search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல் - கடைகளுக்கு அபராதம்
    X

    புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்.

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல் - கடைகளுக்கு அபராதம்

    • சோதனையின்போது பல கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • புகையிலை பொருட்களை விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. குறிப்பாக 20 ரூபாய் மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகளை மறைத்துவைத்து ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்து வந்தனர்.

    இதனைதொடர்ந்து ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் மாநகர் நல அலுவலர், துப்புரவு ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று பஸ்நிலையத்தில் அதிரடியாக அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின்போது பல கடைகளில் பான்பராக், கணேஷ், ஹான்ஸ் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிலோ கணக்கில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை தீ வைத்து அழித்தனர். மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபடும் கடை உரிமையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பஸ் நிலையத்தை போலவே திண்டுக்கல் புறநகர் பகுதிகளிலும், ரெயில்நிலைய பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. எனவே அதுபோன்ற பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×