search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை தாக்குதல்"

    • ஒரு பயங்கரவாதி, தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்தார்.
    • தப்பி ஓடிய பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

    பாகிஸ்தானின் கைபர் மாவட்டம் அலி மஸ்ஜித் பகுதியில் மசூதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மசூதிக்குள் 2 பயங்கரவாதிகள் புகுந்தனர். அவர்கள் தங்களது உடல்களில் குண்டுகளை கட்டி இருந்தனர்.

    போலீசார் அங்கு வந்து பயங்கரவாதிகளை பிடிக்க முயன்றனர். ஒரு பயங்கரவாதி, தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்தார். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார். பலர் காயம் அடைந்தனர். மற்றொரு பயங்கரவாதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதற்கிடையே தப்பி ஓடிய பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

    • தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது
    • தாக்குதல் தொடர்பாக சிராஜுல் ஹக் கூறும்போது நான் மரணத்திற்கு பயப்படவில்லை என்றார்.

    பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அரசியல் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர் சிராஜுல் ஹக். இவர் பலுசிஸ்தானின் சோப் பகுதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க காரில் சென்றார். அப்போது அவரது கார் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருநபர், தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். ஆனால் காருக்குள் இருந்த சிராஜுல் ஹக் உள்பட சிலர் காயமின்றி உயிர் தப்பினர்.

    இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. தாக்குதல் தொடர்பாக சிராஜுல் ஹக் கூறும்போது, நான் மரணத்திற்கு பயப்படவில்லை. நாட்டின் தொடர்ச்சியான பண வீக்கம் மற்றும் மோசமான பொருளாதார நிலைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் காரணம் என்றார்.

    இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கண்டனம் தெரித்துள்ளார். முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்துமாறு பலுசிஸ்தான் அரசை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன.
    • வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட 3 வாகனங்கள் ராணுவ டிரோன் துப்பாக்கி சூட்டில் அழிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்நாட்டின் செவரே பகுதியில் மூன்று தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 9 பேர் பலியானார்கள். சுமார் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தாக்குதலில் 20 கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

    இதற்கிடையே வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட 3 வாகனங்கள் ராணுவ டிரோன் துப்பாக்கி சூட்டில் அழிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

    • பெஷாவர் குண்டுவெடிப்பில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
    • இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளான்.

    இந்த தாக்குதலில் மசூதி கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 17 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. அதேசமயம் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டனர்.

    மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 150க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பின் முக்கிய கமாண்டர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கை

    பெஷாவர்:

    பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பலத்த பாதுகாப்பு மிக்க பகுதியில் உள்ள மசூதியில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பிற்பகல் தொழுகையின்போது தற்கொலைப்படை தீவிரவாதி இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளான். இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். மசூதியின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 17 பேர் உயிரிழந்த நிலையில், நேரம் செல்லச் செல்ல உயிரிழப்பு அதிகரித்தது. இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அந்த அமைப்பின் முக்கிய கமாண்டர் உமர் காலித் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவனது சகோதரன் கூறியிருக்கிறான்.

    • பாதுகாப்பு படையினரின் வாகனம் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி வெடிக்க வைத்தனர்.
    • தற்கொலை தாக்குதலுக்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    பெஷாவர்:

    பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணம், வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    பட்டாசி செக்போஸ்ட் அருகே பாதுகாப்பு படையினர் வந்த வாகனம் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை பயங்கரவாதிகள் மோதச்செய்து பின்னர் வெடிக்க வைத்தனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். பொதுமக்கள் 2 பேர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாத அச்சுறுத்தலை வேரறுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

    தெஹ்ரீக்-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு சண்டை நிறுத்தத்தை மேற்கொண்டபோதிலும், பழங்குடியின மாவட்டங்களில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×