ஏ.எல்.விஜய்யுடன் இணைந்த அருண் விஜய்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படம் ’அச்சம் என்பது இல்லையே’.இப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அருண் விஜய்
அருண் விஜய்
Published on

அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, தேவி உள்ளிட்ட பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தார். இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி கடந்த ஆண்டு 'தலைவி' படத்தை இயக்கி அனைவரையும் கவர்ந்தார்.

அச்சம் என்பது இல்லையே படக்குழு
அச்சம் என்பது இல்லையே படக்குழு

அச்சம் என்பது இல்லையே படக்குழு

இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com