search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசத்தல் சதத்துடன் ‘லிஸ்ட் ஏ’ கேரியரை முடித்தார் கிறிஸ் கெய்ல்
    X

    அசத்தல் சதத்துடன் ‘லிஸ்ட் ஏ’ கேரியரை முடித்தார் கிறிஸ் கெய்ல்

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் தனது கடைசி ‘லிஸ்ட் ஏ’ போட்டியை சதத்துடன் நிறைவு செய்துள்ளார். #ChrisGayle
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். டி20-யில் வாணவேடிக்கை நிகழ்த்தி ரசிகர்களை உற்சாகம் படுத்துவதால் இவரை ‘சிக்கர் மன்னன்’ என்றும், ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்றும் செல்லமாக அழைப்பதுண்டு.

    39 வயதாகும் இவர் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியான ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

    இவர் விளையாடும் ஜமைக்கா அணி நேற்று பார்படோஸ் அணியை ‘ரீஜினல் சூப்பர் 50’ தொடரில் எதிர்கொண்டது. இதுதான் கிறிஸ் கெய்லின் கடைசி போட்டியாகும். கடைசி போட்டி என்பதால் ஜமைக்கா அணியின் வழக்கமான கேப்டன் நிகிட்டா மில்லர் தனது பதவியை கெய்லிடம் கொடுத்தார். கெய்ல் களம் இறங்கியதும் இரு அணி வீரர்கள் அவருக்கு பிரியா விடை கொடுக்கும் வகையில் மரியாதை அளித்தனர்.



    இந்த போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய கிறிஸ் கெய்ல் 114 பந்தில் 122 ரனகள் விளாசினார். இவரது சதத்தால் ஜமைக்கா 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி உள்ளூர் ஒருநாள் போட்டியில் அசத்தல் சதத்துடன் கெய்ல் ஓய்வு பெற்றுள்ளார்.



    முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா 47.4 ஓவரில் 226 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பார்படோஸ் 193 ரன்னில் சுருண்டது. கிறிஸ் கெய்ல் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
    Next Story
    ×