search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cancellation"

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் நிறுவன உரிமம் ரத்து செய்யப்படும் என்று திருப்பூர் கலெக்டர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 20162 உணவு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 19004 நபர்கள் உரிமம்- பதிவு பெற்றுள்ளனர். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு பெற்ற பின்பே உணவுத் தொழில் புரிய வேண்டும். அவ்வாறு உரிமம், பதிவு பெறாதவர்கள் மீது பிரிவு 63, 55-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    உணவு பாதுகாப்பு துறையில், உணவின் தரம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது, கலப்பட டீத்தூள், போலி குடிநீர் நிறுவனங்கள், கலப்படம் மற்றும் போலி எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள்

    ஆகியவை குறித்து 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். அதன்மீது 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக புகையிலைப் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    தேர்தல் விதிகளை மீறியது தொடர்பாக குஷ்பு, வடிவேலு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. #Khushboo #Vadivelu
    மதுரை:

    கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியிலும், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியிலும் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். அப்போது அவர் தேர்தல் விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகள் அந்தந்த மாவட்ட கோர்ட்டுகளில் நடந்து வந்தன.

    இதேபோல நத்தம் தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகர் வடிவேலு மீதும் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

    தங்கள் மீது வேண்டுமென்றே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குஷ்பு, வடிவேலு ஆகிய இருவர் சார்பிலும் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தன. விசாரணை முடிவில், மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரம் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். #Khushboo #Vadivelu
    கோவையில் குட்கா ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    கோவை:

    கோவை கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த குட்கா ஆலையில் கடந்த 27-ந் தேதி போலீசார் சோதனை நடத்தினர்.

    அங்கிருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த ஆலையில் வாசனை பாக்குகள் தயாரிப்பதற்காக உணவு பாதுகாப்பு துறையில் அனுமதி வாங்கி இருப்பதும். வருகிற ஜூலை மாதம் வரை லைசென்சு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    கடந்த ஜனவரி மாதம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த ஆலையில் ஆய்வு நடத்தி உள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக எந்த பொருட்களும் இல்லை என சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் போலீஸ் சோதனையில் அங்கு குட்கா தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் அங்கு அதிகமாக இருந்ததால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு வரவழைத்து ஆய்வு நடத்தினர். இதில் அங்கு குட்கா தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சார்பில் குட்கா ஆலை நிர்வாகத்துக்கு ஒரு நோட்டீசு வழங்கப்பட்டது. அதற்கு எந்த பதிலும் வராத நிலையில் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்த ஆலையில் கடந்த 5 வருடங்களாக சட்டவிரோதமாக குட்கா தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலையில் இருந்து அதிகாரிகள் பலரும் மாமூல் வாங்கியதாகவும் தகவல்கள் வெளியானது.

    இதுகுறித்தும் துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே ஆலை மேலாளர் ரகுராமனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது. அதன்பேரில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஆலை உரிமையாளர் அமித் ஜெயினை கைது செய்வதற்காக டெல்லி சென்ற தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலாளர் ரகுராமனுக்கு கோர்ட்டு வழங்கிய போலீஸ் காவல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×