என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பேத்திகளுடன் தீக்குளிக்க வந்த அணைக்கட்டு பெண்
- உறவினர்கள் தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டதாக புகார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பனந்தோப்பு பட்டி பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி மஞ்சுளா (வயது 42). இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு அவரது பேத்திகளுடன் வந்தார்.
கலெக்டர் அலுவலக வாசலில் நின்ற போலீசார் மஞ்சுளா வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் மண்ணெண்ணை கேன் இருந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
தன்னை உறவினர்கள் தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். மேலும் என்னுடைய வீட்டில் இருந்த 5 பவுன் நகை, லேப்டாப், பித்தளை சாமான்கள் கட்டில் ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டனர்.
இதை தட்டி கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர். எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
இது குறித்து அணைக்கட்டு போலீசில் 4 முறையும் கலெக்டர் அலுவலகத்தில் 1 முறையும் எஸ்பி அலுவலகத்தில் ஒரு முறையும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க வந்ததாக மஞ்சுளா தெரிவித்தார்.
அவரை மனுகொடுத்து விட்டு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.






