search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP MP"

    மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சிந்தாமணி மாளவியா, ‘நான் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன்’ என தெரிவித்துள்ளார். #BJP #ChintamaniMalviya #FireCrackers
    போபால்:

    தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சிந்தாமணி மாளவியா, ‘நான் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் தீபாவளி பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவேன். இரவு 10 மணிக்கு லட்சுமி பூஜை முடிந்த பிறகே பட்டாசுகள் வெடிப்பேன். இந்து பாரம்பரியங்களில் பிறரின் தலையீட்டை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். என் மத பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதற்காக சிறை செல்வதாக இருந்தாலும், அதற்காக சந்தோஷப்படுவேன். இந்து விழாக்களை எப்போது கொண்டாட வேண்டும் என்பதற்கு ஏற்கனவே இந்து நாட்காட்டி உள்ளது. விழாக்களை நடத்த கால நேரம் நிர்ணயம் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முகலாயர்கள் ஆட்சியின் போது கூட, இந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது இல்லை.

    இவ்வாறு சிந்தாமணி மாளவியா கூறி உள்ளார். 
    என்னை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகத் தயாராக இருக்கிறேன் என சாக்சி மகராஜ் சவால் விடுத்துள்ளார்.
    உன்னாவ்:

    உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. எம்பி சாக்சி மகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் என்னை எதிர்த்து (உன்னாவ் தொகுதியில்) போட்டியிட தயாரா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சவால் விடுகிறேன். அவர் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டு விலகுவேன். ஆனால் தோல்வி அடைந்தால் இத்தாலிக்கு செல்ல வேண்டும்.

    ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரையை எதிர்க்கவில்லை. பா.ஜ.க. ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? ஆனால், அதுபோன்ற யாத்திரைக்கு தூய்மை அவசியம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, யாத்திரையை தொடங்கும் முன்வாக அவர் தூய்மையானவராக ஆகியிருக்க வேண்டும். அசைவ உணவு சாப்பிட்டுவிட்டு தரிசனம் செய்வதை நியாயப்படுத்த முடியாது.

    எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வைப் பார்த்து பயப்படுகின்றன. அதனால்தான் மெகா கூட்டணி அமைக்க முயற்சி செய்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். #SakshiMaharaj
    மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதை தடை செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என மக்களவையில் பா.ஜ.க. எம்பி வலியுறுத்தினார். #PopulationControlLaw
    புதுடெல்லி:

    மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி. உதய் பிரதாப் சிங், மக்களவையில் இன்று ஜீரோ அவரில்  பேசியதாவது:-

    நாட்டில் மக்கள் தொகை பெருகி வருவதால் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சீனா உள்ளிட்ட நாடுகள் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. அதேபோன்று இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதை தடுக்கவும் வகை செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும்.



    பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்திய அரசால், இதுபோன்ற சட்டத்தையும் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PopulationControlLaw
    நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் முதல் மந்திரியாகி விடுவேன் என பிரபல பாலிவுட் நடிகையும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எம்.பியுமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார். #Hemamalini #BJP
    ஜெய்ப்பூர்:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதி எம்.பியாக பதவி வகித்து வருபவர் பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி. இவர் சமீபத்தில்
    ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாராவில் ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அப்போது செய்தியாளர்கள் சிலர் ஹேமமாலினியிடம் கேள்விகள் கேட்டனர். அதில் ஒன்று, உத்தரப்பிரதேச முதல் மந்திரியாக விருப்பமா? என்றனர்.

    அதற்கு பதிலளித்த ஹேமமாலினி, எம்.பி ஆவதற்கு முன்னரே பா.ஜ.க.வின் கட்சி பணிகளால் ஈடுபட்டுள்ளேன். நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாக முடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை அது என் சுதந்திரத்திற்கு முடிவாக அமைந்துவிடும் என தெரிவித்தார்.
     
    மேலும், பிரதமர் மோடி பெண்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் உழைத்து வருகிறார். மோடி போன்ற பிரதமரை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது அவ்வளவு சிறப்பானவர் அவரது ஆட்சியின் கீழ் அனைவரும் வளர்ச்சி அடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். யார் தேசத்திற்காக அதிகம் உழைக்கிறார்கள் என்பதையே முதலில் பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் முதல் மந்திரியாகி விடுவேன் என பிரபல பாலிவுட் நடிகையும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எம்.பியுமான ஹேமமாலினி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. #Hemamalini #BJP
    மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #BJPMP #GopalShetty #Christians
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மலாடில் நடந்த முகமது நபி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மும்பை வடக்கு தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. கோபால் ஷெட்டி கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், இந்திய விடுதலை போராட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தந்தனர். இதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை. கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஆங்கிலேயர்கள். அந்நியர்களான அவர்களுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறு பங்கு கூட கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

    பாஜக எம்.பி.யின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடந்து, அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோபால் ஷெட்டி சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக பேசி வருகிறார். வரலாறு தெரியாமல் அவர் பேசியுள்ளார். சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் ஆற்றிய சேவையை அவர் அறிந்துகொள்ள வேண்டும். எனவே, அவரது கருத்துக்கு கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. #BJPMP #GopalShetty #Christians
    சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா பெண் எம்பி. சரோஜ் பாண்டே ராகுல் காந்தியை மனரீதியாக பலவீனமானவர் என விமர்சனம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #RahulGandhi #SarojPandey
    ராய்ப்பூர்:

    கோகோ கோலா நிறுவனர் யார் தெரியுமா? ஒரு காலத்தில் ஷிகான்ஜி (லெமன் சூஸ்) விற்றவர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கிண்டல் அடித்துள்ளார்.

    இதற்கு பதிலளித்த பாரதிய ஜனதா பெண் எம்பி. சரோஜ் பாண்டே கூறியதாவது:-

    அவர் (ராகுல் காந்தி ) கூறுவது என்ன ஆச்சரியமான விஷயம். அவர் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறார். 40 வயதில் கற்றுக் கொள்ளும் ஒரு நபர் கற்றுக்கொண்டவர் என்று அழைக்க முடியாது. அத்தகைய நபர் மனரீதியாக பலவீனமானவர் என அழைக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.

    ராகுல் காந்தி குறித்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. சரோஜ் பாண்டே உடனடியாக தனது அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறத்தி உள்ளது. #RahulGandhi #SarojPandey
    ×