search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arindam Bagchi"

    • கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தை வெளியுறவுத்துறை கவனித்து வருகிறது.
    • அவர்களுக்கு தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் விரிவுபடுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:

    இதுவரை 2 விசாரணைகள் நடந்துள்ளன. குடும்பத்தினரிடம் இருந்து மேல்முறையீடு செய்தோம், கைதிகள் இறுதி மேல்முறையீடு செய்தோம். அதன்பிறகு 2 விசாரணைகள் நடைபெற்றன.

    இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் விரிவுபடுத்துகிறது.

    இதற்கிடையே, டிசம்பர் 3-ம் தேதி சிறையில் இருக்கும் 8 பேரையும் சந்திக்க எங்கள் தூதருக்கு தூதரக அனுமதி கிடைத்தது. இது ஒரு முக்கியமான பிரச்சினை. அதனால் நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம், நாங்கள் எதைப் பகிர்ந்து கொள்ள முடியுமோ அதை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார்.

    • இந்திய-சீன எல்லை நிலவரம் குறித்து இரு தலைவர்களும் பேசவில்லை
    • அப்போதைய வெளியுறவு செயலாளர் சொல்லாமல் விட்டு விட்டதாக நான் நினைக்கிறேன்

    இந்தோனேசியாவின் பாலியில் கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி இந்திய பிரதமரும் சீன அதிபரும் சந்தித்து கொண்டனர். இது குறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா, "இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். ஆனால் இந்திய-சீன எல்லை நிலவரம் குறித்து இரு தலைவர்களும் பேசவில்லை" என தெரிவித்திருந்தார்.

    இந்த வார தொடக்கத்தில் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் தூதர் வாங் யீ இடையேயான சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கடந்த நவம்பரில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்த போது, எல்லை பிரச்னை குறித்தும் பேசியதாகவும், ஒருமித்த கருத்தை எட்டியதாகவும் கூறியிருந்தது.

    நேற்று வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர், அரிந்தம் பாக்சி அந்த அறிக்கையின் கருத்துக்களை ஆமோதிக்கும் விதமாக கூறியிருப்பதாவது:

    "இரு நாட்டு உறவுகளில் அமைதி நிலவ வேண்டுமென்றால் இந்திய-சீன எல்லையின் மேற்குப் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டுக்கருகே உள்ள பகுதிகளில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. இது குறித்து நவம்பரில் இரு தலைவர்களும் பேசினர். இதை அப்போதைய வெளியுறவு செயலாளர் சொல்லாமல் விட்டு விட்டதாக நான் நினைக்கிறேன். இருதரப்பு உறவுகளை ஸ்திரப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் தலைவர்கள் பேசினார்கள்.

    இவ்வாறு பாக்சி தெரிவித்திருக்கிறார்.

    கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சில முக்கிய இடங்களில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் மோதலில் ஈடுபட்டன. விரிவான ராணுவ பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து பல பகுதிகளில் துருப்புக்கள் விலக்கி கொள்ளப்பட்டன.

    • மசூதி தாக்குதலில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
    • பெஷாவரில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று முன்தினம் மதியம் முஸ்ஸிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

    காவல் துறையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடந்த 18 மணி நேரமாக மீட்புப் பணிகள் நடந்து வரும் சூழலில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மசூதி தாக்குதலில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் அதிகமானவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பெஷாவரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பெஷாவரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு இந்தியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பலரின் உயிரைப் பறித்த இந்தத் தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

    • பூசாரியின் வீட்டை தாக்கிய கும்பல் சிலைகளையும் சேதப்படுத்தியுள்ளது.
    • இந்த தாக்குதலால் கராச்சியில் வசித்து வரும் இந்துக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்து கோவில் மீது தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். கோரங்கி பகுதியில் ஸ்ரீ மாரி மாதா கோவில் உள்ளது. அதன் அருகில் அந்த கோவில் பூசாரி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் கோவில் வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    பூசாரியின் வீட்டை தாக்கி அங்கிருந்த சிலைகளையும் அந்த கும்பல் சேதப்படுத்தியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தாக்குதலால் அந்த பகுதியில் வசித்து வரும் இந்துக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, கராச்சியில் உள்ள இந்து கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை மத்திய அரசு கவனித்து வருவதாகவும், இது மத சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தலின் மற்றொரு செயல் என்றும் குறிப்பிட்டார். சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    ×