search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vannarpettai"

    • நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தொழிலாளர்களின் பணிநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி. யூ. சி சார்பில் வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொது செயலாளர் சடையப்பன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் லட்சுமணன் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களின் பணிநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. துணைத் தலைவர் ரங்கன், மாநில குழு உறுப்பினர் முருகன், செயலாளர் முத்துகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் உலகநாதன், சேதுராமலிங்கம், மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்..

    • வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • உதவி திட்ட அலுவலர் சிவராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பை தவறவிட்ட, கல்வி அறிவு பெறாத முதியவர்களுக்கு எழுத்தறிவை புகட்டும் வகையில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

    வண்ணார்பேட்டை புதிய மாநகராட்சி பள்ளியில் தொடங்கிய வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதனை உதவி திட்ட அலுவலர் சிவராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, தலைமை ஆசிரியர் கஸ்தூரி பாய், வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பகதேவி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் வீரராகவன், எஸ்தர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சிக் குட்பட்ட வண்ணார் பேட்டை சாலை தெரு வில் மாநகராட்சி புதிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • இங்குள்ள ஒரு கட்டிடத்தின் முதல்தளத்தில் ரூ. 13.60 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக் குட்பட்ட வண்ணார் பேட்டை சாலை தெரு வில் மாநகராட்சி புதிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    புதிய வகுப்பறை

    இங்குள்ள ஒரு கட்டிடத்தின் முதல்தளத்தில் ரூ. 13.60 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டப்பட்டுள்ளது.

    அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய வகுப்பறையை திறந்து வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி. சுரேஷ், கவுன்சிலர் கந்தன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் லெனின், சுகாதார ஆய்வாளர் சங்கர நாராய ணன், தலைமை ஆசிரியர் கஸ்தூரிபாய் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி மாண வர்கள் சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கு தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • நெல்லை மாநகரப் பகுதியில் அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது
    • பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து சுத்தப்படுத்துமாறு மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாநகரப் பகுதியில் அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப் பட்டு வருகிறது. இது போன்ற போஸ் டர்கள் ஒட்டுவதாலும் ஆங்காங்கே போக்குவரத்து மிகுந்த இடங்களில் பேனர்கள் வைப்பதாலும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி விடுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து சுத்தப்படுத்துமாறு மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் தச்சை மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பொது சுவர்கள் மற்றும் கண்ட கண்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையிலான குழுவினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    ஒருபுறம் சாலையின் தடுப்பு சுவர்கள் மற்றும் சென்டர் மீடியன்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து புதுப்பிக்கப்பட்ட வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்திலும் அரசியல் கட்சியினர் போஸ்டர்கள், பேனர்கள் ஒட்டி வந்தனர். அதனையும் கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்கள் கிழித்து சுத்தப்படுத்தி வருகின்றனர்.

    மேற்கொண்டு இதேபோல் அரசியல் கட்சியினர் பொது சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டாமல் இருப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவியல் ரீதியிலான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த நிலை மாறும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • நெல்லை வண்ணார் பேட்டையில் பேரிடர் மீட்பு குழு சார்பில் மாநகர போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி இன்று நடைபெற்றது.
    • பேராச்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றில் நடந்த இந்த ஒத்திகை பயிற்சியில் மாநகர பகுதியை சேர்ந்த சுமார் 60 போலீசார் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டையில் பேரிடர் மீட்பு குழு சார்பில் மாநகர போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி இன்று நடைபெற்றது.

    மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா மேற்பார்வையில் வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றில் நடந்த இந்த ஒத்திகை பயிற்சியில் மாநகர பகுதியை சேர்ந்த சுமார் 60 போலீசார் கலந்து கொண்டனர்.

    வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதால் சென்னை யில் இருந்து பயிற்சி அளிப்பதற்காக பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாநகர போலீசாருக்கு கடந்த 2 நாட்களாக எழுத்துத்தேர்வு பயிற்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் அதில் சிக்கிய வர்களை மீட்பது எப்படி என்பது குறித்து இன்று பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது படகில் எவ்வாறு சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் போலீசாருக்கு எடுத்துரைத்தனர்.

    • நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • கழிப்பிடம் தொடர்பாக குறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க அங்குள்ள ஒரு கடையில் மாநகராட்சி சார்பில் ஒரு நோட்டு வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு மாநகர பகுதிகளுக்கு செல்வோர் மட்டுமின்றி மாவட்டங்களுக்குள் பல இடங்களுக்குள் செல்வோரும் வந்து செல்கின்றனர்.

    இங்கு பயணிகளுக்கு தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அவை முறையாக பராமரிக்கப்படாததாலும், கழிவு நீர் சாலையில் சென்றதாலும் செயலற்று காணப்பட்டது.

    அதனை சீரமைக்க பல்வேறு தரப்பினரும் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து தச்சநல்லூர் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் 2 தற்காலிக கழிப்பறைகளும் சீரமைக்கப்பட்டது.மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கழிவு நீர் செல்ல தனி ஓடையும் அமைக்கப்பட்டது.

    இதனிடையே கழிப்பிடம் தொடர்பாக குறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க அங்குள்ள ஒரு கடையில் மாநகராட்சி சார்பில் ஒரு நோட்டு ைவக்கப்பட்டுள்ளது.

    அதில் பயணிகள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். தினமும் மாநகராட்சி அலுவலர்கள் அதனை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாளை மகாராஜாநகர் செய்யது காலனியை சேர்ந்தவர் பால்வண்ணன். இவரது மனைவி ராமு (வயது 77).
    • பழக்கடைக்கு சென்று ஜூஸ் குடித்துவிட்டு பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்றுள்ளார்.

    நெல்லை:

    பாளை மகாராஜாநகர் செய்யது காலனியை சேர்ந்தவர் பால்வண்ணன். இவரது மனைவி ராமு (வயது 77). இவர் நேற்று கிருஷ்ணாபுரம் சுகன்யாநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வண்ணார்பேட்டை வந்துள்ளார்.

    பின்னர் அருகில் இருந்த பழக்கடைக்கு சென்று ஜூஸ் குடித்துவிட்டு பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்றுள்ளார்.

    அப்போது கழுத்தில் அணிந்து இருந்த 9 பவுன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாளை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி ஆங்காங்கே சிதிலமடைந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.
    • இளைஞர்களின் முயற்சியில் பல்வேறு விதமான புனரமைப்பு பணிகள் இந்த பள்ளியில் செய்யப்பட்டுள்ளன.

    நெல்லை:

    நெல்லை மாநகரின் மையப்பகுதியில் வண்ணார் பேட்டை அமைந்துள்ளது. இங்கு 2,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்கு வசிக்கும் பலர் கூலி தொழில் செய்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வருபவர்கள். அவர்களது குழந்தைகள் அப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி அங்கன்வாடி பள்ளியில் தங்களது தொடக்கப்பள்ளி படிப்பை படித்து வந்தனர்.

    தற்போது அந்த பள்ளி ஆங்காங்கே சிதிலமடைந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. தற்போது அந்த பள்ளியில் 40 குழந்தைகள் வரை படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளியை சீரமைக்க வேண்டும் என அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பல்வேறு இடங்களில் கோரிக்கை வைத்தனர்.

    தற்போது 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அப்பகுதி இளைஞர்களின் முயற்சியில் பல்வேறு விதமான புனரமைப்பு பணிகள் இந்த பள்ளியில் செய்யப்பட்டுள்ளன.

    பள்ளி முழுவதும் சிதலமடைந்த இடங்கள் புதுப்பிக்கப்பட்டு வகுப்பறை, சுற்றுச் சுவர், கரும்பலகை உள்ளிட்டவைகள் வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்கள் ஓவியங்கள், விலங்குகள், மலர்கள், பழம், காய் போன்ற ஓவியங்கள் கார்ட்டூன் சித்திரங்கள் ஆகியவை இளைஞர்களின் முயற்சியால் வரையப்பட்டுள்ளது.

    மேலும் அந்த பள்ளியில் உள்ள தோட்டம், குடிநீர் தொட்டிகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு புதிய பொலிவு பெற்றுள்ளது. இளைஞர்களின் இந்த முயற்சி அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

    இந்த பள்ளியின் அருகே செயல்பட்டு வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியும் சிதிலமடைந்து காணப்படுவதை அரசு கவனம் செலுத்தி புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மோகன் தொடக்க உரையாற்றினார்.
    • தொழிலாளர்களின் விடுப்புகளை மறுத்து ஆப்சென்ட் செய்து சம்பளத்தை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை தாமிரபரணி பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    டி.என்.எஸ்.டி.சி. மண்டல தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மோகன் தொடக்க உரையாற்றினார்.

    நெல்லை மண்டல பொதுச்செயலாளர் ஜோதி, மின்ஊழியர் மத்திய அமைப்பு மண்டல செயலாளர் கந்தசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    இதில் தொழிலாளர்களின் விடுப்புகளை மறுத்து ஆப்சென்ட் செய்து சம்பளத்தை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும், பணி செய்யாமல் ஊதியம் பெறும் சில டிரைவர்கள், கண்டக்டர்களை பணிக்கு அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் சங்க பொருளாளர் குமரகுருபரர் நன்றி கூறினார். 

    • வண்ணார்பேட்டை ஆற்று பாலம் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆயில் கொட்டிக்கிடப்பதை கவனிக்காமல் சென்றதால் தடுமாறி கீழே விழுந்தனர்.
    • போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கொட்டிக்கிடந்த ஆயில் மீது மணலை தூவி அப்புறப்படுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் இருந்து தச்சநல்லூர் செல் லும் சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்று பாலத்தில் இன்று காலை ஆயில் ஏற்றி சென்ற லாரியில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டது.

    பாலத்தில் கொட்டிய ஆயில்

    இதனால் ஆற்று பாலத்தில் ஆயில் கொட்டி கிடந்தது. இதில் இன்று காலை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கவனிக்காமல் சென்றதால் தடுமாறி கீழே விழுந்தனர்.

    ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த ஆயிலில் வழுக்கி கீழே விழுந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப் பட்டது.

    தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்ற சென்று கொட்டிக்கிடந்த ஆயில் மீது மணலை தூவி அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேர நெருக்கடிக்கு பின்னர் போக்குவரத்து சீரானது.

    • நெல்லையப்பர் கோவில் ரதவீதிகளில் பெரும் அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது.
    • ஜே.சி.பி. எந்திரம் கொண்டு விதிமுறைகளை மீறி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளின் மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகள் என   பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    வண்ணார்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக மாநகராட்சிக்கு புகார் சென்றது. இதனைத்தொடர்ந்து கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது.

    ஜே.சி.பி. எந்திரம் கொண்டு விதிமுறைகளை மீறி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளின் மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டது.

    இந்த பணியை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் கூறியதாவது:-

    வண்ணார்பேட்டையில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருப்பதாக புகார் வந்தது. அதன்பேரில் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வந்தது. சாலையோரம் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடக்கிறது.  

    தொடர்ந்து நிலையான கட்டிடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும் விரைவில் அகற்றப்படும்.

    நெல்லையப்பர் கோவில் ரதவீதிகளில் பெரும் அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. அதனை அகற்றப்பட்டு மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யாமல் இருக்க அழகு படுத்தும் பணி விரைவில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது செயற்பொறியாளர் நாராயணன், உதவி பொறியாளர் சிவசுப்பிர–மணியன், உதவி கமிஷனர் லெனின், சுகாதார அலுவலர் இளங்கோ, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சேகர், சாலை ஆய்வாளர்கள் பழனிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    நெல்லை வண்ணார்பேட்டை மேம்பால பகுதியில் முட்புதர்கள் அகற்றப்பட்டன.
    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை செல்ல பாண்டியன் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக செல்பவர்கள் மேம்பால சுவரில் சிறுநீர் கழித்தல், மதுபாட்டில்களை போட்டு உடைத்தல் உள்ளிட்ட விரும்பத்தகாத செயல்களை செய்து வந்ததால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டது. இந்த தடுப்பு கம்பிக்கும், பாலத்திற்கும் இடையே மரக்கன்றுகள் நடப்பட்டு தற்போது அவை பெரிய மரங்களாக வளர்ந்து வருகிறது.

    இந்த மரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி யில் தேவையற்ற முட்செடி கள் வளர்ந்து நிற்கிறது. இதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.  அதன் அருகிலுள்ள பரணி நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை  மனு கொடுத்தனர். மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரனிடம் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

    அதன் அடிப்படையில் இன்று தச்சை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் அங்கிருந்த தேவையற்ற செடிகளை அப்புறப்படுத்தினர். அங்கு அப்புறப்படுத்தப்பட்ட முட்செடிகள் 2 லோடு வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டது. அந்த பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்தை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பொதுமக்கள் பாராட்டினர்.
    ×