search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கராச்சியில் இந்து கோவில் மீது தாக்குதல் -  இந்தியா கண்டனம்
    X

    அரிந்தம் பாக்சி       கராச்சியில் சேதப்படுத்தப்பட்ட கோவில்

    கராச்சியில் இந்து கோவில் மீது தாக்குதல் - இந்தியா கண்டனம்

    • பூசாரியின் வீட்டை தாக்கிய கும்பல் சிலைகளையும் சேதப்படுத்தியுள்ளது.
    • இந்த தாக்குதலால் கராச்சியில் வசித்து வரும் இந்துக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்து கோவில் மீது தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். கோரங்கி பகுதியில் ஸ்ரீ மாரி மாதா கோவில் உள்ளது. அதன் அருகில் அந்த கோவில் பூசாரி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் கோவில் வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    பூசாரியின் வீட்டை தாக்கி அங்கிருந்த சிலைகளையும் அந்த கும்பல் சேதப்படுத்தியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தாக்குதலால் அந்த பகுதியில் வசித்து வரும் இந்துக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, கராச்சியில் உள்ள இந்து கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை மத்திய அரசு கவனித்து வருவதாகவும், இது மத சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தலின் மற்றொரு செயல் என்றும் குறிப்பிட்டார். சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×