search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AI"

    • ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்களின் படி அதிபர் புதின் நிலை தடுமாறி கீழே விழுந்திருப்பதை போன்று காட்சியளிக்கிறது.
    • முன்னதாக மார்ச் மாதமும் இதே போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தி மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்களின் படி அதிபர் புதின் நிலை தடுமாறி கீழே விழும் போது தரையில் கைகளை வைப்பதை போன்றும், கீழே படுத்திருக்கும் நிலையிலும் காட்சியளிக்கிறது.

    "புதின் கீழே விழுந்தார். முன்னாள் சோவியத் உறுப்பினர்களை சந்தித்த பின் அதிபர் புதின் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை உதவியாளர்கள் மீட்டனர்" எனும் தலைப்பில் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இணைய தேடல்களில் தி மாஸ்கோ டைம்ஸ் இவ்வாறு எந்த செய்தியையும் பதிவிடவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்கிரீன்ஷாட் மே 16 ஆம் தேதி காலை பதிவிடப்பட்டு இருக்கிறது. ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு மே 12 ஆம் தேதி உருவாக்கப்பட்டுள்ளன.

    முன்னதாக மார்ச் மாதமும் இதே போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதுவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும். அந்த வகையில், தற்போது வைரலாகும் தகவலில் உண்மையில்லை என்று உறுதியாகி இருக்கிறது.

    • ஒபன்ஏஐ நிறுவனத்தில் அதிக முதலீடு செய்ய இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது.
    • தரவுகளை பயன்படுத்தியற்காக மைக்ரோசாப்ட் மீது வழக்கு தொடர எலான் மஸ்க் முடிவு.

    டுவிட்டர் பயனர்களின் தரவுகளை கொண்டு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு பயிற்சி அளித்ததாக எலான் மஸ்க் மைக்ரோசாப்ட் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சட்டவிரோதமாக டுவிட்டர் தரவுகளை பயன்படுத்தியற்காக மைக்ரோசாப்ட் மீது வழக்கு தொடரப் போவதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

    "அவர்கள் டுவிட்டர் தரவுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவுக்கு பயிற்சி அளித்துள்ளனர். வழக்கு தொடர்வதற்கான நேரம்," என்று எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார்.

     

    வொர்ட் மற்றும் எக்சல் போன்ற சேவைகளில் சாட்ஜிபிடி சார்ந்த ஏஐ ஒருங்கிணைக்கப்பட இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஜனவரி மாத வாக்கில் அறிவித்தது. இதோடு சாட்ஜிபிடி சேவையை உருவாக்கிய ஒபன்ஏஐ நிறுவனத்தில் அதிக முதலீடு செய்ய இருப்பதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் பயன்பாட்டுக்கு வந்த சாட்ஜிபிடி சேவை உலகளவில் பேசுபொருளாக மாறியது. பலர் சாட்ஜிபிடி சேவையை புகழ்ந்தும், பலர் இதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். சாட்ஜிபிடி சேவை பயனர் சந்தேகங்களுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கிறது.

    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கும் புகைப்படங்கள் சமீப காலங்களில் வைரலாகி வருகின்றன.
    • இவ்வாறு ஏஐ நிபுணர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய டெக் தலைவர்களின் படங்கள் வெளியாகி உள்ளன.

    செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் பெருமளவில் அதிகரித்து வருகிறது. பலர் ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டு தங்களுக்கு தேவையான பல வேலைகளை சுலபமாக முடிக்க கற்றுக் கொண்டு வருகின்றனர். மேலும் பலர் ஏ.ஐ. டூல்களை கொண்டு தங்கள் கற்பனைக்கு தீனிப்போடும் வகையில் வித்தியாசமான படங்களை உருவாக்கி வருகின்றனர்.

    இவ்வாறு சிலர் உருவாக்கிய படங்கள் வைரலானதோடு, சர்ச்சைகளுக்கும் உள்ளானது. டெனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம், போப் பிரான்சிஸ் பஃபர் ஜாக்கெட் அணிந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் அதிர செய்தது. இதில் டொனால்ட் டிரம்ப் புகைப்படத்தை வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

    பலர் ஏ.ஐ. உருவாக்கிய படங்கள் உண்மை என்றே நம்பிவிட்டனர். இந்த அளவுக்கு மக்களை குழப்பும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தனது பணியை சிறப்பாக செய்து அசத்துகிறது. இந்த வரிசையில் ஏ.ஐ. நிபுணரான கோகுல் பிள்ளா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கிய டெக் துறை தலைவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

    இவர் உருவாக்கிய புகைப்படங்கள் டெக் துறை தலைவர்கள் ஏழையாக இருந்தால், எப்படி காட்சியளிப்பர் என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளன. இவற்றை உருவாக்க கோகுல் பிள்ளா மிட்ஜர்னி (Midjourney) எனும் ஏ.ஐ. மென்பொருளை பயன்படுத்தி இருக்கிறார். இவர் உருவாக்கி இருக்கும் புகைப்படங்கள் டெக் தலைவர்கள் உண்மையில் ஏழையாக இருப்பதை போன்றே காட்சியளிக்கின்றன.

    கோகுல் புள்ளா உருவாக்கிய ஏ.ஐ. புகைப்படங்களை கீழே காணலாம்...

     

    ஏ.ஐ. மூலம் உருவான பில் கேட்ஸ்-இன் படம்
    ஏ.ஐ. மூலம் உருவான பில் கேட்ஸ்-இன் படம்
    ஏ.ஐ. மூலம் உருவான ஜெஃப் பெசோஸ்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான ஜெஃப் பெசோஸ்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான எலான் மஸ்க்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான எலான் மஸ்க்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான மார்க் ஜூக்கர்பர்க்-இன் படம்

    ஏ.ஐ. மூலம் உருவான மார்க் ஜூக்கர்பர்க்-இன் படம்

     

     

     

    ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களது வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை கொண்ட சாதனங்களை உருவாக்கி வருகின்றன. சிரி, கூகுள் அசிஸ்டண்ட், கார்டனா போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகள் நம்மிடையே பிரபலமாகி வரும் நிலையில், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் இதுபோன்ற சேவைகளில் ஆர்வம் செலுத்தாமல் இருந்தன.

    அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனமும் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கின் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி குழுவினர் 2018 ஆம் ஆண்டு முதல் செயற்கை நுண்ணறி சார்ந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை உருவாக்கி வருகின்றன.



    ஃபேஸ்புக் நிறுவனம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை உருவாக்கி அவற்றில் ஃபேஸ்புக்கின் சொந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கான பணிகள்  ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

    அந்த வகையில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை போர்டல் ஸ்மார்ட் டிய்ப்ளே, ஆகுலஸ் ஹெட்செட்கள் மற்றும் எதிர்கால ஆக்மென்டெட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனங்களில் வழங்கப்படம் என தெரிகிறது. முன்னதாக 2015 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் எம் அசிஸ்டண்ட் சேவையை மெசஞ்சரில் அறிமுகம் செய்தது.
    ×