என் மலர்
உலகம்

பாகிஸ்தானில் ரெயிலில் குண்டுவெடித்து இருவர் பலி- 5 பேர் படுகாயம்
- படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ரெயிலில் வேறு எங்காவது வெடி குண்டு இருக்கிறதா என்று சோதனை நடந்தது.
பாகிஸ்தானில் குவெட்டரில் இருந்து லாகூருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. அந்த ரெயில் பஞ்சாப் மாகாணம் சிச்சாவட்னி என்ற இடத்தில் சென்றபோது ஒரு பெட்டியில் குண்டு வெடித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறினார்கள். உடனே அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. குண்டுவெடிப்பில் ஒரு பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குண்டுவெடிப்பில் ரெயில் பெட்டி கடுமையாக சேதமடைந்தது. ரெயிலில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டார்கள். ரெயிலில் வேறு எங்காவது வெடி குண்டு இருக்கிறதா என்று சோதனை நடந்தது.
Next Story






