search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AL Vijay"

    • விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் வெளியான தியா படத்தில் சாய்பல்லவியுடன் இணைந்து நடித்தவர் நாகசவுரியா.
    • இவருக்கு தற்போது திருமணம் முடிவாகி உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் வெளியான தியா படத்தில் சாய்பல்லவியுடன் இணைந்து நடித்தவர் நாகசவுரியா, தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி இளம் நடிகராக உயர்ந்துள்ளார். இதுவரை நாகசவுரியா நடிப்பில் ௨௫ படங்கள் வந்துள்ளன. சமீபத்தில் நாகசவுரியாவுக்கும், சாய்பல்லவிக்கும் ஏற்கனவே மோதல் ஏற்பட்டு பரபரப்பானது. சாய்பல்லவி படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் தாமதமாகவே வருவார் என்றும், அவருக்கு நடிப்பில் ஈடுபாடு இல்லாமல் எல்லோரையும் கஷ்டப்படுத்தினார் என்றும் நாகசவுரியா குற்றம் சாட்டினார்.

    நாகசவுரியா

    நாகசவுரியா

     

    இதனை மறுத்த சாய்பல்லவி, ''படப்பிடிப்பில் நான் மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுத்ததாக நாகசவுரியா சொன்னது வியப்பாக உள்ளது. இதுபோல் யாரும் என்மீது குற்றம் சொன்னது இல்லை" என்று பதிலடி கொடுத்து இருந்தார். இந்த மோதல் பரபரப்பானது.

     

    நாகசவுரியா

    நாகசவுரியா

    இந்நிலையில் நாகசவுரியாவுக்கு தற்போது திருமணம் முடிவாகி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த அனிஷா ஷெட்டி என்பவரை மணக்கிறார். இவர்கள் திருமணம் வருகிற 19-ந் தேதி பெங்களூருவில் நடக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள் திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படம் ’அச்சம் என்பது இல்லையே’.
    • இப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, தேவி உள்ளிட்ட பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தார். இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி கடந்த ஆண்டு 'தலைவி' படத்தை இயக்கி அனைவரையும் கவர்ந்தார்.

     

    அச்சம் என்பது இல்லையே படக்குழு

    அச்சம் என்பது இல்லையே படக்குழு

    இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏ.எல்.உதயா மற்றும் ஏ.எல்.விஜய்யின் தாயாரும், எ.எல்.அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை காலமானார்.
    • இவருடைய மறைவிற்கு திரைதுறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    2007-இல் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். அதன்பின் மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், தலைவா உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் எ.எல்.அழகப்பனின் மகன் மற்றும் நடிகர் ஏ.எல்.உதயாவின் சதோதரர்.


    இந்நிலையில் ஏ.எல்.உதயா மற்றும் ஏ.எல்.விஜய்யின் தாயாரும், எ.எல்.அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை இன்று காலை இயற்கை எய்தினார். இவரின் மறைவிற்கு திரைதுறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். #Jayalalithaa #JayalalithaaBiopic #Kangana
    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு தமிழ் சினிமா இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக உருவாக்கி வருகிறார்.

    விஜய் இயக்கும் படமான ‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில் அவரது தேதிகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் தற்போது, ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

    இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இவர் ஜான்சி ராணியாக நடித்து இயக்கிய ‘மணிகர்ணிகா’ படம் பெரிய வெற்றிபெற்றது. திறமைக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லாத கங்கனா நடித்தால் தலைவி படம் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாய் அமையும்.

    ஏ.எல்.விஜய் இயக்கும் முதல் பயோபிக் ‘தலைவி’. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கிறார். மேலும், பாகுபலி படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு இணை கதாசிரியராக இணைய, படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

    கவுதம் மேனன் இயக்கும் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திரசேகரும் நடிக்கின்றனர். பிரியதர்ஷினி படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கின்றார். லிங்குசாமி படத்தில் நயன்தாரா நடிக்கலாம் என பேசப்பட்டு வருகிறது. ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


    எங்களால் ஜெயலலிதாவாக கங்கனாவை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நித்யா மேனன் ஜெயலலிதா வேடத்துக்கு சரியாக பொருந்தினார், தென் இந்தியாவில் எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது ஒரு இந்தி நடிகையை, கவர்ச்சியாக நடித்து சர்ச்சைகளை உண்டாக்கும் நடிகையை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வைப்பதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். #Jayalalithaa #JayalalithaaBiopic #Kangana
    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்த கதாபாத்திரம் அனைவருக்கும் சர்ப்ரைசாக இருக்கும் என்றும் சமுத்திரக்கனி கூறினார். #JayalalithaaBiopic #Samuthirakani
    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    ஜெயலலிதா வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது. சசிகலா வேடத்தில் சாய் பல்லவியை எதிர்பார்க்கலாம் என்று சில தகவல்களும் வந்தன. ஆனால் இதுபற்றி ஏ.எல்.விஜய் எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் தெரிவிக்கல்லை.



    இதற்கிடையில் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் சமுத்திரக்கனி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த செய்தியை அவரே உறுதிப்படுத்தியும் இருக்கிறார். இதுகுறித்து நடிகர் சமுத்திரக்கனி, ‘ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் ஏ.எல்.விஜய், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க என்னிடம் கேட்டார். நானும் சம்மதம் தெரிவித்துவிட்டேன்.

    ஆனால், அது எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது சர்ப்ரைஸ். படத்தின் ரிலீசின் போதுதான் இந்த சர்ப்ரைஸ் உடையும் என்று தெரிவித்துள்ளார். ஜெயலிலதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் ஏ.எல்.விஜய் தவிர, இயக்குநர் பாரதிராஜா மற்றும் பிரியதர்ஷினி ஈடுபட்டுள்ளார். #JayalalithaaBiopic #Samuthirakani #ALVIjay

    கிரீடம், மதராசபட்டிணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல் விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Jayalalithaa #ALVijay #ADMK
    சென்னை:

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் பல கோலிவுட் இயக்குநர்கள் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக செய்திகள்  அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தன.

    இந்நிலையில், தற்போது ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்கான திரைக்கதையை இயக்குனர் ஏ.எல்.விஜய் எழுதி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் அஜித் நடித்த கிரீடம், மதராச பட்டணம், சைவம் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சாய்பல்லவி நடித்த 'தியா' என்ற படத்தை இயக்கியிருந்தார்.



    திரைக்கதை அமைக்கும் பணி முடிந்தவுடன் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கும் நடிகை குறித்து ஏ.எல் விஜய் முடிவு செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த கேரக்டரில் நடிக்க த்ரிஷா, கீர்த்திசுரேஷ், நயன்தாரா உள்பட முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    மூன்று மொழிகளில் வெளியாக உள்ள ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முதல் பாதி அவருடைய திரையுலக வாழ்க்கை குறித்து இரண்டாம் பாதி அரசியல் வாழ்க்கை குறித்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    விபிரி மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தின் அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.
    நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த இயக்குனர் விஜய்க்கு விரைவில் 2-வது திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #DirectorVijay #AmalaPaul
    தமிழ் பட உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் விஜய்யின் தலைவா, அஜித்தின் கிரீடம், விக்ரமின் தாண்டவம், தெய்வத்திருமகள், ஆர்யாவை வைத்து மதராச பட்டினம், ஜெயம் ரவியின் வனமகன் மற்றும் சைவம், இது என்ன மயக்கம், தேவி, தியா ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இப்போது பிரபுதேவா நடிக்கும் லட்சுமி, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் ஆகிய படங்களை டைரக்டு செய்து வருகிறார். விஜய்க்கும் பிரபல நடிகை அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து 2014-ல் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இரண்டு வருடங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

    பிரிவு குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது, “நம்பிக்கை, நேர்மை இல்லாது வாழ்வதில் பயன் இல்லை. எங்கள் பிரிவுக்கு இதுவே காரணம். இயல்பாகவே சமுதாயத்தின் மீதும் பெண்கள் மீதும் அதிக அக்கறை கொண்டவன் நான். எனது இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெண்களின் சுயமரியாதையை பிரதிபலித்தன” என்றார்.

    பின்னர் இருவரும் சுமூகமாக பேசி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் விவாகரத்து செய்து கொண்டார்கள். அமலாபால் தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.



    விஜய்க்கு 2-வது திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் விரும்பினர். அதற்கு இத்தனை நாட்களாக மறுத்து வந்த இயக்குனர் விஜய் இப்போது சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

    மணப்பெண்ணை தேர்வு செய்யும் படலம் தீவிரமாக நடக்கிறது. விஜய்க்கு விரைவில் 2-வது திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்பாக அவர் கைவசம் உள்ள 2 படங்களையும் வேகமாக முடிக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளார்.
    ×