search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banned tobacco"

    • சோதனையின்போது பல கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • புகையிலை பொருட்களை விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. குறிப்பாக 20 ரூபாய் மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகளை மறைத்துவைத்து ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்து வந்தனர்.

    இதனைதொடர்ந்து ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் மாநகர் நல அலுவலர், துப்புரவு ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று பஸ்நிலையத்தில் அதிரடியாக அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின்போது பல கடைகளில் பான்பராக், கணேஷ், ஹான்ஸ் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிலோ கணக்கில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை தீ வைத்து அழித்தனர். மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபடும் கடை உரிமையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பஸ் நிலையத்தை போலவே திண்டுக்கல் புறநகர் பகுதிகளிலும், ரெயில்நிலைய பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. எனவே அதுபோன்ற பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    காவேரிபட்டணத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் காயத்ரி, விஜயசங்கர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கொசமேடு, பாலக்கோடு சாலையில் சென்ற போது தடை செய்யப்பட்ட பான்மசாலா விற்பனை செய்த காவேரிபட்டணத்தை அடுத்த ராம்சங்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் (வயது55), தொட்டிபாலம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (28), அரசமரத்தெருவை சேர்ந்த முருகன் (49) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 14 பாக்கெட் பான்மசாலாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் நிறுவன உரிமம் ரத்து செய்யப்படும் என்று திருப்பூர் கலெக்டர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 20162 உணவு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 19004 நபர்கள் உரிமம்- பதிவு பெற்றுள்ளனர். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு பெற்ற பின்பே உணவுத் தொழில் புரிய வேண்டும். அவ்வாறு உரிமம், பதிவு பெறாதவர்கள் மீது பிரிவு 63, 55-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    உணவு பாதுகாப்பு துறையில், உணவின் தரம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது, கலப்பட டீத்தூள், போலி குடிநீர் நிறுவனங்கள், கலப்படம் மற்றும் போலி எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள்

    ஆகியவை குறித்து 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். அதன்மீது 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக புகையிலைப் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×