என் மலர்
செய்திகள்

X
ஒரு நிமிடத்தில் முதல் மந்திரியாகி விடுவேன் - ஹேமமாலினி பேச்சால் பரபரப்பு
By
மாலை மலர்27 July 2018 6:54 AM IST (Updated: 27 July 2018 6:54 AM IST)

நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் முதல் மந்திரியாகி விடுவேன் என பிரபல பாலிவுட் நடிகையும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எம்.பியுமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார். #Hemamalini #BJP
ஜெய்ப்பூர்:
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதி எம்.பியாக பதவி வகித்து வருபவர் பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி. இவர் சமீபத்தில்
ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாராவில் ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்கள் சிலர் ஹேமமாலினியிடம் கேள்விகள் கேட்டனர். அதில் ஒன்று, உத்தரப்பிரதேச முதல் மந்திரியாக விருப்பமா? என்றனர்.
அதற்கு பதிலளித்த ஹேமமாலினி, எம்.பி ஆவதற்கு முன்னரே பா.ஜ.க.வின் கட்சி பணிகளால் ஈடுபட்டுள்ளேன். நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாக முடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை அது என் சுதந்திரத்திற்கு முடிவாக அமைந்துவிடும் என தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடி பெண்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் உழைத்து வருகிறார். மோடி போன்ற பிரதமரை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது அவ்வளவு சிறப்பானவர் அவரது ஆட்சியின் கீழ் அனைவரும் வளர்ச்சி அடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். யார் தேசத்திற்காக அதிகம் உழைக்கிறார்கள் என்பதையே முதலில் பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் முதல் மந்திரியாகி விடுவேன் என பிரபல பாலிவுட் நடிகையும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எம்.பியுமான ஹேமமாலினி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. #Hemamalini #BJP
Next Story
×
X