search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aishwarya Rai"

    `ராவணன்' படத்திற்கு பிறகு சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இருவரும் ‘குளோப் ஜாமுன்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். #AishwaryaRai #AbhishekBachchan
    மணிரத்னம் இயக்கத்தில் 2007–ல் தமிழ், இந்தியில் திரைக்கு வந்த ‘குரு’ படத்தில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக நடித்து இருந்தனர். குரு படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் `ராவணன்' என்ற பெயரிலும் இந்தியில் `ராவண்' என்ற பெயரிலும் தயாரான படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படம் 2010–ல் வெளிவந்தது. 

    அதன்பிறகு இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் இருவரும் ‘குளோப் ஜாமுன்’ என்ற புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

    இந்த படத்தில் நடிப்பது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறும்போது, ‘‘இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு வருடத்துக்கு முன்பே படத்தின் கதையை சொல்லிவிட்டார். மிகவும் பிடித்து இருந்தது. இப்போது அதில் நானும், அபிஷேக் பச்சனும் இணைந்து அந்த படத்தில் நடிக்கிறோம்’’ என்றார். 



    ஐஸ்வர்யா ராய் மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது அபிஷேக் பச்சனுக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிய முடிவு செய்துள்ளனர் என்றும் இந்தி பட உலகில் கிசுகிசு பரவிய நிலையில், இருவரும் சேர்ந்து நடிப்பதாக அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #AishwaryaRai #AbhishekBachchan

    கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2' படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் `2.0' படத்தின் டீசர் ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் இந்த படம் 3டியில் உருவாகி இருக்கிறது.

    படம் நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கடந்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் டீசர், டிரைலருக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் 2.0 படத்தின் டீசர் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.



    டீசர் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகலாம் என படத்தின் ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பே லீக் ஆனது. இதனால் அதிர்ச்சியான படக்குழு கிராபிக்ஸ் வேலைகளை மும்முரப்படுத்த தொடங்கியது. #2Point0 #Rajinikanth

    ஐஸ்வர்யாராய் - அபிஷேக் பச்சன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு பதில் அளித்த அபிஷேக் தவறான தகவலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். #AbhishekBachchan #AishwaryaRai
    ஐஸ்வர்யாராயும், இந்தி நடிகர் அபிஷேக் பச்சனும் கடந்த 2007-ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. ஐஸ்வர்யாராய்க்கும், அபிஷேக்பச்சனுக்கும் சமீப காலமாக நல்ல உறவு இல்லை என்று அடிக்கடி தகவல் பரவி வந்தது. அபிஷேக்பச்சன் தாய் ஜெயபாதுரிக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடப்பதாகவும் கூறப்பட்டது. அபிஷேக் பச்சன் சகோதரி சுவேதாவுக்கும், ஐஸ்வர்யாராயை பிடிக்கவில்லை என்றும் பேசப்பட்டது. 

    திருமணத்துக்கு பிறகும் ஐஸ்வர்யாராய் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். வேறு நடிகர்களுடன் அவர் நெருக்கமாக நடிப்பதை அபிஷேக் பச்சன் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. மாமியார் சண்டை காரணமாக மும்பையில் ரூ.21 கோடியில் புதிதாக வாங்கிய வீட்டுக்கு தனிக்குடித்தனம் செல்ல அபிஷேக் பச்சனிடம் ஐஸ்வர்யாராய் வற்புறுத்தியதாகவும் தகவல் வந்தது.

    இந்த நிலையில் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது. இருவரும் லண்டனுக்கு சென்று திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் சண்டை போட்டதாக வீடியோவும் வெளியானது. 



    இதற்கு தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ள அபிஷேக்பச்சன், ‘‘தயவு செய்து தவறான தகவலை வெளியிட வேண்டாம். பொறுப்புணர்வுடன் உண்மை தகவலை மட்டும் வெளிப்படுத்துங்கள்’’ என்று கூறியுள்ளார். #AbhishekBachchan #AishwaryaRai

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படத்தில் 2 எந்திரங்களுக்கு இடையேயான காதல் பற்றி எழுதியிருப்பதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறினார். #2Point0 #Rajinikanth
    பாடலாசிரியர் மதன் கார்க்கி எந்திரன் முதல் பாகத்துக்கு சில பாடல்களை எழுதினார். அதன் அடுத்த பாகமான 2.0-விலும் பாடல்கள் எழுதி இருக்கிறார். இரண்டு படங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டதற்கு ’எந்திரன்’ படத்துல பாட்டு எழுதும்போது ஒருதலைக் காதல் பற்றி சொன்னேன்.

    ஒரு பெண் மீது எந்திரத்துக்கு வரும் காதலை எழுதினேன். `2.0’ படத்துல இரண்டு எந்திரங்களுக்கு இடையேயான காதலை எழுதியிருக்கேன்’ என்று கூறி இருக்கிறார். இதன்மூலம் 2.0 படத்தில் ரஜினி, எமி இருவருமே காதல் செய்யும் எந்திரங்களாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது.



    ஷங்கர் இயக்கியிருக்கும் இந்த படம் வருகிற நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். #2Point0 #Rajinikanth

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணியால் படத்தின் பட்ஜெட் ரூ.550 கோடி வரை உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகத்தை 2.0 என்ற பெயரில் பிரம்மாண்டமாக எடுக்கின்றனர். படத்தில் கதாநாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமாரும் நடிக்க படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. 

    கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் சில சிக்கல்கள் நீடிப்பதால் படத்தின் பட்ஜெட் மேலும் 100 கோடி வரை உயரும் நிலை உருவாகி உள்ளது. படத்தை எடுத்தபோது கிராபிக்ஸ் காட்சிகளுக்கு சரியான திட்டமிடல் இல்லாமல் எடுத்து இருப்பதாகவும், அதனால் தான் கிராபிக்சுக்கு திட்டமிடப்பட்ட பட்ஜெட் ஏறியதாகவும் கூறுகிறார்கள்.



    படப்பிடிப்பு முடிந்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சில முறை தள்ளிப்போயுள்ள நிலையில், படம் வருகிற ஜனவரி 25--ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. 

    இந்த நிலையில், கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் இயக்குநர் ஷங்கருக்கு திருப்தி ஏற்படாததால், கிராபிக்ஸ் பணிக்கு மேலும் மெனக்கிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே படம் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், பட்ஜெட்டில் மேலும் ரூ.100 கோடி கூடியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #2Point0 #Rajinikanth
    ரஜினி நடிப்பில் காலா படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய `காலா' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பிசியாகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை டார்ஜிலிங்கில் துவங்கிய நிலையில், படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

    இதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் வருகிற ஆகஸ்டில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போக உள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், கிராபிக்ஸ் பணிகளால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது. 2.0 ரிலீஸ் தள்ளிப்போனதால், காலா படம் ரிலீசாகியது.



    இந்த நிலையில், 2.0 படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகி இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் மற்றும் ஏமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கதை சினிமா வட்டாரங்களில் வைரலாக பரவி வருகிறது. #2Point0 #Rajinikanth
    உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ‌ஷங்கர், இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகளில் தான் சிக்கல் எழுந்துள்ளது.

    ‌ஷங்கர் முதலில் கொடுத்த நிறுவனம் செய்து காண்பித்த கிராபிக்ஸ் வேலைகளில் ‌ஷங்கருக்கு திருப்தி இல்லை என்பதால், இப்போது மீண்டும் கிராபிக்ஸுக்காக கொடுத்திருக்கிறார்கள். எனவே படம் தயாராகி திரையரங்குகளை அடைய 2019 ஆகி விடும் என்கிறார்கள். இந்நிலையில் 2.0 படத்தின் கதை என்று ஒரு கதை தமிழ் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. செல்போன் வருகையால் உலகில் பறவை இனங்கள் குறைந்து வருகின்றன.



    சிட்டுக்குருவி போன்ற அரிய வகை பறவை இனங்கள் அழிந்துவிட்டதாக சுற்றுசூழல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அப்படி அழியப்படும் பறவை இனத்தை சேர்ந்த ஒரு பறவைக்கு அரிய சக்திகள் கிடைக்கிறது. அந்த சக்திகளை கொண்டு உலகம் முழுக்க இருக்கும் செல்போன்களை செயலிழக்க வைக்கிறது அந்த வில்லன்.

    மேலும் உலகையே தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரவும் முயற்சிக்கிறது அந்த பறவை. இந்த பிரச்சினையில் இருந்து உலகத்தை காப்பாற்ற ஒரு ரோபோவை உருவாக்குகிறார் வசீகரன். அந்த ரோபோவுக்கும் பறவை வில்லனுக்குமான மோதல் தான் படம் என்கிறார்கள். பறவை வில்லனாக சக்தி வாய்ந்தவராக நடிக்கிறார் அக்‌‌ஷய் குமார்.



    படத்தின் நீளம் வெறும் 100 நிமிடங்கள் தான் என்பதால் ஒவ்வொரு காட்சியும் ரசிகனை இருக்கை நுனியிலேயே இருக்க வைத்திருக்கும் என்கிறார்கள். படத்தின் வேகத்தை தடை போடக்கூடாது என்பதற்காக படத்தில் காதல், காமெடி காட்சிகள் கூட இல்லையாம். முழு ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி ஏற்படுமாம். #2Point0 #Rajinikanth #AமshayKumar

    அனேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அமைரா தஸ்தூர், திருமணத்திற்கு பிறகு கூட ஐஸ்வர்யா ராய், வித்யா பாலனின் புகழ் சரியவில்லை சரியவில்லை, அவர்கள் தனது ரோல்மாடல் என்று கூறினார். #AmyraDastur
    அனேகன் படத்தில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். இந்தியில் பிசியாக இருக்கும் அமைரா, ஜிவி பிரகாஷ் நடிக்கும் 3டி படத்தில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில்,

    ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் தான் எனது ரோல்மாடல். இவங்க 2 பேருமே ஹீரோயின்கறதை தாண்டி சர்வதேச அளவுல இந்தியாவுக்கு ஒரு சினிமா அடையாளமாக திகழ்கிறார்கள். அதனால் இவர்களை மிகவும் பிடிக்கும். வித்யாபாலன் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் 2 விதமான படங்களிலுமே கலக்குகிறார். திருமணத்துக்கு பிறகு கூட 2 பேருக்கும் அவர்களின் புகழ் சிறிதுகூட குறையவில்லை. ஹீரோயின் என்றால் அப்படி இருக்கணும். 



    அமீர் கான், ஹிருத்திக் ரோ‌ஷன். இரண்டு பேரின் படங்களையும் முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவேன். தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (சொல்லும்போதே பரவசமடைகிறார்). யெஸ்... தனுஷ் கூட நடித்தாகிவிட்டது. அடுத்தது ரஜினி சார் உடன் நடிக்க வேண்டும். சின்ன வேடமாக இருந்தால் கூட பரவாயில்லை. விக்ரமையும் ரொம்ப பிடிக்கும். சேது படத்தை 5 முறை பார்த்துருக்கேன். #AmyraDastur

    கேன்ஸ் திரைப்படவிழாவில் கவர்ச்சி உடையணிந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்து நடிகை ஐஸ்வர்யா ராய் அனைவரையும் கவர்ந்தார். #AishwaryaRai #Cannes2018
    சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் தனுஷ், பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ஹூமா குரேஷி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் பிரான்ஸ் சென்றுள்ளனர். 

    இவர்கள் அனைவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வித்தியாசமான கவர்ச்சி உடையணிந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்து அனைவரின் பார்வையையும் கவர்ந்தனர். 

    இதில் ஐஸ்வர்யா ராய்யின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பிரான்ஸில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அதில், அவரது மகளுக்கு முத்தம் கொடுத்த புகைப்படமும் அடங்கும். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



    அதுமட்டுமின்றி இன்று கவர்ச்சியான உடையுடன் வந்த ஐஸ்வர்யா ராய், அனைவரையும் கவர்ந்தார். #AishwaryaRai #Cannes2018

    ×