என் மலர்
உலகம்

அரசியல் கட்சி கூட்டத்தில் குண்டுவெடித்து 35 பேர் பலி - பாகிஸ்தானில் பரபரப்பு
- பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அரசியல் கட்சி கூட்டம் நடைபெற்றது.
- அப்போது நடந்த குண்டுவெடிப்பில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 80 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மனித குண்டு வெடிப்பு மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்து 20 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






