என் மலர்
சினிமா

விஸ்வரூபம்-2 ரிலீஸை தொடர்ந்து வெளியாகும் 2.0 டீசர்
கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2' படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் `2.0' படத்தின் டீசர் ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் இந்த படம் 3டியில் உருவாகி இருக்கிறது.
படம் நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கடந்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் டீசர், டிரைலருக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் 2.0 படத்தின் டீசர் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

டீசர் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகலாம் என படத்தின் ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பே லீக் ஆனது. இதனால் அதிர்ச்சியான படக்குழு கிராபிக்ஸ் வேலைகளை மும்முரப்படுத்த தொடங்கியது. #2Point0 #Rajinikanth
Next Story






