search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case record"

    • விவசாய நிலம் அருகில் சோளம் பயிர் செய்து அறுவடை செய்துள்ள இடத்தில் நிரோஷாவின் பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன
    • இதைப்பார்த்து ஆத்தி ரமடைந்த சாமிகண்ணு தன்னிடம் இருந்த கொடுவாளால் மாடுகளின் வால் மற்றும் கால் பகுதியில் சரமாரியாக வெட்டினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிகண்ணு. இவரது மனைவி நிரோஷா (வயது 33). இவரும், இவரது கணவரும் 2 கறவை மாடுகள் வைத்து, கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதே ஊரை சோ்ந்த பிச்சன் மகன் சாமிகண்ணு என்பவரின் விவசாய நிலம் அருகில் சோளம் பயிர் செய்து அறுவடை செய்துள்ள இடத்தில் நிரோஷாவின் பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

    இதைப்பார்த்து ஆத்தி ரமடைந்த சாமிகண்ணு தன்னிடம் இருந்த கொடுவாளால் மாடுகளின் வால் மற்றும் கால் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதனால் ரத்தம் சொட்ட... சொட்ட... வலி தாங்க முடியாமல் மாடுகள் அலறின. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நிரோஷா, சாமிகண்ணுவிடம் தட்டிக் கேட்டபோது அவர் ஆபாசமாக திட்டி கொடுவாளை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் இது குறித்து நிரோஷா கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • போலீசார் வெங்கட்ராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    திருப்பதி

    ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், கோலிமி குண்ட்லா பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகன் 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராம்.

    இந்த நிலையில் கடந்த வாரம் இளம் பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்தனர். வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் மட்டும் தனியாக இருந்தார்.

    இதனை அறிந்த வெங்கட்ராம் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அப்போது மாற்றுத்திறனாளி இளம் பெண்ணே பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.

    இதற்கு மாற்றுத்திறனாளி பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை சரமாரியாக தாக்கி காலை உடைத்தார். மாற்றுத்திறனாளி பெண் வலியால் அலறி கூச்சலிட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்தபோது வெங்கட்ராம் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்து அங்கு இருந்தவர்கள் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டிற்கு வந்து படுகாயம் அடைந்த மகளை மீட்டு சர்வஜனா ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் நந்தியாலா போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க கூடாது என போலீசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட இளம் பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் எதிர்க்கட்சிகளுக்கு தெரிய வந்ததையடுத்து அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் வெங்கட்ராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    • பொது மக்கள் தாக்கியதில் ராஜேந்திரகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரகுமாரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை வடவள்ளியை அடுத்த காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண்.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் அந்த இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் குளியல் அறையின் அருகில் இருந்து ஓடுவதை பார்த்தனர்.

    உடனே பொதுமக்கள் அந்த வாலிபரை துரத்தி மடக்கி பிடித்தனர். அவர்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து பேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் காளம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரகுமார் (29) என்பதும், பிளம்பராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

    மேலும் ராஜேந்திரகுமார் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரகுமாரை கைது செய்தனர். பொது மக்கள் தாக்கியதில் ராஜேந்திரகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவரை சுண்டக்காமுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவெண்ணைநல்லூர் அருகே இளம் பெண் மாயமானார்.
    • புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து சத்யாவை தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே அருள் குறுக்கே பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் சத்தியா (வயது 19) இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சடைந்த வீட்டில் உள்ளவர்கள் சத்யாவை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வேலு திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து சத்யாவை தேடி வருகின்றனர்.

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து உரசியவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ம.பொ.சி நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சசிராஜன் (வயது 31). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் பஜார் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த புத்தூரை சேர்ந்த பிரைட், ராம், அன்பு ஆகியோர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் லேசாக உரசியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மேற்கண்ட 3 பேரும் சசிராஜனை தகாத வார்த்தையால் பேசி கையால் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக பிரைட், ராம், அன்பு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வகின்றனர்.
    குளித்தலை அருகே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    குளித்தலை:

    குளித்தலை அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தேக்கன் (வயது 60). இவர் குளித்தலை அருகே உள்ள நடுபட்டியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் வாங்கி அதை கணேசபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை தேக்கன் திருப்பி கேட்டபோது, ஆனந்த் தான் பணம் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக நடந்த தகராறில் ஆனந்த் அவரது மனைவி நதியா மற்றும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து தேக்கனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தேக்கன் அளித்த புகாரின் பேரில் ஆனந்த், நதியா, கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் குளித்தலை அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த கண்ணன், அவரது மகன் கார்த்திக் மற்றும் தேக்கன் ஆகிய 3 பேரும் ஆனந்த் மற்றும் நதியாவை தாக்கியதோடு அவர்களது ஓட்டலில் இருந்த உணவு பொருட்களை சேதப்படுத்தியதாக நதியா போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கண்ணன், கார்த்திக் மற்றும் தேக்கன் ஆகிய 3 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம் அருகே மது விற்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    அரிமளம் அருகே உள்ள ராயவரம் பகுதியில் அரிமளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்ற பீட்டர் (வயது 45) பிடிபட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து 13 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோடங்கிபட்டி அருகே உள்ள காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த பாரதிதாசன் நகரை சேர்ந்த சந்துரு (வயது 30) உள்பட 4 பேரும் போலீசாரை கண்டதும் தப்பியோடி விட்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
    தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் கணேஷ் (வயது 22). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று, இவரும் அஜித்குமார் என்பவரும் ராஜகணபதி நகர் பக்கமாக நடந்து சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கலைவாணன் என்கிற வேலு (20), பிரகாஷ் (20) ஆகிய 2 பேரும் அவர்களிடம் தகராறு செய்தனர். மேலும் கணேசையும், அஜித்குமாரையும் கைகளாலும், பாட்டிலாலும் தாக்கினர். இதில் காயம் அடைந்த கணேஷ், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், கலைவாணன் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    திருக்கோவிலூரில் ஜவுளிக்கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் சைலோம் பகுதியை சேர்ந்தவர் துக்காராம்(வயது 25). இவர் சம்பவத்தன்று திருக்கோவிலூர் வடக்கு வீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் புதிய ஜவுளிகளை வாங்கிவிட்டு, பில் போடுவதற்காக நின்றார். அப்போது துக்காராமுக்கும், பில் போடும் ஊழியருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைபார்த்த கடை உரிமையாளர் பாண்டியன் மற்றும் பாலு என்பவரும் தகராறை விலக்கி விட்டனர். அப்போது ஆத்திரமடைந்த துக்காராம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் உள்ளிட்ட 4 பேர் பாண்டியனையும், பாலுவையும் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் துக்காராம் உள்பட 4 பேர் மீது திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி குரூஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் வாங்கல் பகுதியை சேர்ந்தவர் நர்மதா (வயது 28). இவர் வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பாலசுப்ரமணியன் (40) என்பவருடன் எனக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்தநிலையில் கணவர் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரின் தந்தை சுந்தரம் (65), தாய் மருதாயி (60) ஆகியோர் வரதட்சணை கேட்டு மிரட்டி வருவதாக கூறினார். இதையடுத்து வரதட்சணை கேட்டு மிரட்டியதாக பாலசுப்ரமணியன் உள்பட 3 பேர் மீது வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கோவை மாவட்டத்தில் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 39 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சுற்றுசூழல் மாசுபாடு ஏற்படுவதை தடுக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை மீறி அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து பட்டாசு வெடித்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை மீறி கோவை புறநகர் மாவட்டத்தில் அனுதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக பெரியநாயக்கன் பாளையம் சப்-டிவிசனில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட் டனர். பேரூர் சப்-டிவிசனில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கருமத்தம்பட்டி சப்-டிவிசனில் 5 வழக்குகளும், பொள்ளாச்சி சப்-டிவிசனில் 4 வழக்குகளும், வால்பாறை சப்- டிவிசனில் 5 வழக்குகளும், மேட்டுப்பாளையம் சப்-டிவிசனில் 3 வழக்குகளும் என மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோவை மாநகரில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில மொத்தமாக 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×