search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aanmeega kalanjiyam"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நவக்கிரகங்களில் முக்கிய சுபகிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார்.
    • பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார்.

    நவக்கிரகங்களில் முக்கிய சுபகிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார்.

    பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார்.

    அதனால் மனம் மகிழ்ந்த ஈசன், பார்க்கவன் விரும்பியவாறே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார்.

    அசுரர்கள் இதனையறிந்து சுக்கிரனை தங்களது குல குருவாக கொண்டனர்.

    தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறந்த அசுரர்கள், சுக்கிராச் சாரியாரின் அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் உயிர்பெற்று எழுந்தனர்.

    இந்நிலையில் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

    தேவர்கள் அனைவரும் சென்று சிவ பெருமானிடம் முறையிட்டனர்.

    தான் கொடுத்த வர பலத்தை தவறான வழியில் பயன்படுத்தும் அசுர குருவாகிய சுக்கிரனை சிவபெருமான் விழுங்கி விட்டார்.

    பலகாலம் சிவனின் வயிற்றில் இருந்து, பின்பு அமரர்களின் வேண்டுகோளின்படி சுக்கில வழியாக வெளியே வரச் செய்ததனால் சுக்கிரன் என்றும்,

    தூய வெண்மையாக வந்ததனால் வெள்ளி என்றும் பெயர் ஏற்பட்டது. அதனால் யாவராலும் வணங்கப்படும் கிரக பதவி கிட்டியது.

    • அது மட்டுமின்றி கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீக்கிய தலம்.
    • கலிக்காமருக்கு திருமணம் நடந்தத் தலம். மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டத் தலம்.

    சிவபெருமான் பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடி நீங்கியருளியத் தலம்.

    பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தத்தலம்.

    அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்த தலம், சந்திரனின் சாபம் நீங்கியத் தலமாகவும் உள்ளது.

    அது மட்டுமின்றி கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீக்கிய தலம்.

    கலிக்காமருக்கு திருமணம் நடந்தத் தலம்.

    மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டத் தலம்.

    மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்தர் அவதார தலம்.

    வடக்கு நோக்கி ஓடும் காவிரிக் கரையில் அமைந்த தலம்

    என பல புராண வரலாறுகளை தன்னகத்தே கொண்டது.   

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூலவராக அக்னீஸ்வரரும், தாயாராக கற்பகாம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
    • தல விருட்சமாக புரச மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளது.

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே கும்பகோணத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது.

    தேவாரம், பெரிய புராணம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 36வது ஸ்தலமாகும்.

    இந்த கோவில் மதுரை ஆதீனத்திற்கு உட்பட்டதாக திகழ்கிறது.

    இது நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிரனுடைய ஸ்தலமாக போற்றப்படுகிறது.

    மூலவராக அக்னீஸ்வரரும், தாயாராக கற்பகாம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    தல விருட்சமாக புரச மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளது.

    இத்தலம் நம்மை நாளும் ஆளும் நவக்கிரகங்களில் ஒன்றான சுக்ரனுக்குரிய பரிகாரத் தலமாககும்.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற திருக்கஞ்சனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள தல மூலவரான அக்னீஸ்வர சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் சுக்ர பகவானாக லிங்க வடிவத்தில் அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம்.

    பிரம்ம தேவருக்கு திருமணக்கோலம் காட்டி அருளியதால், இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் தனி சன்னதியில் அன்னை கற்பகாம்பாள் காட்சி அளிக்கிறார்.

    • மதுரை திருமோகூர் ஸ்ரீகாளமேக பெருமாள்,
    • திருநள்ளாறு ஸ்ரீதர்பரண்யேஸ்வரர்,

    தமிழகத்தில் வைகாசி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடக்கும் தலங்கள் வருமாறு:-

    01 காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில்,

    02 திருவல்லிக்கேணி, ஸ்ரீபார்த்தசாரதி கோவில்,

    03 ஆழ்வார் திருநகரி (ஸ்ரீநம்மாழ்வாருக்குப் பிரம்மோற்சவம்),

    04 மதுராந்தகம் ஸ்ரீஏரி காத்த ராமர்,

    05 மகாபலிபுரம் ஸ்ரீஸ்தல சயன பெருமாள்,

    06 திருநாராயணபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள்,

    07 காஞ்சி ஸ்ரீவைகுண்ட பெருமாள்,

    08 சென்னை அமைந்தகரை ஸ்ரீபிரசன்ன வரதராஜர்,

    09 மதுரை ஸ்ரீகூடலழகர்,

    10 மதுரை திருமோகூர் ஸ்ரீகாளமேக பெருமாள்,

    11 திருநள்ளாறு ஸ்ரீதர்பரண்யேஸ்வரர்,

    12 பட்டீஸ்வரம் ஸ்ரீதேணு புரீஸ்வரர்,

    13 திருக்கண்ணங்குடி ஸ்ரீகாள ஹஸ்தீஸ்வரர்,

    14 திருப்பனையூர் ஸ்ரீசவுந்தரேஸ்வரர்,

    15 கஞ்சனூர் ஸ்ரீஅக்னி புரீஸ்வரர்,

    16 கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர்,

    17 திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி,

    18 மயிலாடு துறை ஸ்ரீமயூரநாதர்,

    19 திருச்செங்கோடு ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர்,

    20 பொள்ளாச்சி ஸ்ரீசுப்ரமணியர்,

    21 சென்னை வடபழனி ஸ்ரீதண்டாயுதபாணி,

    22 சென்னை ஸ்ரீகாளிகாம்பாாள்

    ஆகிய கோவில்களில் வைகாசி மாதத்தில் உற்சவம் சிறப்புற நடைபெறுகிறது.

    • உற்சவங்கள், ஒரேயொரு நாளிலும் முடியும். அதிக பட்சமாக 27 நாட்கள் வரையும் நீண்டிருக்கும்.
    • எனினும், பெரும்பாலான ஆலயங்களில், 9 நாட்கள் நடைபெறும் உற்சவமே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

    கோவில்களில் நடத்தப்படும் பிரம்மோற்சவ விழாக்களில் இதுவும் ஒன்று என்பதாகவே பலரும் நினைக்கிறார்கள்.

    பெரும்பாலானவர்கள் முக்கியமான விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

    மற்ற விழாக்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

    ஆனால், உற்சவம் என்பதே, உலக மக்கள் அனைவருக்கும் பலன் தரக்கூடிய, பலம் தரக்கூடிய முக்கியமான விழாவாகும்.

    உத்+சவம். இதில், சவம் என்பது தோற்றத்தைக் குறிக்கும். தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளிவருவதை பிரசவம் என்கிறோம்.

    அதேபோல், எல்லாம் வல்ல பரம்ருபொருளின் சக்தி, ஆலயத்தின் கருவறையில் மூல மூர்த்தமாக எழுந்தருளியுள்ளது.

    அப்படி, மூல மூர்த்தமாக இருக்கிற இறைவனை உற்சவரின் திருமேனிக்கு எழுந்தருளச் செய்து, உலக நன்மைக்காக, கோவிலில் இருந்து சுவாமி வீதியுலா வருகிற வைபவமே, உற்சவம்!

    உற்சவங்கள், ஒரேயொரு நாளிலும் முடியும். அதிக பட்சமாக 27 நாட்கள் வரையும் நீண்டிருக்கும்.

    எனினும், பெரும்பாலான ஆலயங்களில், 9 நாட்கள் நடைபெறும் உற்சவமே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

    இந்த ஒன்பது நாள் உற்சவத்தை, சவுக்கியம் என்று குறிப்பிடுவர்.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வு... தீர்த்தவாரி.

    அந்த நாளில், புண்ணிய நதிகள் அனைத்தையும் தீர்த்தங்களாக ஆவாஹனம் செய்து, அனைத்து ஜீவராசிகளையும் அஸ்த்ர தேவரில் எழுந்தருளச் செய்வார்கள்.

    அப்போது, நாம் தீர்த்த நிலையில் நீராடி கரைக்கு வரும்போது, மிகச் சிலிர்ப்புடன் இறையனுபூதி கிடைக்கும் என்கிறார் மணிவாசகப் பெருமான்.

    வைகாசி மாத பிரம்மோற்சவ விழாக்களில் கலந்து கொண்டு வழிபட... இயற்கைச் சீற்றங்கள் குறையும், பசுமை கொழிக்கும்.

    உலகில் அமைதி நிலவும், குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் குடிகொள்ளும், சகல செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம்!

    • விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.
    • பகை நீங்கி அன்பு பெருகும் சுகம் கிடைக்கும். தீராத வினைகளும், எதிரிகளின் தொல்லைகளும் நீங்கும்.

    வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தைச் சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    பின்னர் தலைவாழை இலையில், சர்க்கரைப் பொங்கல், தினைமாவு, பால், சித்ரான்னங்கள், பட்சணங்களை நைவேத்யமாகப் படைத்து குத்து விளக்கை ஏற்ற விநாயகப் பெருமானை மஞ்சளில் அல்லது பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    விநாயகர் பூஜை முடிந்தபின் முருகப் பெருமானுக்குரிய நாமங்களைச் சொல்லி அர்ச்சித்து தீபம் காட்டி வழிபட வேண்டும்.

    மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி ஆகியவைகளைப் படிக்க வேண்டும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார்.

    அவர் அங்கிருந்து ஏழாம் பார்வையாக விசாக நட்சத்திரத்தைப் பார்க்கிறார். விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.

    சூரியன் விசாக நட்சத்திரத்தைப் பார்ப்பதன் மூலம் முருகனை வழிபடுவதாக ஐதீகம்.

    எனவேதான், சூரியன் வழிபடும் முருகப்பெருமானை அந்நாளில் விரதமிருந்து நாமும் வழிபட்டு வருகிறோம்.

    விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.

    பகை நீங்கி அன்பு பெருகும் சுகம் கிடைக்கும். தீராத வினைகளும், எதிரிகளின் தொல்லைகளும் நீங்கும்.*

    • பொதுவாக மகாலட்சுமியை தரிசிக்க வேண்டுமெனில் அவளை மகாவிஷ்ணுவுடன் மணக்கோலத்தில் தரிசிப்பது வழக்கம்.
    • இவ்வாலயத்தில் மகாலட்சுமி மகரிஷியின் மகளாக தோன்றி வளர்ந்து கன்னியாக உலா வந்திருக்கிறாள்.

    திருநரையூர் தலத்தில் சைவ வைணவ பேதம் எதுவும் கிடையாது.

    மேதாவி மகரிஷி என்கிற ஒரு மகரிஷி கடுந்தவம் புரிந்து இந்த ஆலயத்திலே மகாலட்சுமியை மகளாக அடைந்தார்.

    நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகிற தலத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு லட்சுமியை கன்னிகாதானம் செய்து கொடுத்த அற்புத சக்தி வாய்ந்த தலமாகும் இது.

    பொதுவாக மகாலட்சுமியை தரிசிக்க வேண்டுமெனில் அவளை மகாவிஷ்ணுவுடன் மணக்கோலத்தில் தரிசிப்பது வழக்கம்.

    இவ்வாலயத்தில் மகாலட்சுமி மகரிஷியின் மகளாக தோன்றி வளர்ந்து கன்னியாக உலா வந்திருக்கிறாள்.

    அவளை ஸ்ரீபர மேஸ் வரனும், பார்வதியும் மகளாகப் பாவித்து மகாவிஷ்ணுவிற்கு மணம் செய்து கொடுத்திருக்கின்றனர்.

    இவ்வாலயத்தின் தனிச் சிறப்பு ஒவ் வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் மகா லட்சுமிக்கு 1008 தாமரை மலர்களி னாலே குபேர மகாலட்சுமி ஹோமம் செய்து வருவதாகும்.

    இவ்வாலயத்திற்கு வருபவர் அனைவருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப வெற்றியை தந்தருள்பவள் ஸ்ரீசவுந்தரநாயகி (அழகம்மை).

    இங்கு சுயவரதம், அட்சய மாலை, தாமரைப்பூ, இலைகளை நான்கு திருக்கைகளில் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள் தேவி.

    இங்குள்ள சண்முகருக்கு பிரதி செவ்வாய்க்கிழமை சத்ரு சம்ஹார அர்ச்சனை நடைபெறுகிறது.

    ஆறுவித புஷ்பங்கள், நெய்வேத்தியங்கள், பலவகைப் பழங்கள், பழரசங்கள், இவைகளைக் கொண்டு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

    • சிவபெருமான் சித்தநாதன் என்ற பெயருடன் காட்சி தரும் தலம் திருநரையூர்.
    • மூர்த்தி, தலம், தீர்த்தம் இம் மூன்றாலும் பெருமையுடைய இத்திருத்தலம் மகாலட்சுமி அவதாரம் நிகழ்ந்த சிறப்புடையது.

    சிவபெருமான் சித்தநாதன் என்ற பெயருடன் காட்சி தரும் தலம் திருநரையூர்.

    கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 9 கி.மீ. தொலைவில் திருநரையூர் உள்ளது.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் இம் மூன்றாலும் பெருமையுடைய இத்திருத்தலம் மகாலட்சுமி அவதாரம் நிகழ்ந்த சிறப்புடையது.

    இங்குள்ள தலமூர்த்தி சித்தநாதரை நோக்கி பதினெண் சித்தர்களுள் ஒருவரான கோரக்கச் சித்தர் இத்தலத்திற்கு வந்து தவம் புரிந்தார்.

    அவர் முன்பு தோன்றி தரிசனம் கொடுத்ததால் பரமேஸ்வரருக்கு சித்தநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

    இத்தல மூர்த்திக்கு சாதாரணமாக ஒரு குடம் நீரை அபிஷேகம் செய்வித்து அதனை பிரசாதமாக நாம் குடித்தால் நம் உடம்பில் உள்ள அனைத்துவிதப் பெரிய ரோகங்களும் தீரும் என்று சொல்கிறார்கள்.

    பாண்டிய நாட்டு மன்னர் சந்திரகுப்தன் குஷ்டரோகம் ஏற்பட்டு அதனால் வருந்தி பல தலங்களுக்கும் சென்றான்.

    அப்போது அவன் கனவிலே சித்தநாதர் தோன்றி நரையூருக்கு வா என்று அழைக்க அதன்படி இவ்வாலயத்திற்கு வந்த மன்னன் 1008 குடம் பால் அபிஷேகம் செய்விக்க அவனது குஷ்டரோகம் உடனே குணமானது.

    • கதையை ஊன்றிய மகாவிஷ்ணு, கருட சேவை காட்சி ஆகியன தோற்றம் அளிக்கின்றன.
    • 24 கால் மண்டபத்தின் கிழக்கே 2 வது வரிசை தூண்களில் 5 வது தூணில் ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    24 கால் மண்டபத்தில் சிவன் சன்னதி பக்கம் உள்ள முதல் தூணில், விநாயகர், வேல் தாங்கிய கந்தன் உருவங்களும், பெருமாள் பக்கம் உள்ள முதல் தூணில் ஆனந்த கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனம், நரசிம்மம் செதுக்கப்பட்டுள்ளன.

    இத்தூண்களின் அடியிலும், கடைசி 2 எதிர் தூண்களின் அடியிலும் ருத்திராட்சம், சிவச்சின்னம் அணிந்த முத்திய நாராயண செட்டியார் என்னும் திருவுருவம் பெயருடன் காணப்படுகின்றது.

    இம்மண்டபம், சிவன் சன்னதிக்கு இடப்பக்கமும், வரதராச பெருமாளுக்கு வலப்பக்கமுமாக 2 சன்னதிகளையும் இணைத்தவாறு மிகப்பெரிதாக கட்டப்பட்டுள்ளது.

    இதனை கட்டியவரின் உருவங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.

    அதில் அவர்களின் (கைங்கர்யம்) நற்செயல் குறித்த கல்வெட்டும் செதுக்கப்பட்டுள்ளது.

    கிழக்கில் உள்ள முதல் தூண் கல்வெட்டில் (1886ம் ஆண்டு விபஸ்ரீ சித்திரை மாதம் புதுவை, வைசிய குல முத்திய செட்டியார் குமாரன் நாராயண செட்டியார் மண்டபம் தருமம்) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

    கோவிலின் தென் வாயிலையொட்டிய 16 கால் மண்டபம் அமைத்தவர்கள் ஆயிர வைசிய சைவ செட்டியாரில் ஒரு வகுப்பார் என்றும், வரதராச பெருமாளுக்கு வடக்கு பாகத்தில் உள்ள 24 கால் மண்டபம் அமைத்தவர்கள் ஆயிர வைசிய செட்டியாரில் மற்றொரு வகுப்பார் என்பதும் சிற்பங்களாலும், கல்வெட்டாலும் புலப்படுகின்றன.

    கிழக்கு நோக்கிய முதலாவது தூணில் சிவன் சன்னதி பக்கம், பார்வதி பரமேசுவரர், நடராசர், 5 தலை நாகம் குடைபிடிக்கும் சிவலிங்கம் தூணில் பொறிக்கப்பட்டுள்ளன.

    எதிரில் கதையை ஊன்றிய மகாவிஷ்ணு, கருட சேவை காட்சி ஆகியன தோற்றம் அளிக்கின்றன.

    24 கால் மண்டபத்தின் கிழக்கே 2 வது வரிசை தூண்களில் 5 வது தூணில் ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஆஞ்சநேயருக்கு ஒரு சிறிய மண்டபம் பித்தளை பிரபையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆஞ்சநேயர் வழிபாடு சனிக்கிழமைகளில் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.

    ஆஞ்சநேயரின் பின்னால் சேதுவை கடக்கும் போது ராம, லட்சுமணரை தம் தோளில் தாங்கிய அனுமனின் அற்புத காட்சி சுதையால் வண்ணப் பொலிவோடு காட்சி அளிக்கின்றது.

    24 கால் மண்டப மேற்கூரையின் பக்கச் சுவர்களில் சிவன் சன்னதியை ஒட்டியுள்ள பகுதியில் விநாயகர் காட்சி ஓவியங்கள், நடராசரின் பல்வேறு தாண்டவங்கள் வண்ண ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன.

    வலப்பக்கத்தில் தசாவதார காட்சிகள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன.

    24 கால் மண்டபத்தில் சிவன் சன்னதி பக்கம் உள்ள முதல் தூணில், விநாயகர், வேல் தாங்கிய கந்தன் உருவங்களும், பெருமாள் பக்கம் உள்ள முதல் தூணில் ஆனந்த கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனம், நரசிம்மம் செதுக்கப்பட்டுள்ளன.

    இத்தூண்களின் அடியிலும், கடைசி 2 எதிர் தூண்களின் அடியிலும் ருத்திராட்சம், சிவச்சின்னம் அணிந்த முத்திய நாராயண செட்டியார் என்னும் திருவுருவம் பெயருடன் காணப்படுகின்றது.

    இம்மண்டபம், சிவன் சன்னதிக்கு இடப்பக்கமும், வரதராச பெருமாளுக்கு வலப்பக்கமுமாக 2 சன்னதிகளையும் இணைத்தவாறு மிகப்பெரிதாக கட்டப்பட்டுள்ளது.

    இதனை கட்டியவரின் உருவங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.

    அதில் அவர்களின் (கைங்கர்யம்) நற்செயல் குறித்த கல்வெட்டும் செதுக்கப்பட்டுள்ளது.

    கிழக்கில் உள்ள முதல் தூண் கல்வெட்டில் (1886ம் ஆண்டு விபஸ்ரீ சித்திரை மாதம் புதுவை, வைசிய குல முத்திய செட்டியார் குமாரன் நாராயண செட்டியார் மண்டபம் தருமம்) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

    கோவிலின் தென் வாயிலையொட்டிய 16 கால் மண்டபம் அமைத்தவர்கள் ஆயிர வைசிய சைவ செட்டியாரில் ஒரு வகுப்பார் என்றும், வரதராச பெருமாளுக்கு வடக்கு பாகத்தில் உள்ள 24 கால் மண்டபம் அமைத்தவர்கள் ஆயிர வைசிய செட்டியாரில் மற்றொரு வகுப்பார் என்பதும் சிற்பங்களாலும், கல்வெட்டாலும் புலப்படுகின்றன.

    கிழக்கு நோக்கிய முதலாவது தூணில் சிவன் சன்னதி பக்கம், பார்வதி பரமேசுவரர், நடராசர், 5 தலை நாகம் குடைபிடிக்கும் சிவலிங்கம் தூணில் பொறிக்கப்பட்டுள்ளன.

    எதிரில் கதையை ஊன்றிய மகாவிஷ்ணு, கருட சேவை காட்சி ஆகியன தோற்றம் அளிக்கின்றன.

    24 கால் மண்டபத்தின் கிழக்கே 2 வது வரிசை தூண்களில் 5 வது தூணில் ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    ஆஞ்சநேயருக்கு ஒரு சிறிய மண்டபம் பித்தளை பிரபையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆஞ்சநேயர் வழிபாடு சனிக்கிழமைகளில் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.

    ஆஞ்சநேயரின் பின்னால் சேதுவை கடக்கும் போது ராம, லட்சுமணரை தம் தோளில் தாங்கிய அனுமனின் அற்புத காட்சி சுதையால் வண்ணப் பொலிவோடு காட்சி அளிக்கின்றது.

    24 கால் மண்டப மேற்கூரையின் பக்கச் சுவர்களில் சிவன் சன்னதியை ஒட்டியுள்ள பகுதியில் விநாயகர் காட்சி ஓவியங்கள், நடராசரின் பல்வேறு தாண்டவங்கள் வண்ண ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன.

    வலப்பக்கத்தில் தசாவதார காட்சிகள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன.

    01. விநாயகரை வழிபடும் நாடுகள் சாவகம், பாலி, போர்னியா, திபெத், பர்மா, சியாம், சீனா, ஜப்பான், இந்தோனேசியா, கம்போடியா, மங்கோலியா, இந்தியா.

    02. பிள்ளையார் அழித்த அசுரர்கள் 1) அபிஜயன். 2) ஜூலாமுகன். 3) துராசாரன். 4) சிந்து. 5) கிருத்திராசாரன் (6) குரோசுரன். 7) பாலாசுரன்.

    03. விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றோர் அவ்வையார், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார்.

    04. விநாயகரை வழிபட்டால் நல்லவாக்கு, நல்லமனம், லட்சுமி கடாட்சம் ஆகிய பலன்கள் கிடைக்கும்.

    05. சக்தியையும், சிவனையும் வேண்டிக் கொண்டு இடப்படுகின்ற குறியானது பிள்ளையார் சுழி எனப்படும்.

    06. வடக்கே விநாயகர் சதுர்த்தியை உருவாக்கியவர் பாலகங்காதர திலகர்.

    07. விநாயக ருத்ராட்சத்தின் மற்றொரு பெயர் எண்முக ருத்ராட்சம் ஆகும்.

    08. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை உருவாக்கியது நரசிம்மவர்ம பல்லவன்.

    09. பிள்ளையார் அழித்த அரக்கிகள். 1) விரசை. 2) பிரமதை. 3) சிரம்பா.

    10. பிள்ளையார் சுழியில் உள்ள ஐந்தெழுத்துத் தத்துவம் நமசிவாய என்பதாகும்.

    11. விநாயகர் புகழ்பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக சப்தகம், ஷோடச கணபதி துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.

    12. விநாயகர் என்றால் அவரை விட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.

    13. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆகிய மூவரும் போற்றி வணங்குகின்ற விநாயகர் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் ஆவார்.

    14. காரைக்காலினைச் சேர்ந்த தாமானங்குடி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பெரிதும் சிறிதுமாய் இரண்டு விநாயகர் திருவுருவங்கள் உள்ளன. ஒன்று பிரெஞ்சு விநாயகர் மற்றொன்று இங்கிலீஷ் விநாயகர்.

    15. விநாயகர் சதுர்த்தி விழா மராட்டியத்திலும், ஆந்திராவிலும் 11 நாட்கள் வழிபாடாகக் கொண்டாடப்படு கின்றது.

    16. பிள்ளையாருக்கு ஞானக் கொழுந்து என்றொரு பெயருண்டு. ஞானத்தை அருள்வதற்காக விநாயகர் அரச மரத்தடியில் அமர்ந்துள்ளார்.

    17. மராட்டியத்தில் தேங்காய்களை உடைத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு வழங்குகின்றார்கள்.

    18. மணிப்பூர் மாநிலத்தில் மைரி என்னும் மக்கள் மூங்கில் அரிசியைக் கணபதிக்கு நிவேதனம் செய்து வழிபாடு செய்கின்றார்கள்.

    19. சென்னை தியாகராய நகரில் ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில் சித்தி சக்தியுடன் பத்துத் தலை கொண்ட வலஞ்சுழி விநாயகர் உள்ளார்.

    20. எகிப்தில் விநாயகர் ஒருவர் இருக்கின்றார். இவர் தமது கையில் சாவி வைத்து இருக்கின்றார். தம்மை வழிபாடு செய்பவர்களுக்கு இவர் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து விடுவார் என்னும் நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

    21. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படுகின்றார்.

    22. கணபதிக்கும், சனீஸ்வரனுக்கும் பிரியமானது வன்னி மரம். எனவே, வன்னிமர இலைகளால் விநாயகப் பெருமானை வழிபட்டால் சனிபகவான் தொல்லைகள் நீங்கும்.

    23. கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது. இது ஆதிசங்கரர் சிறப்பித்த வழிபாடு ஆகும்.

    24. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.

    25. சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் என்று தொடங்கும் பிரபலமான விநாயகர் துதி இடம்பெறுவது விஷ்ணு சகஸ்ர நாமத்தின் தொடக்கத்தில்தான். இந்தத் துதி பல்வேறு பூஜைகளுக்கும், நியமங்களுக்கும் தொடக்கத்தில் சொல்லப்படுகின்றது.

    26. விக்னம் என்றால் கஷ்டம். கஷ்டங்களை அகற்றுபவர் என்பதால் விக்னேஸ்வரர் என்கிற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது.

    27. விநாயகர் ஐந்து கரங்களைக் கொண்டு விளங்குவதினால் 'ஐங்கரன்' என்று அழைக்கப்படுகின்றார்.

    28. அசோகர் காலத்தில் அவர் மகள் சாருமதி நேபாளத்தில் விநாயகருக்குக் கோவில் கட்டினார்.

    29. புத்தர்கள் விநாயக வழிபாடு செய்கின்றார்கள்.

    30. விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து ஒன்பது நாள் விநாயக விரதம் இருந்து வணங்குதல் விநாயக நவராத்திரி எனப்படும்.

    • திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பட்டு வருகின்றது.
    • அன்ன அபிஷேகம்: பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்தால் இல்லத்தில் வளம் கொழிக்கும்.

    விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன.

    ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்து செய்யப்பெறுகின்றன.

    அவ்வகையில் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பட்டு வருகின்றது.

    பாலாபிஷேகம்:-வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றிப் பாலாபிஷேகம் செய்தால் புத்திரப் பேறு கிடைக்கும்.

    சந்தன அபிஷேகம்:- செஞ்சேரிமலை என வழங்கப்படும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பு தரும்.

    தேனாபிஷேகம்:- திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பட்ட விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர். இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போகக்காணலாம்.

    திருநீற்று அபிஷேகம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திரு நீற்று விநாயகர் என அழைக்கப்படுகின்றார். அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் கைகளாலேயே அவருக்கு விபூதி அபிஷேகம் செய்து வணங்குகின்றனர். மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் நிறைவேறும்.

    கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்: மிருக சீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.

    அன்ன அபிஷேகம்: பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்தால் இல்லத்தில் வளம் கொழிக்கும்.

    சொர்ணாபிஷேகம்: திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு சொர்ணாபிஷேகம் செய்ய செல்வம் கொழிக்கும்.

    • பால் - ஆயுள் விருத்தி
    • தயிர் -சந்தான (மக்கள்) விருத்தி

    தண்ணீர் அபிஷேகம்- மனசாந்தி

    நல்லெண்ணை-பக்தி

    சந்தனாதித்தைலம்- சுகம்

    வாசனைத்திரவியம்- ஆயுள் வலிமை

    மஞ்சள் பொடி- ராஜ வசியம்

    நெய்- மோட்சம்

    பஞ்சாமிர்தம்- தீர்க்காயுள்

    தேன்- சங்கீத (இசை) வளமை

    வாழைப்பழம்- பயிர் விருத்தி

    மாம்பழம்- சகல வசியம்

    பலாப்பழம்- உலக வசியம்

    திராட்சைப்பழம்- பயம் நீங்குதல்

    மாதுளம்பழம்-பகை நீங்குதல்

    தம்பரத்தம்பழம்- பூமி லாபம்

    நாரத்தம்பழம்- நல்ல புத்தி

    தேங்காய்த்துருவல்- அரசுரிமை

    சர்க்கரை- பகையை அழித்தல்

    பால்- ஆயுள் விருத்தி

    தயிர்-சந்தான (மக்கள்) விருத்தி

    இளநீர்- நல்ல புத்திரப்பேறு

    கருப்பஞ்சாறு- சாஸ்திரத் தேர்ச்சி

    அரிசிப்பொடி- பிறவிப் பிணிநீங்குதல்

    பஞ்ச கவ்யம்- ஆத்மசுத்தி, பாவ நிவர்த்தி

    எலுமிச்சம்பழம்- எம பயம் நீக்கும்

    நெல்லி முள்ளிப்படி- நோய் நீக்கம்

    அன்னம்- ஆயுள் ஆரோக்கியம், தேகம் அபிவிருத்தி

    பச்சைக்கற்பூரம்- பயம் நீங்குதல்

    விபூதி- ஞானம்

    வஸ்திரம்- ராஜயோகம்

    புஷ்பம்- மகிழ்ச்சி

    சந்தனம்- செல்வம், சுவர்க்கபோகம்

    கஸ்தூரி- வெற்றி உண்டாகுதல்

    கோரோசனை- ஜபம் சித்திக்கும்

    வலம்புரிச்சங்கு- தீவினை நீங்கும்

    சொர்ணம் (தங்கம்)- வைராக்யம்

    சஹஸ்ரதாரை- லாபம்

    கும்பம் (ஸ்நபனம்)- அஸ்வமேதயாகப்பலன்.

    ×