search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attempted arson"

    • ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டை இடிக்க முயன்றதால் விபரீதம்
    • போலீசார் தடுத்து தண்ணீரை ஊற்றினர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட் டம், நெமிலி அருகே உள்ள பெரப்பேரி கிராமத்தில் அர சுக்கு சொந்தமான பாதை புறம்போக்கு இடத்தை ஆக்கிர மிப்பு செய்து கடந்த 5 ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்தனர்.

    இந்தநிலை யில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெரப்பேரி கிராமத் தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் ஆக்கிர மிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசா ரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு களை அகற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரு வாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டில் கோர்ட்டு உத்தரவை ஒட்டினர். இந்த நிலையில் நேற்று நெமிலி தாசில் தார் சுமதி தலைமையில், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், வரு வாய் ஆய்வாளர் கனிமொழி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சாலமன் ராஜா, பாரதி ஆகி யோர் சென்று ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் மாட்டுக்கொட்ட கையை அப்புறப்படுத்த முயன்றனர்.

    இதற்கு வீட்டின் உரிமையாளர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்கு ளிக்க முயற்சி செய்தார்.

    அவரை போலீசார் தடுத்து தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் வீடு இடித்து அப் புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • உறவினர்கள் தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டதாக புகார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பனந்தோப்பு பட்டி பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி மஞ்சுளா (வயது 42). இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு அவரது பேத்திகளுடன் வந்தார்.

    கலெக்டர் அலுவலக வாசலில் நின்ற போலீசார் மஞ்சுளா வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் மண்ணெண்ணை கேன் இருந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    தன்னை உறவினர்கள் தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். மேலும் என்னுடைய வீட்டில் இருந்த 5 பவுன் நகை, லேப்டாப், பித்தளை சாமான்கள் கட்டில் ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டனர்.

    இதை தட்டி கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர். எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    இது குறித்து அணைக்கட்டு போலீசில் 4 முறையும் கலெக்டர் அலுவலகத்தில் 1 முறையும் எஸ்பி அலுவலகத்தில் ஒரு முறையும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க வந்ததாக மஞ்சுளா தெரிவித்தார்.

    அவரை மனுகொடுத்து விட்டு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

    • கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
    • கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி காளையார்கரிசல் குளத்தை அடுத்துள்ள பொம்மக்கோட்டையை சேர்ந்தவர் பிச்சை(வயது70). சோடா கம்பெனி நடத்தி வந்த இவர், தொழில் விருத்தி காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிலரிடம் 20 பவுன் நகையை அடகு வைத்து ரூ.10 லட்சம் கடன் பெற்றார்.

    தவணை முறையில் மாதந்தோறும் பணத்தை கட்டி வந்த ராமர் ரூ.12 லட்சம் வரை செலுத்தியபின் நகையை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். ஆனால் கடன் கொடுத்தவர்கள் மேலும் ரூ.2 லட்சம் தர வேண்டுமென கட்டாயப் படுத்தி உள்ளனர். ஆனால் ராமர் பணம் தர முடியாது என மறுத்து விட்டார்.

    மேலும் இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 3 முறை புகார் மனு அளித் துள்ளார். திருச்சுழி, அருப்பு க்கோட்டை துணை சூப்பிரண்டு அலுவலகங்க ளிலும் புகார் அளிக்கப் பட்டது. ஆனால் போலீசார் எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை.

    இதனால் விரக்தியடைந்த ராமர் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து காப்பாற்றி னர். மேலும் புகார் மனு தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிய ளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை. ராமர் தனது கோரிக்கையை வலியுறுத்தி சில நாட்களுக்கு முன்பு மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

    கந்துவட்டி புகார் தொடர்பாக 70 வயது முதியவர் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அலைகழிக்கும் சம்பவம் சமூக ஆர்வலர்க ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    இதுபோன்ற மெத்தனம் காரணமாக பாதிக்கப்பட்ட வர்கள் விபரீத முடிவுகளை எடுக்க வாய்ப்பு உண்டு. திருமங்கலம் அருகே மையிட்டான்பட்டியை சேர்ந்த நாகலட்சுமி என்பவரின் புகாரை போலீசார் உரிய நேரத்தில் விசாரிக்காமல் மெத்தனம் காட்டியதால் அவர் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தகராறு குறித்து விசாரணை
    • போலீசார் அறிவுரை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறபள்ளியை அடுத்த டோல்கேட் முத்தன பள்ளி பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 35). அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (32).

    இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வினோத்குமாருக்கும் மாசிலாமணிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மாசிலாமணி, வினோத்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வினோத்குமார் நாட்டறம் பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நாட்டறம் பள்ளி போலீசார் மாசிலா மணியை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.

    விசாரணை முடிந்து போலீஸ் நிலையத்திற்கு வெளியே வந்து தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டில் எடுத்து வந்து போலீஸ் நிலையம் முன்பு தனது உடல் மீது ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

    உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி அவருக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வேலூர் எஸ்.பி. ஆபீசில் பரபரப்பு
    • கொடுத்த பணத்தை திருப்பி தராததால் விரக்தி

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த தார்வழி பகுதியை சேர்ந்தவர் ஜெயகோபி (வயது 40). இவருக்கு தெரிந்த நபர் ஒருவருக்கு ரூ.1.50 லட்சம் கடன் கொடுத்து உள்ளார்.

    கடனை வாங்கியவர் நீண்ட நாட்களாக திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயகோபி இன்று மதியம் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். நுழைவு வாயிலில் இருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது பாட்டிலில் தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஜெயகோபி மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனிடம் அவரை அழைத்துச் சென்றனர். அவர் அறிவுரை வழங்கி அணைக்கட்டு போலீசில் புகார் தெரிவிக்கும் படி ஜெயகோபியை அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி செய்தார்
    • தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் பரபரப்பு

    திருச்சி:

    திருச்சி சமயபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலரான குருசாமி என்பவர் மகன் மூர்த்தி (வயது64). பி.எஸ்.சி பட்டதாரியான இவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டி வந்தார். மேலும் மாநகராட்சி ஊழியர் இரண்டு பிச்சைக்காரர்களை வைத்து இவரை அடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடம் இருந்த ஓட்டுனர் உரிமம் மற்றும் 110 ரூபாய் ரொக்கத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததன் பேரில் அந்த மாநகராட்சி ஊழியரிடம் மன்னிப்பு கடிதம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இப்பிரச்சினை முடியாமல் தொடர்ந்து வந்த நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான மூர்த்தி திருச்சி மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் வரவேற்பு அறையில் டீசலை தன் உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து மீட்டதுடன் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காவல்துறையினரின் கடும் சோதனைக்கு பிறகே கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படும் நிலையில் இதுபோன்ற எரிபொருளை கொண்டு வந்து தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அங்கிருந்த மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இவர் தி.மு.க. தொண்டராக இருப்பதாக கூறப்பட்டது.


    • செல்லதுரை என்பவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
    • செல்லதுரையின் சித்தப்பா மகன் பொன்னையன் என்கின்ற துரைசாமி உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல், சின்னவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.

    சேலம்:

    சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி காலனி பகுதியை சேர்ந்த பூமாலை மகன் சின்னவர். இவர் செல்லதுரை என்பவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் ஓமலூரில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

    கும்பல் தாக்குதல்

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி, எஸ்.எம்.சி. காலனிக்கு வந்த சின்னவர், அன்றிரவு உணவு வாங்குவதற்காக வெளியே சென்றார். அப்போது, செல்லதுரையின் சித்தப்பா மகன் பொன்னையன் என்கின்ற துரைசாமி உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல், சின்னவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த சின்னவர், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு ஒரு சிலரை கைது செய்தனர்.

    10 பேர் தீக்குளிக்க முயற்சி

    இந்நிலையில், பூமாலையின் 3-வது மகன் மணி என்பவரை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மணி எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தெரியாத நிலையில், மணியின் தாய், அவரது மருமகள், 3 குழந்தைகள் உட்பட 10 பேர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்னையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்த னர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    தர்ணா

    ஆனாலும் அவர்கள் கேட்காமல், கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி, சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து மணியின் தாய் கூறும்போது, எனது 2-வது மகனை, செல்லத்துரை ஆதரவாளர்கள் கொடூரமாக தாக்கியதில் தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் எனது 3-வது மகனை எந்த காரணமும் இல்லாமல் கைது செய்து வைத்துள்ள னர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என்றார்.

    3 குழந்தைகள் உள்பட 10 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • மோசடி செய்தவர் வீட்டின் முன்பு பொதுமக்கள் குவிந்தனர்

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமை இடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் கிளை அலுவலகங்களை ஆரம்பித்து கடந்த சில ஆண்டுகளாக ஐஎப்எஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

    ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதிக வட்டி தருவதாக கூறி ஆசை காட்டி பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்தது. இதுதொடர்பாக பொரு ளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து பலரை கைது செய்தனர்.

    முக்கிய நிர்வாகிகள் இதுநாள் வரை தலைமறைவாக உள்ளனர்.

    இந்நிலையில் ராணிப் பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட பனப் பாக்கம், மேலபுலம், சயனபுரம், அசநெல்லிகுப்பம், கீழ்வெங்கடா புரம், சேந்தமங்கலம், நாகவேடு உள்ளிட்ட பகுதிகளில் பல நபர் கள் ஐஎப்எஸ் சப் ஏஜன்ட்களாக செயல்பட்டு பலகோடி ரூபாயை பொதுமக்களிடம் வசூல் செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நெமிலி ஆற்றோர தெரு பகுதியை சேர்ந்த ஐஎப்எஸ் ஏஜன்டு ஜெகந்நாதன் (36) என்பவரை மோசடி வழக் கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணையில் உள்ள நிலையில் ஜெகந்நாதன் ஜாமீனில் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நேற்று அவர் நெமிலியில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு வந்ததாக தகவல் பரவிய நிலையில், சுற்றியுள்ள கிராமப்பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஜெகந்நாதன் வீட்டின் முன்பு குவிந்தனர்.

    அப்போது ஆவேச மடைந்த சயனபுரம் பகுதியை சேர்ந்த மோகன்(35), தீரன்(33) ஆகியோர் திடீரென தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தனர்.

    அங்கிருந்தவர்கள் தடுத்து நெமிலி போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற 2 பேர் மீது தண்ணீர் ஊற்றி அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தைக்குப்பின் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் ஏஜன்டு வீட்டின்முன்பு 2 வாலிபர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த இவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
    • அவரை தடுத்து நிறுத்திய போலீசார், சதீஷ்கு மாரிடம் விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த இவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், சதீஷ்கு மாரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் போலீ சாரிடம் கூறுகையில், மெக்கானிக்கல் என்ஜினீ யரிங் படித்துள்ள நான் சேலத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக கூறியதால் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். ஆனால் ஓராண்டு ஆகியும் எந்த வட்டியும் வரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.

    இதனால் நான் மன உளைச்சலில் உள்ளேன். எனவே அந்த பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருபா(வயது 24). இவர் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
    • கடனைப் பெற்றுக் கொண்டு அவர்கள் இதுவரை பணம் செலுத்தாமல் கொலை மிரட்டல் விடுத்தனர்.

    சேலம்:

    சேலம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருபா(வயது 24). இவர் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா(20). இவர்கள் தங்களது 2 குழந்தைகளுடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தார். அப்போது மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அம்மாபேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிருபா கூறும் போது, என்னுடன் வேலை பார்த்து வரும் 3 பேருக்கு 7 லட்சம் ரூபாய் வேறொரு நபரிடம் வாங்கித் தந்தேன். ஆனால் கடனைப் பெற்றுக் கொண்டு அவர்கள் இதுவரை பணம் செலுத்தாமல் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 3 பேர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்றார்.

    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
    • சொத்து தகராறில் விபரீதம்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.

    காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி பிரபு (வயது 40) என்பவர் அவரது தாயார் முனியம்மாள் என்பவருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    தீக்குளிக்க முயற்சி

    மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்து கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கம் முன்பு பிரபு திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்தனர். சொத்து தகராறில் அவர் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    இந்த சம்மவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. லதா சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அதில் பள்ளிக்குப்பம், கொல்லமங்கலம், சின்னசேரி, அகரம் சேரி, கூத்தம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.இந்த ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்தில் இணைக்க கூடாது.

    அந்த பகுதி திருப்பத்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டால் மாவட்ட தலைநகரத்திற்கு 60 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்த ஊராட்சிகளை மையப்படுத்தி அகரம் சேரி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    இதே போல அ. கட்டுப்படி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் தங்கள் கிராமத்தின் அடையாளமாக கட்டுபடி கூட்ரோட்டில் அனைத்து மதத்தினரையும் மதிக்கும் வகையில் இருந்த நுழைவு வாயில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது.

    மீண்டும் அந்த பகுதியில் நுழைவாயில் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

    • மாற்றுத்திறனாளி கஞ்சனூர் பகுதியில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கோரியிருந்தார்.
    • மண்ணெண்ணை கேனை எடுத்து உடலின் மீது ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அடுத்த பெரிய தச்சூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). மாற்றுத்திறனாளியான இவர் கஞ்சனூர் பகுதியில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கோரியிருந்தார். இதற்கு நெடுஞ்சாலைத் துறை அனுமதியளிக்க மறுத்துவிட்டது. இதனால் மன உளைச்சலடைந்த நாகராஜ், இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒளித்து வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து உடலின் மீது ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைவாக சென்று அவர் மீது நீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ×