என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gopal Shetty"

    நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பாஜக வேட்பாளர் 2 ஆயிரம் கிலோ இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுக்க, பல வகை இனிப்புகளை தயாரிக்கும் பணியில் மோடி முகமூடியுடன் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    மும்பை:

    மும்பை வடக்கு பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக பதவி வகிப்பவர் கோபால் ஷெட்டி. பாஜகவை சேர்ந்த இவர் இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பிரபல நடிகை ஊர்மிளா மட்டோன்கர் களமிறங்கியுள்ளார்.

    இருவருக்கும் இடையில் இங்கு கடுமையான போட்டி நிலவிவரும் நிலையில் சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் நாடு முழுவதும் பாஜக 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என வெளியாகிவரும் தகவல்கள் பாஜகவினருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், மும்பை வடக்கு பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் 23-ம் தேதி மக்களுக்கு வழங்குவதற்காக 2 ஆயிரம் கிலோ இனிப்பு வகைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.



    இதனைதொடர்ந்து, பிரதமர் மோடியின்  முகமூடிகளை அணிந்தவாறு நூற்றுக்கணக்கானவர்கள் லட்டு, மைசூர்பா, பால்கோவா உள்ளிட்ட இனிப்புகளை தயாரித்து வருகின்றனர்.

    மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #BJPMP #GopalShetty #Christians
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மலாடில் நடந்த முகமது நபி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மும்பை வடக்கு தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. கோபால் ஷெட்டி கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், இந்திய விடுதலை போராட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தந்தனர். இதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை. கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஆங்கிலேயர்கள். அந்நியர்களான அவர்களுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறு பங்கு கூட கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

    பாஜக எம்.பி.யின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடந்து, அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோபால் ஷெட்டி சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக பேசி வருகிறார். வரலாறு தெரியாமல் அவர் பேசியுள்ளார். சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் ஆற்றிய சேவையை அவர் அறிந்துகொள்ள வேண்டும். எனவே, அவரது கருத்துக்கு கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. #BJPMP #GopalShetty #Christians
    ×