search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi thabasu"

    • நாளை காலை 9 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம், பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை தங்கசப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா ஆண்டு தோறும் விமர்சையாக கொண்டாடப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு வழக்கம் போல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி நாளை (புதன்கிழமை) நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம், பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து மதியம் 11.40 மணிக்கு மேல் 12 மணிக்குள் தங்கசப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மாலை 5.30 மணிக்கு மேல் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசுக்காட்சி கொடுக்கிறார்.

    இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.

    ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.

    • பொதுமக்கள் தேரை வடம் பிடித்து 4 ரத வீதிகளிலும் இழுத்து வந்தனர்.
    • திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.

    சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டிற்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதை தொடர்ந்து தினமும் இரவு சிம்மம், அன்னம், கமலம், யானை, கிளி, விருஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும், பூப்பல்லக்கு, சப்பரம் ஆகியவற்றிலும் சாமி எழுந்தருளி வீதி உலா வந்தது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று மாலை 4 மணிக்கு அம்மன் சப்பரத்திற்கு எழுந்தருளினார்.இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பின்னர் சப்பரத்தை சன்னதி புதுக்குளம் கிராமத்தினர் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து 4 ரத வீதிகளிலும் இழுத்து வந்தனர். திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.

    • சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
    • நாளை இரவு 12 மணிக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடித்தபசு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மேல் கோமதி அம்பாள் தேருக்கு எழுந்தருளினார்.

    தொடர்ந்து காலை 10.05 மணிக்கு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளில் வலம் வந்த தேர் 12 மணி அளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது.

    தேரோட்டத்தில் சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமா மகேஸ்வரி சரவணன், ஆணையாளர் ரவிச்சந்திரன், ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இசக்கியப்பன், பா.ஜனதா மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், ராஜலட்சுமி சுந்தர்ராஜ், நகர தலைவர் கணேசன், திருவாவடுதுறை ஆதீன சமய சொற்பொழிவாளர் சங்கரநாராயணன், சைவ சித்தாந்த சபை நிறுவனர் சண்முகவேல் ஆவுடையப்பன், இந்து முன்னணி நகர தலைவர் சங்கர், மண்டகப்படிதாரர்கள், சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி 11-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5.30 மணிக்கு மேல் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசுக்காட்சி கொடுக்கிறார். இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.

    ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.

    • இந்த கோவில் உள்ள பிரகாரத்தில் 108 சுற்றுகள் சுற்றினால் வேண்டுதல் நிறைவேறும்.
    • சிலர் பக்தர்கள் நொண்டியடித்தும், முழங்கால் இட்டும் 11 முறை சுற்றினர்.

    தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் சுவாமி-அம்பாள் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    ஆடித்தபசு திருவிழாவின்போது சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள பிரகாரத்தில் 108 சுற்றுகள் சுற்றினால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அதன்படி கொடியேற்றப்பட்டதில் இருந்து நேற்று வரை பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் 108 முறை கோவில் உள் பிரகாரத்தை சுற்றி வந்தனர். சிலர் பக்தர்கள் நொண்டியடித்தும், முழங்கால் இட்டும் 11 முறை சுற்றினர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான திருவிழா 11-ம் நாளான, வருகிற புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் 8-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.
    • ஆடித்தபசு காட்சி 10-ந்தேதி நடைபெற உள்ளது.

    தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா நேற்று ெகாடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் அதிகாலை 5.32 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி 11-ம் நாளான 10-ந் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

    அன்று மாலை 5.30 மணிக்கு மேல் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசுகாட்சி கொடுக்கிறார். இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.

    கொடியேற்ற விழா ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலையதுறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

    கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் கலைமணி, சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு சுதீர் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஆகஸ்டு 8-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
    • ஆடித்தபசு திருவிழா ஆகஸ்டு 10-ந் தேதி நடைபெற உள்ளது.

    தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலும் ஒன்று.

    சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராட நன்னாளில் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும்.

    விழா நாட்களில் சுவாமி அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழாவையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் சிறப்பு நாதஸ்வர இன்னிசை, தேவார இன்னிசை, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஒன்பதாம் திருநாளான ஆகஸ்டு 8-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

    சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா பதினோறாம் திருநாளான ஆகஸ்டு 10-ந் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை 5.30 மணிக்கு மேல் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசு காட்சி கொடுக்கிறார்.

    இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.

    இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா நடைபெற உள்ளதால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவிழாவையொட்டி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலையதுறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.

    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆடித்தவசு காட்சி நடக்கிறது.
    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அனைத்து நாட்களிலும் கோவிலிலும், மண்டகப்படியிலும் கோமதி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் யாகசாலை மண்டபத்தில் தினமும் பக்தி சொற்பொழிவுகள், தேவார இன்னிசை, பட்டிமன்றங்கள், சிறப்பு பரத நாட்டியாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. 10-ம் திருநாளான நேற்று காலை கோமதி அம்பாள் முளைப்பாரி எடுத்தல் அலங்காரத்தில் வீதி உலாவும், இரவு 10 மணிக்கு கோமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலாவும் வருதல் நடைபெற்றது.

    சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு காட்சி 11-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு விளா பூஜையும், 8.30 மணிக்கு சுவாமி-அம்பாள் மற்றும் சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. மதியம் 12.05 மணிக்கு தெற்கு ரதவீதியில் உள்ள தவசு மண்டபத்துக்கு கோமதி அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம் 2.45 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தவசுகாட்சிக்கு புறப்பாடும் நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக தவசுக்காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் தவசுக்காட்சிக்கு புறப்பாடும், இரவு 9 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த காட்சியை காண்பதற்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    ஆடித்தவசு திருவிழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் நகர் பகுதியில் நான்கு புறங்களிலும் தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமையில் போலீசார் செய்து உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில், நகரசபை நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர். 
    சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்பாள் சன்னதிக்கு முன்பு அமைந் துள்ள தங்க கொடிமரத்தில் காலை 8.15 மணிக்கு மேல் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க வெண்பட்டு கொடியேற்றப்பட்டது. ராஜபட்டர் கொடியை ஏற்றினார்.

    இதையடுத்து தர்ப்பை புற்கள் பட்டு வஸ்திரங்கள் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு தேன், பஞ்சாமிர்தம் , இளநீர் உள்பட புண்ணிய தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, மற்றும் மண்டகபடிதாரர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 25-ந்தேதியும், சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 27-ந்தேதி முதல் காட்சி மாலை 5 மணிக்கு, இரண்டாம் காட்சி இரவு 9 மணிக்கும் நடை பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
    அம்பை சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    அம்பை சங்கரலிங்க சுவாமி-கோமதி அம்பாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு அம்பாள் வீதிஉலாவும் நடக்கிறது. விழா தொடர்ந்து 27-ந் தேதி வரை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கு அம்பாள் வீதி உலா, 10 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அம்பாள் வீதி உலா ஆகியன நடக்கிறது.

    26-ந் தேதி (வியாழக்கிழமை) 9 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு சங்கர நாராயணராகவும், 6.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமியாகவும் அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    28-ந் தேதி இரவு 7.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி தெப்ப திருவிழா, 10 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி உலா, 29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்ப திருவிழா, 10 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி உலா ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 
    ×