search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attempted arson"

    • அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு ஜேசிபி வாகனத்துடன் வீடுகளை இடிக்க சென்றனர் .
    • துணை மேயர் தாமரைசெல்வன் மற்றும் போலீசார் மண்எண்ணை கேனை பிடுங்கினர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன் குளம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 7 வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக ஒரு சிலர் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.  மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்‌. இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் முரளி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு ஜேசிபி வாகனத்துடன் வீடுகளை இடிக்க சென்றனர் . அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டனர். பின்னர் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    இத்தகவல் அறிந்த கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், அ.தி.மு.க கவுன்சிலர் தஷ்ணா, நிர்வாகி நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குளோப் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் அதிகாரியிடம் பேசுகையில், இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது மேலும் இவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட உள்ளது ஆகையால் வீடுகள் இடிப்பதற்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும். இந்த பகுதியில் ஒரு சில கட்டிடங்கள் அரசு இடங்களை ஆக்கிரமித்து பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதனையும் உரிய முறையில் அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக ஆணையாளர் நேரில் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் தஷ்ணா மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இதற்கு ஆதரவாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் எழில் என்பவர் திடீர் என மண்எண்ணை கேனுடன் வந்தார். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் தனது உடலில் மண் எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே துணை மேயர் தாமரைசெல்வன் மற்றும் போலீசார் மண்எண்ணை கேனை பிடுங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். 

    • கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 60 வயது முதியவர் ஒருவர் நேரில் வந்தார்.
    • பிலஞ்சம் தராத காரணத்தினால் வீடு இல்லை என கூறியதை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வந்து சென்றனர்.

    அதன்படி இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 60 வயது முதியவர் ஒருவர் நேரில் வந்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக முதியவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பண்ருட்டி கீழ்மாம்பட்டு சேர்ந்தவர் சிகாமணி (வயது 65) என தெரிய வந்தது. இவருக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வந்துள்ளதாக கூறியதாகவும், தற்போது வீடு கட்ட தொடங்கிய பின் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.இதன் காரணமாக லஞ்சம் தராத காரணத்தினால் வீடு இல்லை என கூறியதை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து முதியவர் சிகாமணியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • போலீசார் தடுத்து நிறுத்தினர்
    • கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவல கத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட் டம் நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் மனு அளிக்க வருபவர் களை தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்த னர்.

    அப்போதுநுழைவு வாயில் அருகில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அவரது மகனுடன் வந்து திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்கமுயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் தண்டராம்பட்டு எடத்தனூர் பகுதியை சேர்ந்த காமாட்சி என்றும், அவரது கணவர் சென்ன கிருஷ்ணன் குடும்பம் நடத்த சம்பள பணம் கொடுக்காமல் அடித்து கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக வும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    • மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
    • ஒரு பெண் திடீரென்று மண்எண்ணை கேனை எடுத்து வந்து தீக்குளிக்க முயன்றார்.

    கடலூர்: 

    கடலூர் புருக்கீஸ் பேட்டை மஞ்சனிக்குப்பம் பகுதியில் அ ரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 8 வீடுகள் கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி தலைமையில் ஆய்வாளர்கள் அருள், தினகரன் மற்றும் ஊழியர்கள் ஜேசிபி எந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    மேலும் ஜேசிபி எந்திரம் மூலம் வீடுகளை இடிக்க சென்றபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் அமர்நாத் தலைமையில் பொதுமக்கள் ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு வீடுகளை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் திடீரென்று மண்எண்ணை கேனை எடுத்து வந்து தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த பெண்ணிடம் இருந்து உடனடியாக கேனை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இங்கு இருந்து காலி செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தாசில்தாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இதுசம்பந்தமாக உரிய முறையில் விசாரணை நடத்தி பொதுமக்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து தற்காலிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை இடிக்காமல் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக  காணப்பட்டது.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று மதியம் 3 பெண்கள் உள்பட 4 பேர் திடீரென வந்தனர்.
    • கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலில் தாங்கள் மறைத்து வைத்து எடுத்து வந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று மதியம் 3 பெண்கள் உள்பட 4 பேர் திடீரென வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலில் தாங்கள் மறைத்து வைத்து எடுத்து வந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு விசாரித்தனர். அப்போது அவர்கள் மணக்காடு பகுதியை சேர்ந்த திருப்பதி அவரது மனைவி ஆண்டனி, இவர்களது மகள்கள் மகாலெட்சுமி, தமிழ்செல்வி என்பது தெரிய வந்தது . அப்போது திருப்பதி கூறியதாவது, எனது மகனை போலீசார் நேற்றிரவு விட்டிற்கு வந்து அைழத்து சென்றனர். ஆனால் அவர் தற்போது வரை எங்கு உள்ளார் என்று தெரியவில்லை இதனால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீசார் கூறுகையில, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த வினோத் என்பவர் கொலை வழக்கு தொடர்பாக அவரை விசாரிக்க அழைத்து சென்றதாக கூறினர். 

    • சிறை வைக்கப்பட்டுள்ள மகளை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
    • தொடர்ந்து முனிராஜை போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சூரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது 39). விவசாயியான இவர் இன்று காலை மனைவியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து போர்டிகோ வாசலுக்கு வந்த முனிராஜ் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு முனிராஜை தடுத்து காப்பாற்றினர். பின்னர் அவரை அங்கிந்தவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

    மகளை மீட்டுத்தர வேண்டும்

    இதனைத் தொடர்ந்து தல்லாக்குளம் போலீசார் முனிராஜிடம் விசாரித்தனர். அப்போது அவர், "என் மகளை ஒரு மர்ம கும்பல் சட்டவிரோதமாக தனி அறையில் அடைத்து வைத்து உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, என் மகளை மீட்டு தர வேண்டும்" என்று தெரிவித்தார். தொடர்ந்து முனிராஜை போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கலெக்டர் அலுவல கத்தில் விவசாயி மண் எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
    • அதே பகுதி சேர்ந்த வாலிபர் ஒருவர் சிலையை அகற்றி விடுவதாக கூறி, இது சம்பந்தமாக கேட்டபோது சிவகுருவை தாக்கியதாக கூறினார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தார்.பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மேல்பட்டாம்பாக்கம் சேர்ந்தவர் சிவகுரு (வயது 33) இவர் தி.மு.க. பிரமுகர். அதே பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை சொந்த செலவில் செய்து வைத்துள்ளார். ஆனால் அதே பகுதி சேர்ந்த வாலிபர் ஒருவர் சிலையை அகற்றி விடுவதாக கூறி, இது சம்பந்தமாக கேட்டபோது சிவகுருவை தாக்கியதாக கூறினார். ஆகையால் அந்த நபரை கைது செய்ய கோரி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததாக என தெரிவித்தார். அப்போது போலீசார் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிடம் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடும் எச்சரிக்கை செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×