search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல்விதைகள்- எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    பாரம்பரிய நெல்விதைகளை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. விவசாயிகளுக்கு வழங்கினார்.

    விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல்விதைகள்- எம்.எல்.ஏ. வழங்கினார்

    • மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி போன்ற நெல்விதை மூட்டைகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கினார்.
    • கடவாசல், எருக்கூர் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கட்டிடங்களையும் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் புதிதாக ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட திறப்பு விழா வேளாண்மைஇணை இயக்குனர் சேகர் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், துணை தலைவர் அன்புசெழியன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து நெல்ஜெயராமன் மரபுசார் பாரம்பரிய விதை ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி போன்ற நெல்விதை மூட்டைகள் மானிய விலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு முதல்கட்டமாக வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

    இதில் வேளாண் அலுவலர் சுப்பராயன், உதவிஅலுவலர்கள் ராமலிங்கம் மற்றும் தி.மு.க. இளைஞரணி ஒன்றியஅமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடவாசல், எருக்கூர் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கட்டிடங்களையும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    Next Story
    ×