search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alignment"

    • நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • கழிப்பிடம் தொடர்பாக குறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க அங்குள்ள ஒரு கடையில் மாநகராட்சி சார்பில் ஒரு நோட்டு வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு மாநகர பகுதிகளுக்கு செல்வோர் மட்டுமின்றி மாவட்டங்களுக்குள் பல இடங்களுக்குள் செல்வோரும் வந்து செல்கின்றனர்.

    இங்கு பயணிகளுக்கு தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அவை முறையாக பராமரிக்கப்படாததாலும், கழிவு நீர் சாலையில் சென்றதாலும் செயலற்று காணப்பட்டது.

    அதனை சீரமைக்க பல்வேறு தரப்பினரும் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து தச்சநல்லூர் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் 2 தற்காலிக கழிப்பறைகளும் சீரமைக்கப்பட்டது.மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கழிவு நீர் செல்ல தனி ஓடையும் அமைக்கப்பட்டது.

    இதனிடையே கழிப்பிடம் தொடர்பாக குறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க அங்குள்ள ஒரு கடையில் மாநகராட்சி சார்பில் ஒரு நோட்டு ைவக்கப்பட்டுள்ளது.

    அதில் பயணிகள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். தினமும் மாநகராட்சி அலுவலர்கள் அதனை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பருத்திச்சேரியில் உள்ள மின்மாற்றியானது அடித்தளம் பழுதடைந்து அருகில் உள்ள குளத்தில் சாயும் அபாய நிலையில் இருந்தது.
    • அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்னர் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி மணலி ஊராட்சி- பருத்திச்சேரியில் மின் மாற்றியானது அடித்தளம் பழுதடைந்து அருகில் உள்ள குளத்தில் சாயும் அபாய நிலையில் இருந்தது. இதனால் அந்த வழியை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்றனர். பெரும் அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்னர் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பான செய்தி மாலைமலர் நாளிதழில் வெளியானது. இதையடுத்து திருத்துறைப்பூண்டி மின்சார வாரிய பணியாளர்கள் சாய்ந்த மின்மாற்றியை சீரமைத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாலைமலர் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    • கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

    ஈரோடு:

    கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சபையின் 2021 -2022-ம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுகள் நிதிஅறிக்கை ஏற்றுக்கொள்ள பட்டுள்ளது.

    கீழ்பவானி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது ஆனால் தொடர்ந்து நடைபெற வில்லை. இதனால் கீழ்பவானி ஊஞ்சலூர் பகிர்மான கால்வாயில் பாசனம் பெறும் எம் 8 ஏ பாசன சபையிலுள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

    எனவே சீரமைப்பு வேலைகளை தொடர்ந்து செய்ய வேண்டும். கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமையையே பாதுகாக்கும் வகையில் வருகிற ஜூலை மாதம் 10-ந் தேதி சிவகிரியில் கீழ்பவானி ஆயக்கட்டு உரிமை பாதுகாப்பு நடைபெறும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×