search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wretchedness"

    • எம்.ஜி.ஆர். சிலை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • அரிசி மூட்டைகளை திருக்குவளையில் உள்ள குடோனுக்கு நுகர்பொருள் வணிப கழக அதிகாரி ஏற்றிச்சென்றுவிட்டார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வானவன் மகாதேவி மீனவர் காலனியை சேர்ந்தவர் விஜய் (வயது 22). இவர் கடந்த 29-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த தனது உறவினர் சத்தியமாலா (28) என்பவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு நாகைக்கு சென்றுள்ளார்.

    அப்போது, விழுந்தமாவடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த சத்தியமாலாவை சிகிச்சைக்கு நாகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து வேட்டைகாரணிருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    மேலும், தப்பிய லாரி டிரைவர் ஜெகதீசனை தேடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை போலீஸ் நிலையத்தில் நிறுத்திவைத்திருந்த லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை திருக்குவளையில் உள்ள குடோனுக்கு நுகர்பொருள் வணிப கழக அதிகாரி ஏற்றி சென்றுவிட்டார்.

    இதையறிந்து விபத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்யக்கோரி வேட்டைகாரணிருப்பு போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லாரி டிரைவரை கைது செய்வதாக உறுதியளித்தின் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.

    இதனால், நாகை- வேதாரண்யம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    ×