search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disaster recovery"

    • வாடிப்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பேரிடர் மீட்புப் பணி செயல் விளக்கம் நடந்தது.
    • நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் ஆலையில் வடகிழக்கு பருவ மழையையொட்டி பேரிடர் மீட்பு பணி செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடந்தது.

    முகாமிற்கு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமை தாங்கினார். இதில் தீ பேரிடர் காலங்களில் உயிர்களை எப்படி காப்பாற்றுவது, எப்படி தற்காத்துக் கொள்வது, எப்படி மீட்புப் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஆலை தொழிலாளர்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

    • தீயணைப்பு துறை சார்பில் மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு குறித்து செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
    • இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திருமுகம் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்

    கடலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் உத்தரவுபடி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் பள்ளியில் பேரிடர் மீட்பு குறித்து செயல் விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர். மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக எவ்வாறு மீட்டு வருவது என்பது குறித்தும், தீப்பற்றிய கட்டிடங்களில் தீயை எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்தும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திருமுகம் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தன்னார்வலர்களுக்கு மழை, வெள்ளம் ஏற்படும்போது பாதிக்கப்படும் மக்களை மீட்பது, கால்நடைகளை பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பேரிடர் மீட்பு தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பயிற்சி வகுப்பை முடித்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல்லையில் பேரிடர் ஏற்படும் இடங்களில் உடனடியாக விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து பயிற்சி வகுப்புகள் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தலமையில் நெல்லை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

    இதில் ஏராளமான பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மழை, வெள்ளம் ஏற்படும்போது பாதிக்கப்படும் மக்களை மீட்பது, கால்நடைகளை பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பேரிடர் மீட்பு தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பயிற்சி வகுப்பை முடித்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், பாளை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை வண்ணார் பேட்டையில் பேரிடர் மீட்பு குழு சார்பில் மாநகர போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி இன்று நடைபெற்றது.
    • பேராச்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றில் நடந்த இந்த ஒத்திகை பயிற்சியில் மாநகர பகுதியை சேர்ந்த சுமார் 60 போலீசார் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டையில் பேரிடர் மீட்பு குழு சார்பில் மாநகர போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி இன்று நடைபெற்றது.

    மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா மேற்பார்வையில் வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றில் நடந்த இந்த ஒத்திகை பயிற்சியில் மாநகர பகுதியை சேர்ந்த சுமார் 60 போலீசார் கலந்து கொண்டனர்.

    வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதால் சென்னை யில் இருந்து பயிற்சி அளிப்பதற்காக பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாநகர போலீசாருக்கு கடந்த 2 நாட்களாக எழுத்துத்தேர்வு பயிற்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் அதில் சிக்கிய வர்களை மீட்பது எப்படி என்பது குறித்து இன்று பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது படகில் எவ்வாறு சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் போலீசாருக்கு எடுத்துரைத்தனர்.

    • அறந்தாங்கியில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை நடைபெற்றது
    • பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மத்திய அரசின் ஆப்தமித்ரா திட்டம் மூலம் பேரிடர்கால மீட்பு பணிகள் குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாடு முழுவதும் பேரிடர் காலமீட்பு பணிகள் குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் 300 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த மாதம் 18ம் தேதி முதல் 12 நாட்களுக்கு பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.

    அதனை தொடர்ந்து நேற்று அறந்தாங்கியில் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒத்திகை நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்த செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பித்தனர். மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் லீமாசைமன் உள்ளிட்ட சுகாதாரத்துறை, மருத்துவத்துறை பொதுப்பணித்துறை, மின்வாரியத்து றை, தீயணைப்புத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து தமிழகம் முழுவதும் அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி கரையில் நடந்த பேரிடர் ஒத்திகை பயிற்சியை நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து தமிழகம் முழுவதும் அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள காலங்களில் ஏற்படும் பேரிடரில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று நெல்லை வண்ணார்பேட்டை, வி.கே.புரம், முக்கூடல், களக்காடு, கூத்தங்குழி ஆகிய 5 இடங்களில் தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மற்றும் பேரிடர் பயிற்சி பெற்றவர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்களுடன் இணைந்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி கரையில் நடந்த பேரிடர் ஒத்திகை பயிற்சியை நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.

    ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் அதில் சிக்கி தவிப்பவர்களை தண்ணீர் கேன், கம்பு, டியூப் உள்ளிட்ட எளிமையான பொருட்கள், பயனற்ற பொருட்களை கொண்டு எவ்வாறு மீட்பது என்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும் தண்ணீரில் மூழ்கியவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு தத்ரூபமாக முதல் உதவி சிகிச்சை அளித்துக் காட்டினர்.

    இதனை பார்வையிட்ட பொது–மக்களிடம் ஒவ்வொருவரும் கட்டாயம் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    தொடர்ந்து மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்கள் என்ன? என்பதை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி விளக்கம் அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள், பாளை தீயணைப்பு நிலைய பொறுப்பாளர் பால–சுப்பிரமணியன், தேசிய பேரிடர் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பேரிடர்களை கையாள்வது தொடர்பாக 5500 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதன்படி தேனி மாவட்டத்தில் 300 தன்னார்வலர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது.
    • தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    தேனி:

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை மூலமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பேரிடர்களை கையாள்வது தொடர்பாக 5500 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதன்படி தேனி மாவட்டத்தில் 300 தன்னார்வலர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது.

    தேனி மாவட்டத்தில் மழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட, செஞ்சிலுவை சங்கம், நேருயுவகேந்திரா, ஊர்காவல்படை, தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாக 300 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் நடைபெறும் ஆப்தமித்ரா பயிற்சியினை, மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தீயணைப்புத் துறை அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்பு துறை அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முதற்கட்டமாக 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி ஒரு பயனுள்ள பயிற்சியாகும்.

    பேரிடர் தொடர்பான இப்பயிற்சி முடியும் போது தேனி மாவட்டத்தை சேர்ந்த 200 தன்னார்வலர்களும் பேரிடர் தொடர்பான மீட்பு பணியில் ஈடுபட தகுதியானவர்களாக இருப்பீர்கள். தேனி மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் பேரிடர் ஏற்பட்டால் 200 நபர்களும் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    பயிற்சியில் கலந்து கொண்ட 200 தன்னார்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு வளங்கள் ஆவார். இப்பயிற்சியின் போது ஒவ்வொரு தன்னார்வலருக்கும் ரூ.9,000 மதிப்பிலான (டார்ச், லைஃப் ஜாக்கெட், பாதுகாப்பு கையுறை, கத்தி, முதலுதவி பெட்டி, கேஸ் லைட்டர், விசில், தண்ணீர் பாட்டில், கொசுவலை, சீருடை, ரெயின் கோட், ஜி.யு.எம் பூட்ஸ், பாதுகாப்பு கண்ணாடிகள், பாதுகாப்பு தலைக்கவசம்) 14 வகை மீட்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.

    மேலும், பயிற்சியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் ரூ.1000 மதிப்பிலான காப்பீடு செய்யப்பட உள்ளது. என்று மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.

    ×