search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayodhya Ram Temple"

    • பிரதமர் மோடியின் கைகளில் நாடு பாதுகாப்பாக உள்ளது.
    • திரிபுராவில் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    அகர்தலா :

    பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில், ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு சப்ரூம் என்ற இடத்தில் பா.ஜனதா ரத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.

    மாநில அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.

    பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

    காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் ராமஜென்மபூமி வழக்கை நீண்ட காலமாக கோர்ட்டிலேயே வைத்து இழுத்தடித்தன.

    ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தவுடன் பிரதமர் மோடி பிரமாண்ட ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார்.

    நான் சொல்வதை ராகுல்காந்தி கேட்டுக் கொள்ளட்டும். அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் தயாராகி விடும்.

    பிரதமர் மோடியின் கைகளில் நாடு பாதுகாப்பாக உள்ளது. 2019-ம் ஆண்டு, காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. 10 நாட்கள் கழித்து, இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லிய தாக்குதல் நடத்தினர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அயோத்தியை சர்வதேச சுற்றுலா தலமாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
    • இந்த கோவில் 2024-ம் ஆண்டு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லக்னோ :

    உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமபிரான் பிறந்த இடத்தில் அவருக்கு பிரமாண்ட கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. 3 தளங்களுடன் 161 அடி உயரம் கொண்ட இந்த கோவில் 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கோவில் கட்டுமான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கோவிலை ஒட்டியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அயோத்தியை சர்வதேச சுற்றுலா தலமாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் இருந்து ராமர் கோவிலை எளிதாக அடையும் வகையில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1,000 கோடியில் மெகா திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

    நிலம் கையகப்படுத்தல், குடியிருப்பாளர்கள், கடை உரிமையாளர்களின் மறுவாழ்வு மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்துக்கு உத்தரபிரதேச அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இது குறித்து அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'இந்த திட்டத்தின் மூலம், ராம ஜென்மபூமிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் விரிவுபடுத்தப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு, ராமபிரானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அழகிய சூழல் உருவாக்கப்படும்' என்று கூறினார்.

    இதில் முக்கியமாக, சுக்ரீவா கோட்டையில் இருந்து ராம ஜென்மபூமி வரையான 566 மீட்டருக்கு பக்தர்களின் வசதிக்காக நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு ஜென்மபூமி பாதை என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இதற்காக ரூ.83.33 கோடிக்கு யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்து இருப்பதாக அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    • ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்து விட்டன.
    • கோவில் கட்டி முடிப்பதற்கு மொத்தம் ரூ.1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    அயோத்தி :

    அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

    2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்து விட்டன. கட்டுமான பணிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றம் திருப்தி அளிக்கிறது.

    அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கோவிலின் தரைத்தளம் தயாராகி விடும். 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர சங்கராந்தி நாளில், கோவில் கர்ப்பகிரகத்தில் ராமர் சிலைகள் நிறுவப்படும்.

    அதைத்தொடர்ந்து அதே மாதத்தில், ராமர் கோவில் பக்தர்களுக்கு திறந்து விடப்படும்.

    கோவில் கட்டி முடிப்பதற்கு மொத்தம் ரூ.1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கோவிலில், பிரபலமான இந்து மடாதிபதிகள் சிலைகள் வைப்பதற்கு இடம் ஒதுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று பத்திரிகையாளர்கள் பலர், ராமர் கோவில் கட்டுமான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிரதமர் மோடி கடந்த 23-ந் தேதி பார்வையிட அமைக்கப்பட்ட உயரமான இடத்தில் இருந்து அவர்கள் பார்த்தனர். கோவிலின் 70 ஏக்கர் நிலத்துக்குள் வால்மீகி, கேவத், சபரி, ஜடாயு, சீதை, விநாயகர், லட்சுமணன் ஆகியோருக்கும் கோவில்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் மக்ரானா மலையில் வெட்டி எடுக்கப்படும் மார்பிள் கற்கள், கோவில் கருவறைக்குள் பயன்படுத்தப்படுகின்றன.

    2024-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதவாக்கில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கு 3 மாதங்களுக்கு முன்பு ராமர் கோவில், பக்தர்களுக்கு திறக்கப்படுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார்.
    • 2023 டிசம்பர் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

    அப்போது முதல் மின்னல் வேகத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு (2023) டிசம்பர் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டு வேகமாக பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த கோவில் கட்டுமான பணிகளை மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். அத்துடன் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடியும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய இருப்பதாக கட்டுமான குழு தெரிவித்து உள்ளது.

    கட்டுமானக்குழு தலைவரான நிரிபேந்திர மிஸ்ராவின் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'ராமர் கோவில் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி விரைவில் பார்வையிடலாம்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    கோவில் கட்டுமானப்பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும், 2023-ம் ஆண்டு டிசம்பருக்குள் ராம பிரானின் முன்பு பக்தர்கள் வேண்டுதல் செய்ய வாய்ப்பு ஏற்படும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    கர்ப்ப கிரகம் மற்றும் 5 மண்டபங்கள் அடங்கிய தரைத்தளத்துடன் 3 மாடி ராமர் கோவில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக கூறியுள்ள கட்டுமானக்குழு, அக்டோபர் முதல் வாரத்தில் பெய்த கனமழை காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் மீண்டும் தற்போது அது வேகமெடுத்து இருப்பதாகவும் மேலும் கூறியுள்ளது.

    • அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
    • ராமர் கோவில் கட்டுமான பணிகள் 2023 டிசம்பருக்குள் முடிவடையும்.

    அயோத்தி:

    அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் கட்டுமான பணிகளை ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த அறக்கட்டளையின் ஆலோசனை கூட்டம் பைசாபாத்தில் நடந்தது. இதில் ராமர் கோவிலுக்கான கட்டுமான செலவு ரூ.1,800 கோடி என மதிப்பிடப்பட்டது. நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கையின் அடிப்படையில் இது இறுதி செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் இந்த அறக்கட்டளையின் விதிகள் மற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நீண்ட ஆலோசனை மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் ஒப்புதலுக்கு பிறகு, அறக்கட்டளையின் விதிகள் மற்றும் துணைச் சட்டங்கள் இறுதி செய்யப்பட்டதாக பொதுச்செயலாளர் சம்பத்ராய் பின்னர் தெரிவித்தார்.

    ராமர் கோவில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு (2023) டிசம்பருக்குள் முடிவடையும் என கூறிய அவர், 2024 ஜனவரி மகர சங்கராந்தி பண்டிகையின்போது கோவில் கருவறையில் ராமபிரான் வீற்றிருப்பார் என்றும் தெரிவித்தார்.

    • அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுமான பணி 40 சதவீதம் முடிந்துள்ளது.
    • இது கடவுள் காரியம் என்பதால், பணத்துக்கு தட்டுப்பாடு இல்லை.

    அயோத்தி :

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோா்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அயோத்தியில் முகாமிட்டுள்ள அவர், கரசேவக புரத்தில் தங்கி இருக்கிறார். தினந்தோறும் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடுவதுடன், அதன் முன்னேற்றம் குறித்து கூட்டங்கள் நடத்தி ஆய்வு செய்து வருகிறார்.

    சம்பத் ராய் கூறியதாவது:-

    கோவில் கட்டுமான பணி மற்றும் கோவிலை சுற்றி உள்ள சாலைகளை மேம்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 40 சதவீத கட்டுமான பணி முடிந்துள்ளது. 80 சதவீத பீட பணி முடிந்துள்ளது.

    அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இது கடவுள் காரியம் என்பதால், பணத்துக்கு தட்டுப்பாடு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் பணிமனையில், கோவில் கட்டுமானத்துக்கான கற்களை செதுக்கும் பணியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தற்காலிக ராமர் கோவிலில் சாமி கும்பிட வருபவர்கள், அந்த இடத்துக்கும் சென்று பார்ப்பது வழக்கமாக உள்ளது. கற்களை தொட்டு கும்பிடுவதுடன், புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்கள்.

    இதுதொடர்பாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை அதிகாரிகள் கூறியதாவது:-

    ராமர் கோவில் ஆயிரம் ஆண்டுகளை தாண்டி நிலைத்திருக்கும் வகையில் மண்ணில் பிரமாண்டமான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் கருவறைக்குள் பயன்படுத்த ராஜஸ்தான் மாநிலம் மக்ரானா மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மார்பிள்கள் பயன்படுத்தப்படும். மார்பிள்கள் செதுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. செதுக்கப்பட்ட மார்பிள் கற்கள் ஏற்கனவே அயோத்திக்கு வந்து விட்டன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ராமர் கோவிலை சுற்றி உள்ள 70 ஏக்கர் நிலத்தில், சீதை, லட்சுமணன், விநாயகர், சபரி, ஜடாயு, வால்மீகி ஆகியோருக்கும் கோவில்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், புகழ்பெற்ற அனுமன்காரி கோவிலுக்கு செல்லும் சாலை அகலப்படுத்தப்படுகிறது. அதற்காக வழியில் உள்ள கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. முதலில், இதற்கு எதிர்ப்பு எழுந்தபோதிலும், தற்போது உள்ளூர் மக்கள் தாங்களே முன்வந்து தங்கள் கடைகளையும், வீடுகளையும் இடிக்கிறார்கள்.

    அயோத்தியில் சரயு ஆற்றங்கரையில் உள்ள படித்துறைகளில் 9 லட்சம் விளக்குகளும், நகரின் மற்ற இடங்களில் 3 லட்சம் விளக்குகளும் ஏற்றப்பட உள்ளன.
    அயோத்தி:

    தீபாவளியை முன்னிட்டு, இன்று (புதன்கிழமை) இரவு 12 லட்சம் அகல் விளக்குகளால் அயோத்தியை அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 ஆண்டுகள் வனவாசம் மற்றும் ராவணனை தோற்கடித்த பிறகு அயோத்திக்கு திரும்பும் ராமர், சீதையை வரவேற்கும் வகையில் அங்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    அயோத்தியில் சரயு ஆற்றங்கரையில் உள்ள படித்துறைகளில் 9 லட்சம் விளக்குகளும், நகரின் மற்ற இடங்களில் 3 லட்சம் விளக்குகளும் ஏற்றப்பட உள்ளன. இதன்மூலம் புதிய சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அயோத்தி ராமர் கோவில்

    கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள். யோகி ஆதித்யநாத் அழைப்பின்பேரில், மத்திய கலாசாரத்துறை மந்திரி கிஷன் ரெட்டியும் பங்கேற்கிறார்.

    மேலும், நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சி, ராமாயண சம்பவங்களை விளக்கும் அலங்கார ஊர்திகள் ஊர்வலம், ராமலீலா, லேசர் ஷோ ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.


    ×