search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caste"

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது மகள் மாற்று ஜாதி இளைஞரை காதலிப்பதை அறிந்த தந்தை, தனது மகளை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் ப் பிஹ்ரா பகுதியில் உள்ள தவுலத்ப்பூர் என்ற கிராமத்தில் வசிப்பவர் தட்டாராம். இவரது 21 வயது மகளான பூஜா வேற்று ஜாதி இளைஞரை பல நாட்களாக காதலித்து வந்துள்ளார். மேலும், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

    இதற்கு தட்டாராம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவே, பூஜா நீதிமன்றத்தை நாடியுள்ளார். தங்களுக்கு திருமணம் செய்துவைக்குமாறு பூஜா நீதிமன்றத்தில் மனு அளிக்க அதனை வாபஸ் பெருமாறும், காதலை கைவிடுமாறும் தந்தை தட்டாராம் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், பூஜாவின் பிடிவாதத்தால் ஆத்திரமடைந்த தட்டாராம், பூஜாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு தாமாக முன்வந்து காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுதொடர்பாக, பூஜாவின் தாயார் புகார் அளிக்கவே கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தட்டாராமை சிறையில் அடைத்துள்ளனர்.

    ஜாதி மோகம் அழிந்துவிட்டதாக இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகள் மார்தட்டிக் கொள்ளும் நிலையில், ஜாதி வெறியால் பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh
    தனது மகள்களை பள்ளியில் சேர்க்கும் போது ஜாதியை குறிப்பிடவில்லை என கமல்ஹாசன் ட்வீட் செய்திருந்தற்கு, அவரது மகள் ஸ்ருதியின் பழைய பேட்டி ஒன்றை முன்வைத்து நெட்டிசன்கள் கமலை விமர்சித்து வருகின்றனர். #KamalHaasan #ShrutiHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விக்கு பதிலளித்து ட்வீட் செய்தார். சாதியை ஒழிக்க என்ன யோசனையை முன்னெடுக்கின்றீர்கள்? என ஒருவர் கேட்டிருந்தார்.

    அதற்கு பதிலளித்து ட்வீட் செய்த அவர், “எனது இரு மகள்களையும் பள்ளியில் சேர்க்கும் போது அவர்களுக்கான விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுத்தேன். அடுத்த தலைமுறைக்கு ஜாதியை எடுத்துச் செல்லாமல் தவிர்க்க இதுவே வழி. அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும்” என தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய ஜாதியை குறிப்பிட்டு, நான் அந்த ஜாதியை சேர்ந்தவள் என பேசியிருப்பார். இந்த வீடியோவை பதிவிட்டு பலர் கமல்ஹாசனை கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.

    ‘பள்ளி விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுப்பது ஜாதியை ஒழிக்காது. ஜாதியை தெரியாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும்’ என பலர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தனது ஜாதியை பெருமையாக உங்களது மகள் குறிப்பிடுகிறார். இது எப்படி ஜாதியை ஒழிக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    உங்களை மிகவும் பாதித்த நூல் எது? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் ‘பூணூல்’ என பதிலளித்திருந்தார். இந்த பதிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    ×