search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் - இந்தியா கண்டனம்
    X

    அரிந்தம் பாக்சி

    பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் - இந்தியா கண்டனம்

    • மசூதி தாக்குதலில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
    • பெஷாவரில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று முன்தினம் மதியம் முஸ்ஸிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

    காவல் துறையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடந்த 18 மணி நேரமாக மீட்புப் பணிகள் நடந்து வரும் சூழலில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மசூதி தாக்குதலில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் அதிகமானவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பெஷாவரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பெஷாவரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு இந்தியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பலரின் உயிரைப் பறித்த இந்தத் தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×