search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bushes"

    நெல்லை வண்ணார்பேட்டை மேம்பால பகுதியில் முட்புதர்கள் அகற்றப்பட்டன.
    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை செல்ல பாண்டியன் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக செல்பவர்கள் மேம்பால சுவரில் சிறுநீர் கழித்தல், மதுபாட்டில்களை போட்டு உடைத்தல் உள்ளிட்ட விரும்பத்தகாத செயல்களை செய்து வந்ததால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டது. இந்த தடுப்பு கம்பிக்கும், பாலத்திற்கும் இடையே மரக்கன்றுகள் நடப்பட்டு தற்போது அவை பெரிய மரங்களாக வளர்ந்து வருகிறது.

    இந்த மரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி யில் தேவையற்ற முட்செடி கள் வளர்ந்து நிற்கிறது. இதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.  அதன் அருகிலுள்ள பரணி நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை  மனு கொடுத்தனர். மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரனிடம் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

    அதன் அடிப்படையில் இன்று தச்சை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் அங்கிருந்த தேவையற்ற செடிகளை அப்புறப்படுத்தினர். அங்கு அப்புறப்படுத்தப்பட்ட முட்செடிகள் 2 லோடு வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டது. அந்த பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்தை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பொதுமக்கள் பாராட்டினர்.
    ×