search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளி வாலிபர்"

    • பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட செல்வதாக கூறி பல தனியார் நிறுவனங்களிடம் பணமும் வசூல் செய்துள்ளார்.
    • அவர் கொண்டு வந்த கோப்பை மேற்கு வங்காளத்தில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியதும் உளவுத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கீழ செல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்பாபு. மாற்றுத்திறனாளி வாலிபரான இவர் இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் என்று கூறி வலம் வந்திருக்கிறார்.

    மேலும் அவர் கடந்த மாதம் லண்டனில் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த தாகவும், அதில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 20 நாடுகள் விளையாடியதாகவும், தனது தலைமையிலான இந்திய அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்றதாகவும் கூறியிருக்கிறார்.

    அதனை கூறி அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து வாழ்த்து பெற்ற வினோத்பாபு, அவர் மூலமாக முதல்-அமைச்சரையும் சந்தித்தார். முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சருடன் வினோத் பாபு கோப்பையுடன் உள்ள படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த நிலையில் வினேத் பாபு இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் இல்லை என்பதும், அவர் உலகக் கோப்பையை வென்றதாக கூறியது பொய் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து உளவுத்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    முதல்-அமைச்சரை வினோத்பாபு சந்தித்து விட்டு சென்ற மறுநாள் சர்வதேச கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் உளவுத்துறையினர் விசாரித்தனர். இதில் வினோத் பாபு கூறியது போல் பாகிஸ்தானில் எந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

    இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் ஜான்பூரில் நடந்த உள்ளூர் கிளப்பில் வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வினோத்பாபு, இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவது போல் வீடியோ எடுத்து பாகிஸ்தானில் விளையாடியதாக நம்ப வைத்துள்ளார்.

    மேலும் அவர் கொண்டு வந்த கோப்பை மேற்கு வங்காளத்தில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியதும் உளவுத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது.மேலும் அவர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட செல்வதாக கூறி பல தனியார் நிறுவனங்களிடம் பணமும் வசூல் செய்துள்ளார்.

    இந்த நிலையில் சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் என்று கூறி மோசடியில் ஈடுபட்ட வினோத்பாபுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ.பி.ஜெ.மிசைல் பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் உறுப்பினர்கள் ராமநாதபுர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் மனு அளித்தனர்.

    அதன்பேரில் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதில் பேக்கரி உரிமையாளர் உள்பட பலரிடம் வினோத் பாபு பணமோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளி கஞ்சனூர் பகுதியில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கோரியிருந்தார்.
    • மண்ணெண்ணை கேனை எடுத்து உடலின் மீது ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அடுத்த பெரிய தச்சூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). மாற்றுத்திறனாளியான இவர் கஞ்சனூர் பகுதியில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கோரியிருந்தார். இதற்கு நெடுஞ்சாலைத் துறை அனுமதியளிக்க மறுத்துவிட்டது. இதனால் மன உளைச்சலடைந்த நாகராஜ், இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒளித்து வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து உடலின் மீது ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைவாக சென்று அவர் மீது நீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • அருள்பாண்டி வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி ஆவார்.
    • எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உள்ள புத்தநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் பாண்டி (வயது 23).இவர் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு சொந்தமான நிலம் கெடிலம் ஆற்றுப்பகுதியில் உள்ளது. அந்த பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்று மாடு பிடித்துக் கொண்டிருந்த போது மாடு இழுத்து சென்றதில் அருள்பாண்டி எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் உயிர் பிழைக்க அபயக்குரலிட்டார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.

    உடனே அவர்கள் அருள்பாண்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார். இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருள் பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • புவி வெப்பமாவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்
    • கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை தொடங்கினார்

    கன்னியாகுமரி:

    பீகார் மாநிலம் கயா என்ற இடத்தை சேர்ந்தவர் ஹசன் இமாம் (வயது 25).

    போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத இவர் டெல்லி யில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற வர்.

    இவர் மத நல்லிணக்க த்தை வலியுறுத்தியும் புவி வெப்பமாதல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்ப டுத்தும் வகையிலும் கன்னியாகுமரி யில்இருந்து காஷ்மீர் வரை பேட்டரி இரு சக்கர வாகனத்தில் பிரச்சார பயணம் மேற்கொள்ள திட்ட மிட்டார். இதற்காக தொண்டு நிறுவனம் மூலம் பிரத்யேகமாக வடிவமை க்கப்பட்ட பேட்டரி இரு சக்கர வாகனம் மூலம் ஹசன் இமாம் இன்று காலை பயணத்தை தொடங்கினார். இந்த பயணம் பற்றி அவர் கூறும் போது, தினமும் 25 கிலோமீட்டர் வரை பயணம் மேற்கொள்ள இருப்ப தாகவும் கன்னியாகுமரி யிலிருந்து காஷ்மீர் சியாச்சின் பகுதி வரையிலான தூரத்தை 100 நாட்களில் சென்றடைய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.

    வழிநெடுகிலும் மக்களை சந்தித்து புவி வெப்ப மயமாதலின் ஆபத்தை விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவரது இந்த சாதனை பயணத்திற்கு சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களால் வடிவமைக்கப் பட்ட பேட்டரி சைக்கிள் ஒன்றினை தொண்டு நிறுவனம் இலவசமாக வழங்கி உள்ளது.

    ×