search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Champions Cup Hockey"

    • முதல் பாதியில் இந்தியா 6-2 என முன்னிலை பெற்றது.
    • இறுதியில், இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் தென்கொரிய அணி 2-1 என வெற்றி பெற்றது. இரண்டாவது லீக் ஆட்டத்தில் மலேசிய அணி 3-1 என்ற கோல்கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி சீனாவுடன் மோதியது. போட்டியின் துவக்கம் முதலே

    ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அடுத்தடுத்து கோல்களைப் பதிவு செய்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 6-2 என

    முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது.

    இறுதியில், இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.

    • தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
    • தமிழகத்தில் காடுகளின் நிலப்பரப்பை 33 சதவீதம் அதிகரிக்கும் திட்டத்திற்கு இது வலுசேர்க்கும்.

    ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான் சீனா ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன.

    ஒவ்வொரு அணியும், லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், இந்த போட்டியில் போடப்படும் ஒவ்வொரு கோலுக்கும் 11 மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் காடுகளின் நிலப்பரப்பை 33 சதவீதம் அதிகரிக்கும் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும், லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • இந்திய அணி இன்று இரவு தொடக்க ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது.

    ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான் சீனா ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில், தென் கொரியா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் தென்கொரிய அணி 2-1 என வெற்றி பெற்றது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன. இரண்டாவது பாதியில் கொரிய அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை எதிர் கொள்கிறது. இப்போட்டி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. 

    • அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது.

    சென்னை:

    ஏழாவது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டி நாளை முதல் வருகிற 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் தென் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டியில் வழங்கப்படவுள்ள கோப்பை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வந்தது. இதனையடுத்து தலைமைசெயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோப்பையை, சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது தயப் இக்ராம் வழங்கினார்.

    சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுவதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

    ஐபிஎல் போட்டிகளை போல தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஃபேன் பார்க்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    • இந்த போட்டிக்கான அனைத்து அணிகளும் சென்னை வந்துவிட்டன.
    • போட்டி நடைபெறும் அனைத்து தினங்களிலும் 3 ஆட்டங்கள் நடக்கிறது.

    சென்னை:

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் உள்ள ஒர்டாஸ் நகரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் பெற்றது.

    கடைசியாக 2021-ம் ஆண்டு இந்தப் போட்டி வங்காதேச தலைநகர் டாக்காவில் நடந்தது. இதில் தென் கொரியா அணி ஜப்பானை தோற்கடித்து கோப்பையை வென்றது.

    இதுவரை 6 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியாவும் ( 2011, 2016, 2018) பாகிஸ்தானும் (2012, 2013, 2018) தலா 3 முறையும், தென் கொரியா ஒரு தடவையும் (2021) கோப்பையை வென்றுள்ளன. 2018-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டாக சாம்பியன் பட்டம் பெற்றன.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (3-ந் தேதி) தொடங்குகிறது. 12-ந் தேதி வரை இந்த ஹாக்கி திருவிழா நடக்கிறது.

    நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான் சீனா, ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன.

    இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    இந்த போட்டிக்கான அனைத்து அணிகளும் சென்னை வந்துவிட்டன. ஒவ்வொரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் தென் கொரியா-ஜப்பான் (மாலை 4 மணி), பாகிஸ்தான்-மலேசியா (மாலை 6.15 ), இந்தியா-சீனா (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.

    போட்டி நடைபெறும் அனைத்து தினங்களிலும் 3 ஆட்டங்கள் நடக்கிறது. 9-ந் தேதியுடன் லீக் போட்டிகள் முடிகிறது. 11-ந் தேதி அரைஇறுதி ஆட்டங்களும், 12-ந் தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவுடன் நாளை மோதுகிறது. அதைத் தொடர்ந்து ஜப்பானுடன் 4-ந் தேதியும், மலேசியாவுடன் 6-ந் தேதியும், தென் கொரியாவுடன் 7-ந் தேதியும், பாகிஸ்தானுடன் 9-ந் தேதியும் மோதுகிறது.

    ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய ஹாக்கி வீரர்களுக்கு கூடுதல் பலமாகும்.

    சீனாவில் அடுத்த மாதம் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. அதற்கு இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் பெறும் அணி பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். தென் கொரியா, பாகிஸ்தான் அணிகள் இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.

    16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுவதால் இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ரூ.300, 400, 500 விலைகளில் டிக்கெட்டுகள் உள்ளன.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

    • ஹாக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
    • போட்டிக்கான இறுதிக்கட்ட ஆயத்த பணிகளை போட்டி அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

    சென்னை:

    ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வரும் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஹாக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. போட்டிக்கான இறுதி கட்ட ஆயத்த பணிகளை போட்டி அமைப்பாளர்கள் தடபுடலாக செய்து வருகின்றனர்.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களை தயார்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க முதல் அணியாக மலேசியா கடந்த சனிக்கிழமை சென்னை வந்தது. இதைத்தொடர்ந்து தென்கொரியா, ஜப்பான் அணிகளும் சென்னை வந்தடைந்தன.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவில் விமானம் மூலம் பாகிஸ்தான் அணி சென்னை வந்தடைந்தது. அவர்களுக்கு எஸ்.டி.ஏ.டி., ஹாக்கி இந்தியா சார்பில் உற்சாமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஹாக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
    • போட்டிக்கான இறுதி கட்ட ஆயத்த பணிகளை போட்டி அமைப்பாளர்கள் தடபுடலாக செய்து வருகின்றனர்.

    சென்னை:

    ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி நடக்கிறது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஹாக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. போட்டிக்கான இறுதி கட்ட ஆயத்த பணிகளை போட்டி அமைப்பாளர்கள் தடபுடலாக செய்து வருகின்றனர்.

    இந்த போட்டியை தமிழகத்தின் எல்லா பகுதியிலும் உள்ள ரசிகர்களும் கண்டுகளிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் போட்டியின் நேரடி ஒளிபரப்பை மெகா திரையில் பார்த்து ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    போட்டிக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் வேகமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களை தயார்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க முதல் அணியாக மலேசியா கடந்த சனிக்கிழமை சென்னை வந்தது. இதைத்தொடர்ந்து தென்கொரியா, ஜப்பான் அணிகள் நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தன. விமான நிலையத்தில் இரு அணியினருக்கும் எஸ்.டி.ஏ.டி., ஹாக்கி இந்தியா சார்பில் உற்சாமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஸ்பெயின் நாட்டில் நடந்த 4 நாடுகள் போட்டியில் கலந்து கொண்டு 3-வது இடத்தை பிடித்த ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்து சேருகிறது. சீனா, பாகிஸ்தான் அணிகள் இரவில் வந்தடைகின்றன.

    இதற்கிடையே, சென்னை எழும்பூரில் உள்ள ஹாக்கி ஸ்டேடியத்தில் நேற்று மாலை 3.30 முதல் 4.30 மணி வரை தென்கொரியா அணியினர் பயிற்சி மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து ஜப்பான், மலேசியா அணிகள் தலா ஒரு மணி நேரம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.

    முன்னதாக தென்கொரியா அணியின் தலைமை பயிற்சியாளர் சியோக் யோ ஷின் கூறுகையில், 'இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய விளையாட்டுக்கு சிறந்த முறையில் தயாராக இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை பயன்படுத்தி கொள்வோம். ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதே எங்களது நோக்கமாகும்' என்றார்.

    ×