search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cell phone theft"

    பொள்ளாச்சி அருகே செல்போன் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    பொள்ளாச்சி அருகே உள்ள மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்தவர் தண்டபானி (வயது 63). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது இவருடைய ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வாலிபர் ஒருவர் ஜன்னல் வழியாக கையை விட்டு திருடி தப்பிச் செல்ல முயன்றார்.

    இதனை பார்த்த தண்டபானி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து கோட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் திண்டுக்கல் மாவட்டம் மரியநாதபுரத்தை சேர்ந்த ஆலன்ஜேம்ஸ் (20) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலத்தில் செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருப்பூர்:

    சேலம், சூரமங்கலத்தை அடுத்த சோளம்பள்ளத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32). இவர் திருவாக்கவுண்டனூரில் உள்ள ஒரு கடையில் யு.பி.எஸ் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு வேலையை முடித்துவிட்டு சோளம்பள்ளம் ஜங்சன் அருகே உள்ள தாரமங்கலம் ரோட்டில் தனது வீட்டிற்கு செல்போன் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் மின்னல் வேகத்தில் வந்த 2 பேர் விஜயக்குமாரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பித்து சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயக்குமார் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் எஸ்.ஐ. கேசவன் தாரமங்கலம் ரோட்டில் துரத்தி சென்று கே.ஆர்.தோப்பூர் அருகே அவர்கள் 2 பேரையும் பிடித்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 2 பேரும் தாதகாப்பட்டியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அவர்கள் ரமேஷ் கண்ணன் (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இது குறித்து எஸ்.ஐ. கேசவன் கூறும்போது, சமீபகாலமாக செல்போன் திருட்டு சேலத்தில் அதிகளவில் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

    இதனால் நாங்கள் செல்போன் திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம். பொதுமக்கள் ரோட்டில் செல்லும் போதோ அல்லது பஸ்சில் பயணம் செல்லும் போதோ பாதுகாப்பாக செல்போனை பயன்டுத்த வேண்டும் என்றார்.

    படூர் தொழிற்சாலையில் 68 செல்போன்கள் திருடிய காவலாளி மற்றும் 3 கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

    பெரம்பூர்:

    வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி 4 பேர் கும்பல் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உதவி கமி‌ஷனர் அழகேசன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் 4 பேரும் தப்பி ஓடினர்.

    உடனே 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது ஏராளமான செல் போன்கள் இருந்தது.

    விசாரணையில் அவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ்குமார், தாஸ், காதர் உசேன், பீர்முகமது என்பதும், இதில் சதீஷ்குமார் வெள்ளவேடு அடுத்த படூரில் உள்ள செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.

    சதீஷ்குமார் செல்போன்களை தொழிற் சாலையில் இருந்து திருடி வந்து விற்க முயற்சி செய்த போது போலீசில் சிக்கினார். இதையடுத்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் 4 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.

    ஜோலார்பேட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் செல்போன்கள் திருடு போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய தெருவில் வசிப்பவர் ரஞ்சன் (வயது 67). ரெயில்வே ஒய்வுபெற்ற ஊழியர். இவர் நேற்று இரவு வீட்டின் கதவை லேசாக சாத்தி விட்டு குடும்பத்துடன் மாடியில் படுத்து தூங்கினார்.

    அப்போது வீட்டினுள் நுழைந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த 4 செல்போன்களை திருடிச் சென்று விட்டனர்.

    மேலும் அடுத்தடுத்த வீடுகளான முகமது அலி என்பவர் வீட்டில் 3 செல்போனும், நாசர் என்பர் வீட்டில் 3 செல்போனும் உள்பட மொத்தம் 10 செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.

    இன்று அதிகாலை செல்போன்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த 3 பேரும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுத்தடுத்த வீடுகளில் செல்போன்கள் திருடு போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் அருகே ஓடும் பஸ்சில் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்த மணி என்பவரின் மகன் சாம்பசிவம்(வயது 26). இவர் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்காக அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் உள்ள ஒரு வாலிபர் சாம்பசிவத்திடம் இருந்து நைசாக செல்போனை எடுத்து அருகில் உள்ள அவர் நண்பரிடம் கொடுத்தார். அதை அருகில் உள்ள ஒருவர் பார்த்து சத்தம் போடவே 2 பேரையும் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில். சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா மகன் ஆனந்த்ராஜ்(21), தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த சுந்திர மூர்த்தி மகன் ரஞ்சித்(23) என்பது தெரியவந்தது. பின்னர் இவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×