகும். கடைசி போட்டி என்பதால் ஜமைக்கா அணியின் வழக்கமான கேப்டன் நிகிட்டா மில்லர் தனது பதவியை கெய்லிடம் கொடுத்தார். கெய்ல் களம் இறங்கியதும் இரு அணி வீரர்கள் அவருக்கு பிரியா விடை கொடுக்கும் வகையில் மரியாதை அளித்தனர்.



    இந்த போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய கிறிஸ் கெய்ல் 114 பந்தில் 122 ரனகள் விளாசினார். இவரது சதத்தால் ஜமைக்கா 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி உள்ளூர் ஒருநாள் போட்டியில் அசத்தல் சதத்துடன் கெய்ல் ஓய்வு பெற்றுள்ளார்.



    முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா 47.4 ஓவரில் 226 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பார்படோஸ் 193 ரன்னில் சுருண்டது. கிறிஸ் கெய்ல் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
    சிக்சர் மன்னன் என்று அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கிறிஸ் கெய்ல் இன்று 40-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். #ChrisGayle
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். 1999-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இடது கை பேட்ஸ்மேன் அன இவர், தனது அதிரடி பேட்டிங் மூலம் உலகளவில் பிரபலமானார்.

    டி20 லீக் தொடர் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் சிக்சர்களாக விளாசி ரசிகர்களை கவர்ந்தார். பெரும்பாலான டி20 லீக் தொடர் இவராலேயே புகழ்பெற்றது. இவரை சிக்சர் மன்னன் என்றும் யுனிவர்ஸ் பாஸ் என்றும் அழைப்பது உண்டு.

    1979-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி ஜமைக்கா கிங்ஸ்டனில் பிறந்த இவருக்கு இன்றுடன் 39 வயது பூர்த்தியாகிவிட்டது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் கிறிஸ் கெய்ல் 40-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கிறார்.



    வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 சதம், 37 அரைசதங்களுடன் 7214 ரன்கள் அடித்துள்ளார். 284 ஒருநாள் போட்டியில் 23 சதங்களுடன் 9727 ரன்கள் அடித்துள்ளார். 56 டி20-யில் 2 சதம், 13 அரைசதங்களுடன் 1607 ரன்கள் அடித்துள்ளார்.

    ஒட்டுமொத்தமாக 346 டி20 போட்டிகளில் 21 சதம், 71 அரைசதங்களுடன் 11737 ரன்கள் குவித்துள்ளார். உலகம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அணி கயானா அமேசானிடம் தோல்வியைத் தழுவியது. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக்கின் 19-வது ஆட்டம் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு செயின்ட் கிட்ஸில் நடைபெற்றது. இதில் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் - கயானா அமேசான் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கயானா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் கிறிஸ் கெய்ல், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் 22 பந்தில் 28 ரன்களும், கிறிஸ் கெய்ல் 27 பந்தில் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த அன்டோன் டேவ்சிச் 35 ரன்களும், பென் கட்டிங் 19 ரன்களும் அடிக்க செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. கயானா அணி சார்பில் இம்ரான் தாஹிர் 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.



    பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கயானா அமேசான் பேட்ரியாட்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் வெளியேற வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்வீர் 20 பந்தில் 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து கயானா அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் 6 போட்டிகளில் தலா 3 வெற்றி, தோல்வியின் மூலம் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. கயானா 6-ல் நான்கு வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது.
    கரிபியன் பிரீமியர் லீக்கில் பொல்லார்டு அணியை 69 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றி பெற்றது கிறிஸ் கெய்ல் அணி. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் செயின்ட் லூசியாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் - கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கிறிஸ் கெய்ல் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி களம் இறங்கியது. செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பொல்லார்டு அணி 12.3 ஓவர்கள் மட்டுமே விளையாடி 69 ரன்னில் சுருண்டது. செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் ஷெல்டன் காட்ரெல் 3 விக்கெட்டும், மெஹ்முதுல்லா, சந்தீப் லாமிச்சேன் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.


    தாமஸ்

    பின்னர் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் 7.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தல் அபார வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியின் மூலம் செயின்ட் லூசியா 6 போட்டியில் ஒரு வெற்றி, 5 தோல்விகளுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
    கரிபியன் பிரீமியர் லீக் கிறிஸ் கெய்லின் செயின்ட் கிட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அமேசான் வார்யர்ஸ் வீழ்த்தியது. #CPL2018 #Gayle
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் - சோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற சோயிப் மாலிக் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் கிறிஸ் கெய்ல் - எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    எவின் லெவிஸ் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் கிறிஸ் கெய்ல் வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 65 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 86 ரன்கள் குவித்தார். கெய்ல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களே சேர்த்தது.



    பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் 9, 0 ரன்னில் வெளியேறினாலும், அடுத்து வந்த ஷிம்ரோன் ஹெட்மையர் 45 பந்தில் ஆட்டமிழக்கால் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 79 ரன்கள் குவிக்க, கயானா 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    மூன்று நாட்கள் கொண்ட அபுதாபி டி20 லீக் தொடரில் சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் பங்கேற்க இருக்கிறார். #AbuDhabiT20League #ChrisGayle
    அபு தாபி கிரிக்கெட் சங்கம் மூன்று நாட்களே கொண்ட டி20 லீக் தொடரை நடத்துகிறது. முதன்முறையாக நடத்தப்படும் இந்த தொடர் வரும் அக்டோபர் மாதம் 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது. இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டி20 லீக்கில் விளையாடும் 6 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

    இந்த தொடரை நடத்த எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு மற்றும் ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து யார்க்‌ஷைர் விகிங்ஸ் அணியும், தென்ஆப்பிரிக்காவில் இருந்து மல்டிபிளை டைட்டன்ஸ் அணியும், ஆப்கானிஸ்தானில் இருந்து ஷ்பாகீசா லீக் அணியும், பாகிஸ்தானில் இருந்து லாகூர் குவாலண்டர்ஸ் அணியும், ஆஸ்திரேலியாவில் இருந்து ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் இடம்பிடித்துள்ளது.



    இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிக்சர் மன்னான கிறிஸ் கெய்ல், இங்கிலாந்தின் தைமல் மில்ஸ், கேரி பேலன்ஸ், பாகிஸ்தானின் யாசிர் ஷா, தென்ஆப்பிரிக்காவின் பெஹார்டியன், அல்பி மோர்கல் ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.
    இந்திய வீரர்கள் மற்ற டி20 லீக் தொடர்களிலும் விளையாட வேண்டும் என்று அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் விருப்பம் தெரிவித்துள்ளார். #ChrisGayle
    இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இதுபோன்று ஆஸ்திரேலியா பிக்பாஷ், வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் டி20 லீக், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்காள தேசம் வங்காளதேசம் பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகிறது.

    மற்ற நாட்சைச் சேர்ந்த வீரர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்ற டி20 லீக் தொடரில் விளையாட வீரர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை.

    இந்நிலையில் இந்தியாவில் திறமையான வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் வெளிநாட்டு டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் என்று டி20 ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் விருப்பம் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘இந்தியாவில் திறமையான வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு ஐபிஎல் தொடர் விளையாடு வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்கள் வெளிநாட்டில் நடைபெறும் லீக் தொடரில் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்.

    இதுபோன்ற வீரர்களுக்கு தேசிய அணியில் விளையாட இடம் கிடைக்கமாமல் போகிறது. இதனால் இந்திய அணியில் இடம்பிடிப்பது கடினமாகிறது. இதனால் மற்ற டி20 லீக்கில் ஆடினால் சர்வதேச அளவிற்கான அனுபவத்தை பெற முடியும்’’ என்றார்.
    ×