search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bundles"

    • திட்டு கிராமமக்கள் வசிக்க 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்.
    • 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

    சீர்காழி:

    மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நீர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு துறைமுகத்தை ஒட்டி வங்க கடலில் கலந்து வருகிறது.

    நேற்று காலை நிலவரப்படி 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே கடலுக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் சென்று கொண்டிருக்கும் நிலை இருந்து வந்தது.

    கொள்ளிடம் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்து வரும் சூழலில் ஆற்றில் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களில் மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டு முன்னெச்ச ரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் வீடுகளு க்கு நேரில் சென்று மேடான இடங்களில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் லலிதா நிருபர்களி டம் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் 1.85 லட்சம் கன அடி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அதிகப்படியான வெள்ள நீர் திறக்கப்பட்டுள்ளதால் படுகையில் உள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு கிராமங்கள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதால் 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

    ஆற்றின் கரையில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையை பலபடுத்தும் பணிகளுக்காக 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

    மீட்பு பணிக்காக தீயணைப்பு துறை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

    சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, மயிலாடுதுறை கீழ்க்காவிரி வடிநிலக்கோ ட்ட செயற்பொறியாளர் சண்முகம், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பி டி ஓ அருள்மொழி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், விஏஓ சங்கீதா மற்றும் அதிகாரிகள், பேரிடர் மீட்பு குழுவினர் உடன் இருந்தனர்.

    • குறைவான நெல் மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதால் நாட்கணக்கில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.
    • விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் கீழத்தெருவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்தீஸ்வரன் கோவில், எடக்குடி வடபாதி, மருவத்தூர், கரைமேடு, ஆலவேலி, சேமங்கலம், பாகசாலை, கொண்டத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை நெல் மூட்டைகளை கடந்த 15 நாட்களாக அடுக்கி வைத்து இரவு-பகலாக பாதுகாத்து வருகின்றனர். தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள் இந்த கொள்முதல் நிலையத்தில் தினமும் மிகக் குறைவான நெல் மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகள் நாட்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் கொள்ளப்படாததால் சுமார் 15 நாட்களாக தேங்கிக் கிடக்கிறது.

    நெல்மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சேதப்படுத்தி வருகின்றன.

    இதன் காரணமாக விவசாயிகள் இரவு அங்கேயே தங்கி நெல்லை பாதுகாத்து வருகின்றனர்.

    உடனுக்குடன் கொள்முதல் மேலும் திடீர், திடீரென மழை வருவதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விடுகின்றன. அவற்றை மீண்டும் வெயிலில் காய வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இதனால், விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஆகவே, இந்த கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல்லை உடனே கொள்முதல் செய்யவும், கொண்டு வரப்படும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை பட்டுவாடா செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி போன்ற நெல்விதை மூட்டைகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கினார்.
    • கடவாசல், எருக்கூர் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கட்டிடங்களையும் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் புதிதாக ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட திறப்பு விழா வேளாண்மைஇணை இயக்குனர் சேகர் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், துணை தலைவர் அன்புசெழியன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து நெல்ஜெயராமன் மரபுசார் பாரம்பரிய விதை ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி போன்ற நெல்விதை மூட்டைகள் மானிய விலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு முதல்கட்டமாக வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

    இதில் வேளாண் அலுவலர் சுப்பராயன், உதவிஅலுவலர்கள் ராமலிங்கம் மற்றும் தி.மு.க. இளைஞரணி ஒன்றியஅமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடவாசல், எருக்கூர் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கட்டிடங்களையும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    • எம்.ஜி.ஆர். சிலை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • அரிசி மூட்டைகளை திருக்குவளையில் உள்ள குடோனுக்கு நுகர்பொருள் வணிப கழக அதிகாரி ஏற்றிச்சென்றுவிட்டார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வானவன் மகாதேவி மீனவர் காலனியை சேர்ந்தவர் விஜய் (வயது 22). இவர் கடந்த 29-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த தனது உறவினர் சத்தியமாலா (28) என்பவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு நாகைக்கு சென்றுள்ளார்.

    அப்போது, விழுந்தமாவடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த சத்தியமாலாவை சிகிச்சைக்கு நாகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து வேட்டைகாரணிருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    மேலும், தப்பிய லாரி டிரைவர் ஜெகதீசனை தேடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை போலீஸ் நிலையத்தில் நிறுத்திவைத்திருந்த லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை திருக்குவளையில் உள்ள குடோனுக்கு நுகர்பொருள் வணிப கழக அதிகாரி ஏற்றி சென்றுவிட்டார்.

    இதையறிந்து விபத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்யக்கோரி வேட்டைகாரணிருப்பு போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லாரி டிரைவரை கைது செய்வதாக உறுதியளித்தின் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.

    இதனால், நாகை- வேதாரண்யம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    • தவுடு மூட்டைகளை இறக்கிய போது தவறி விழுந்து தலையில் அடிபட்டு மயங்கினார்.
    • சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 72). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் வடுகபாளையம் புதூரில் இருந்து தவுடு லோடு ஏற்றி கொண்டு தாளவாடிக்கு சரக்கு வேனில் சென்றார். வேனை அப்துல் பாசித்து என்பவர் ஓட்டி சென்றார்.

    தாளவாடி கொங்கள்ளி ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் முன்பு சரக்கு வேனை நிறுத்தி அதில் இருந்து சுப்பிரமணியம் தவுடு மூட்டைகளை இறக்கி கொண்டு இருந்தார்.

    அப்போது அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் அவருக்கு பின் தலையில் அடிப்பட்டு மயங்கி விழுந்தார்.

    அவருடன் வந்தவர்கள் அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×