search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bomb blast"

    • பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • இதில் 23 சிறுவர்கள் உள்பட 54 பேர் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

    கராச்சி:

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

    இந்த பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாவும், பெஷாவர் மற்றும் டைமர்கெராவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியானது.

    இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், கைபர் பக்துன்வா குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

    • மனித குண்டு வெடிப்பு மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
    • பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.

    மேலும் 80 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    மனித குண்டு வெடிப்பு மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    • பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அரசியல் கட்சி கூட்டம் நடைபெற்றது.
    • அப்போது நடந்த குண்டுவெடிப்பில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 80 பேர் காயமடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    மனித குண்டு வெடிப்பு மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்து 20 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பெஷாவர் நகரின் ரிங் ரோட்டில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
    • குண்டு வெடிப்பில் 200 கிராம் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (ஐஇடி) பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.

    பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் மாகாண தலைநகரில் நேற்று ஒருவரின் மோட்டார்சைக்கிள் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது.

    மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பெஷாவர் நகரின் ரிங் ரோட்டில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

    வெடிகுண்டு செயலிழப்பு குழுவின் அறிக்கையின்படி, "குண்டு வெடிப்பில் 200 கிராம் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (ஐஇடி) பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    • பொற்கோவிலுக்கு அருகே அடுத்தடுத்து மர்ம பொருட்கள் வெடித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து தடயவியல் மாதிரிகளை சேகரித்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அருகே நேற்று நள்ளிரவு 12 மணியவில் மீண்டும் மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    தகவலறிந்து போலீஸ் கமிஷனர் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சனிக்கிழமை இரவு மர்ம பொருள் வெடித்ததில் சில கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதில் ஒருவர் காயமடைந்தது. இந்நிலையில், பொற்கோவிலுக்கு அருகே அடுத்தடுத்து மர்ம பொருட்கள் வெடித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பஞ்சாப் போலீசார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து தடயவியல் மாதிரிகளை சேகரித்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குண்டு வெடிப்பில் சம்பவத்தில், துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு.
    • போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு வெடிக்காமல் கிடந்து, தற்போது வெடித்துள்ளதா? என விசாரணை.

    லடாக் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட கர்பதங் என்ற பகுதியில் நேற்று சில சிறுவர்கள் வயல்வெளியில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கே கிடந்த பழமையான வெடிகுண்டு ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில் 13 வயது சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் கார்கிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடந்தது. அந்த போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு வெடிக்காமல் கிடந்து, தற்போது வெடித்துள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே சம்பவ பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் இதைப்போன்ற வெடிகுண்டுகள் மற்றும் தளவாடங்கள் வேறு ஏதேனும உள்ளனவா? என்று ஆய்வு செய்யப்படும் என லடாக் துணைநிலை கவர்னர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • ரெயிலில் வேறு எங்காவது வெடி குண்டு இருக்கிறதா என்று சோதனை நடந்தது.

    பாகிஸ்தானில் குவெட்டரில் இருந்து லாகூருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. அந்த ரெயில் பஞ்சாப் மாகாணம் சிச்சாவட்னி என்ற இடத்தில் சென்றபோது ஒரு பெட்டியில் குண்டு வெடித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறினார்கள். உடனே அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. குண்டுவெடிப்பில் ஒரு பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குண்டுவெடிப்பில் ரெயில் பெட்டி கடுமையாக சேதமடைந்தது. ரெயிலில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டார்கள். ரெயிலில் வேறு எங்காவது வெடி குண்டு இருக்கிறதா என்று சோதனை நடந்தது.

    • மசூதி தாக்குதலில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
    • பெஷாவரில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று முன்தினம் மதியம் முஸ்ஸிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

    காவல் துறையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடந்த 18 மணி நேரமாக மீட்புப் பணிகள் நடந்து வரும் சூழலில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மசூதி தாக்குதலில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் அதிகமானவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பெஷாவரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பெஷாவரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு இந்தியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பலரின் உயிரைப் பறித்த இந்தத் தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

    • குண்டுகள் வெடித்ததில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் உடல் சிதறி பலியானார்கள்.
    • காயமடைந்த ஏராளமானோர் பெஷாவரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டனர்.

    பாகிஸ்தானின் பெஷாவரில் உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் நேற்று மதியம் போலீசார், ராணுவ வீரர்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திடீரென தற்கொலை படை பயங்கரவாதி ஒருவன் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

    மேலும் குண்டுகள் வெடித்ததில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் உடல் சிதறி பலியானார்கள். இந்த தாக்குதலில் 46 பேர் பலியானதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே காயமடைந்த ஏராளமானோர் பெஷாவரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் இறந்துள்ளனர். இன்று காலை பலி எண்ணிக்கை 83 ஆக  இருந்தது. அதன்பின்னர் 17 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    • பெஷாவர் குண்டுவெடிப்பில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
    • இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளான்.

    இந்த தாக்குதலில் மசூதி கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 17 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. அதேசமயம் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டனர்.

    மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 150க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பின் முக்கிய கமாண்டர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கை

    பெஷாவர்:

    பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பலத்த பாதுகாப்பு மிக்க பகுதியில் உள்ள மசூதியில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பிற்பகல் தொழுகையின்போது தற்கொலைப்படை தீவிரவாதி இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளான். இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். மசூதியின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 17 பேர் உயிரிழந்த நிலையில், நேரம் செல்லச் செல்ல உயிரிழப்பு அதிகரித்தது. இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அந்த அமைப்பின் முக்கிய கமாண்டர் உமர் காலித் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவனது சகோதரன் கூறியிருக்கிறான்.

    • பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில் மசூதியின் ஒரு பகுதி பயங்கர சேதமடைந்தது.
    • மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 பேர் படுகாயமடைந்தனர்.

    பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில் மசூதியின் ஒரு பகுதி பயங்கர சேதமடைந்தது.

    இந்நிலையில், மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதற்காக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    மேலும் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    ×