search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australian Open"

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.
    • நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்வியாடெக் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் ஜூலே நீமியரை தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார். ஸ்வியாடெக் அடுத்து கொலம்பியாவின் கமிலா ஒசோரியோவை சந்திக்கிறார்.

    3-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் ஜாக்குலின் கிறிஸ்டியனை(ருமேனியா) விரட்டியடித்தார்.

    முன்னாள் சாம்பியன்கள் பெலாரசின் விக்டோரியா அஸரென்கா, அமெரிக்காவின் சோபியா கெனின் இடையிலான ஆட்டத்தில் அஸரென்கா 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல் தடையை கடந்தார்.

    மரியா சக்காரி (கிரீஸ்), கோகோ காப், மேடிசன் கீஸ், டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), எம்மா ரடுகானு (இங்கிலாந்து), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), விம்பிள்டன் சாம்பியன் எலினா ரைபகினா (கஜகஸ்தான்), ஆஸ்டாபென்கோ (லாத்வியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    • முதல் சுற்றில் பிரிட்டன் வீரர் ஜேக் ட்ரேப்பரை நடால் வீழ்த்தினார்.
    • ஆடவர் ஒற்றையர் போட்டியில் இதுவரை 20 சாம்பியன் பட்டங்கள் வென்றுள்ளார்

    ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரிட்டன் வீரர் ஜேக் ட்ரேப்பரை எதிர்கொண்டார். மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இப்போட்டியில் 7-5, 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆடவர் ஒற்றையர் போட்டியில் இதுவரை 20 சாம்பியன் பட்டங்கள் வென்று நோவக் ஜோகோவிச், ரோஜர் பெடரர் ஆகியோரின் சாதனையுடன் இணைந்துள்ள நடால், ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வெல்லும் முனைப்புடன் வெற்றிக் கணக்கை தொடங்கி உள்ளார்.

    மார்ச் அல்லது ஏப்ரலில் மீண்டும் டென்னிஸ் பயிற்சியை தொடங்குவேன் என்று ரோஜர் பெடரர் கூறினார்.
    சூரிச்:

    முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளருமான ரோஜர் பெடரருக்கு (சுவிட்சர்லாந்து) கடந்த 2020-ம் ஆண்டில் வலது கால்முட்டியில் இரண்டு முறை ஆபரேஷன் செய்யப்பட்டது. காயத்தில் இருந்து குணமடைந்து 5 தொடர்களில் விளையாடிய அவர் எதிலும் வெற்றிபெறவில்லை. அதன் பிறகு மீண்டும் கால்முட்டியில் வலி ஏற்பட்டதால் ஜூலை மாதம் விம்பிள்டன் காலிறுதியில் தோற்றதோடு எஞ்சிய சீசனில் இருந்து ஒதுங்கினார். டாக்டர்களின் ஆலோசனைப்படி கால்முட்டி பிரச்சினையில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டுள்ளார். ஆனாலும் அவர் மறுபடியும் எப்போது களம் திரும்புவார் என்பது நிச்சயமற்ற ஒன்றாக இருக்கிறது.

    இந்த நிலையில் 40 வயதான பெடரர் அளித்த பேட்டியில், ‘அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மெல்போர்னில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபனில் நான் பங்கேற்க வாய்ப்பே இல்லை. ஜனவரி மாதம் தான் என்னால் நன்கு ஓட முடியும். மார்ச் அல்லது ஏப்ரலில் மீண்டும் டென்னிஸ் பயிற்சியை தொடங்குவேன். லண்டனில் நடக்கும் விம்பிள்டனில் என்னால் ஆட முடிந்தால் நிச்சயம் ஆச்சரியமடைவேன்.

    கடைசி முறையாக சாதிக்கும் அளவுக்கு செயல்பட வேண்டும் என்பது எனது லட்சியம். அது மட்டுமின்றி எனக்கே உரிய பாணியில் களத்தில் இருந்து விடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் தான் காயத்தில் இருந்து மீள்வதற்காக என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்’ என்றார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா பட்டம் வென்றார். #AusOpen2019 #NaomiOsaka
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரா கிவிடோவாவை ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.

    ஆட்டம் தொடங்கியதும் இருவரும் பொறுப்பாக ஆடினர். முதல் செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர். இறுதியில், முதல் செட்டை 7-6 (2) என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார் ஒசாகா.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 2வது செட்டை கிவிடோவா 5-7 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ஒசாகா 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையும் பெற்றார். இந்த போட்டி சுமார் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்தது. #AusOpen2019 #NaomiOsaka
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்தார். #AustralianOpen #SerenaWilliams #CarolineWozniacki
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் 16-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினார்கள்.

    இதில் செரீனா வில்லியம்ஸ் 4-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் 7-வது இடத்தில் இருக்கும் பிளிஸ்கோவாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார். இதன் மூலம் அவரது 24-வது கிராண்ட் சிலாம் கனவு தகர்ந்தது.



    மற்றொரு காலிறுதியில் 4-ம்நிலை வீராங்கனை ஒசாகா (ஜப்பான்) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சுவிட்டோலினாவை (உக்ரைன்) வீழ்த்தினார். அவர் அரையிறுதியில் பிளிஸ்கோவாவை சந்திக்கிறார்.

    மற்றொரு காலிறுதியில் கிவிட்டோவா (செக்குடியரசு)- கோலின்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் ஒரு காலிறுதியில் ஜோகோவிச் (செர்பியா)- நிஷிகோவி (ஜப்பான்) மோதுகிறார்கள். #AustralianOpen #SerenaWilliams #CarolineWozniacki
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற 4வது சுற்றுப் போட்டியில் கிரீஸ் வீரர் டிஸ்டிஸ்பசிடம் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். #AustralianOpen #RogerFederer
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4வது சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் கிரீஸ் நாட்டை சேர்ந்த டிஸ்டிஸ்பசை எதிர்கொண்டார்.

    இதில், டிஸ்டிஸ்பசிடம் ரோஜர் பெடரர் 7 - 6, 6 - 7, 5 - 7, 6 - 7 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார். இந்த வெற்றியின் மூலம் டிஸ்டிஸ்பஸ் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். இந்த போட்டி சுமார் மூன்றே முக்கால் மணி நேரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. #AustralianOpen #RogerFederer
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். #AustralianOpen #RafaelNadal
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால், செக் குடியரசு நாட்டை சேர்ந்த தாமஸ் பெட்ரிக்கை எதிர்கொண்டார்.

    இதில் ரபேல் நடால் தாமஸ் பெட்ரிக்கை 6-0, 6-1, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். #AustralianOpen #RafaelNadal 
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். #AustralianOpen #Djokovic #Medvedev #Nishikori
    மெல்போர்ன்:

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து 12-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அத்துடன் அவர் இந்த மாத இறுதி வரை நம்பர் ஒன் வீரராக நீடிப்பதை உறுதி செய்தார்.



    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-3, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ‘வைல்டு கார்டு’ வீரர் அலெக்ஸ் போல்ட்டை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப்பான்) 7-6 (8-6), 6-1, 6-2 என்ற நேர்செட்டில் போர்ச்சுகல் வீரர் ஜாவ் ஜோய்சாவை வெளியேற்றி 7-வது முறையாக 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் டானில் மெட்விடேவ் (ரஷியா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), பாப்லோ கார்ரினோ பஸ்டா (ஸ்பெயின்), போர்னா கோரிச் (குரோஷியா), லூகாஸ் பொய்லி (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதேபோல் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். 4-வது சுற்றில் சிமோனா ஹாலெப்-செரீனா வில்லியம்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    2018-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) தொடக்க சரிவில் இருந்து மீண்டு வந்து 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் சீன தைபே வீராங்கனை சு வெய் ஹிக்கை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 7-6 (7-5), 6-2 என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்தின் டிம் பாசின்ஸ்கியை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி கண்டார். மற்ற ஆட்டங்களில் கரோலினா பிலிஸ்கோவா (செக் குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), செவஸ்டோவா (லாத்வியா) ஆகியோர் வெற்றி கண்டனர்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த குணேஸ்வரன் தகுதி பெற்றுள்ளார். #AustralianOpen #Gunasekaran
    மெல்போர்ன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நாளை மறுதினம் தொடங்குகிறது. இதையொட்டி கடந்த சில தினங்கள் அங்கு தகுதி சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவில் தகுதி சுற்றின் 3-வது மற்றும் கடைசி ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஜப்பானின் யோசுக் வாடானுகியை நேற்று எதிர்கொண்டார். இதில் குணேஸ்வரன் 6-7 (5), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றார். கடந்த 5 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஒற்றையர் பிரிவில் விளையாட தகுதி பெற்ற 3-வது இந்தியர் குணேஸ்வரன் ஆவார். ஏற்கனவே சோம்தேவ் தேவ்வர்மன், யுகி பாம்ப்ரி ஆகியோர் ஆடியிருக்கிறார்கள்.

    முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் பிரதான சுற்றை எட்டியதால் மகிழ்ச்சியில் திளைக்கும் சென்னையைச் சேர்ந்த 29 வயதான குணேஸ்வரன் அடுத்து ஆஸ்திரேலிய ஓபனில், முதலாவது சுற்றில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாபோவுடன் மோத இருக்கிறார்.

    தகுதி சுற்றில் மூன்று ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த குணேஸ்வரன் பிரதான சுற்றுக்கும் வந்து விட்டதால் குறைந்தது அவருக்கு ரூ.38 லட்சம் பரிசு கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.#AustralianOpen #Gunasekaran
    ×