search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anurag Thakur"

    • திருத்தப்பட்ட திட்டங்களுக்கான இணையதளம் அறிமுகம்.
    • எந்தவொரு விளையாட்டு வீரரும் மூன்று திட்டங்களுக்கும் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

    விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க விருதுகள், ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கும் திருத்தப்பட்ட திட்டங்களை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் டெல்லியில் தொடங்கி வைத்தார்.

    விளையாட்டுத் துறையின் இந்த திட்டங்களுக்கான வலைதளம், தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி இணையதளம் ஆகியவற்றையும் அவர் அறிமுகப்படுத்தினார்.  


    நிகழ்ச்சியில் பேசிய மந்திரி அனுராக் சிங் தாக்கூர், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கும் திட்டம், விளையாட்டு வீரர்களுக்கான தேசிய நலன் மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் விளையாட்டு அமைச்சகம் பல முக்கிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளதாக கூறினார்.

    விளையாட்டு வீரர்கள் மிகவும் எளிதில் அணுகுவதற்கு உகந்ததாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கும் வகையில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இப்போது, தனிப்பட்ட எந்தவொரு விளையாட்டு வீரரும் அவரவர் தகுதிக்கு ஏற்ப மூன்று திட்டங்களுக்கும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 17 வகை பயிர்களின் கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
    • மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தலைநகர் டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

    நெல் உள்ளிட்ட 17 வகையான பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என தெரிவித்தார்.

    நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தி ரூ2,040 ஆக அதிகரித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.

    எள் குவிண்டாலுக்கு ரூ.523, பாசி பருப்பு குவிண்டாலுக்கு ரூ.480 உயர்த்தியும், சூரியகாந்தி விதை குவிண்டாலுக்கு ரூ.385 உயர்த்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

    • காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
    • காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு வழங்க அரசு தவறிவிட்டதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.

    காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பண்டிட்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து டெல்லியில் நேற்று கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பேசிய கெஜ்ரிவால், காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு வழங்க பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையைச் சமாளிக்க எந்த ஒரு செயல் திட்டத்தையும் வழங்கவில்லை என்று அவர் கூறினார்.

    காஷ்மீரில் கடந்த 1990-களில் இருந்த நிலை மீண்டும் திரும்புகிறது என்றும், காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

    இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் கெஜ்ரிவால் மலிவான அரசியல் செய்வதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

    ஒட்டுமொத்த தேசமும் ஜம்மு காஷ்மீர் மக்களுடன் தோளோடு தோள் நின்று பயங்கரவாதச் செயல்களைக் கண்டித்து வரும் இந்த நேரத்தில், பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட கெஜ்ரிவால் பேசவில்லை என்றும் அனுராக் தாக்கூர் கூறினார்.

    ஆயுதப் படை வீரர்களின் வீரத்தை கேள்விக்குள்ளாக்குபவர்கள் மற்றும் அதிகாரத்திற்காக தேச விரோத காலிஸ்தான் படைகளுடன் கைகோர்ப்பவர்கள், எந்த முகத்தைக் கொண்ட பயங்கரவாதத்தை கண்டனம் செய்வார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

    இந்தியா- பாகிஸ்தான் இடையே நேரடி போட்டி தொடர் 2012-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை நடைபெறவில்லை. ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேரடியாக மோதியுள்ளன.

    புதுடெல்லி:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.

    2024 முதல் 2031-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு இருந்தது.

    2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.

    கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.

    பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்குமா? என்பது தொடர்பாக மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

     மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாகூர் 

    கடந்த காலங்களில் பல நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்வதில் இருந்து விலகி இருந்தன. இது அனைவருக்கும் தெரியும். அங்கு விளையாடும் போது வீரர்கள் தாக்கப்பட்டனர். இது ஒரு பெரிய பிரச்சினையாகும்.

    சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும் போது பல்வேறு வி‌ஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். நேரம் வரும்போது என்ன செய்வது என்று பார்ப்போம். பாதுகாப்பு நிலைமையை அப்போது மதிப்பீடு செய்து முடிவு செய்வோம்.

    பாகிஸ்தான் செல்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமே முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே நேரடி போட்டி தொடர் 2012-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை நடைபெறவில்லை. ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேரடியாக மோதியுள்ளன.

    2009-ம் ஆண்டு லாகூரில் இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக சர்வதேச போட்டிகள் நடத்த முடியவில்லை.

    சமீபத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் பயணத்தில் இருந்து கடைசி நேரத்தில் விலகின என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படியுங்கள்...ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவரானார் சவுரவ் கங்குலி

    பிசிசிஐ முன்னாள் தலைவரும் பாஜக எம்.பி.யுமான அனுராக் தாகூர் மக்களவை பாஜக தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். #AnuragThakur #BJP #MansoonSession #LokSabha
    புதுடெல்லி:

    இமாச்சலப்பிரதேசம் ஹிமாபுர் தொகுதி எம்.பி.யாக உள்ள அனுராக் தாகூர் பாஜகவின் இளைஞரணி தலைவராகவும் இருந்து வந்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த அவர் சமீபத்தில் அப்பொறுப்பில் இருந்து விலகினார்.

    இந்நிலையில், நாளை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பாஜகவின் தலைமை கொறடாவாக அனுராக் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைமை கொறடாவாக இருந்த ராகேஷ் சிங் மத்திய பிரதேச மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் பதவியில் இருந்து விலகினார். 

    ஒரு கட்சியின் கொறடாவின் உத்தரவுக்கு ஏற்ப அக்கட்சி எம்பிக்கள் அவையில் செயல்பட முடியும். கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால் உறுப்பினர்களின் பதவியை பறிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×