என் மலர்
செய்திகள்

ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை நடந்த காட்சி.
சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா தொடங்கியது
சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்பாள் சன்னதிக்கு முன்பு அமைந் துள்ள தங்க கொடிமரத்தில் காலை 8.15 மணிக்கு மேல் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க வெண்பட்டு கொடியேற்றப்பட்டது. ராஜபட்டர் கொடியை ஏற்றினார்.
இதையடுத்து தர்ப்பை புற்கள் பட்டு வஸ்திரங்கள் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு தேன், பஞ்சாமிர்தம் , இளநீர் உள்பட புண்ணிய தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, மற்றும் மண்டகபடிதாரர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 25-ந்தேதியும், சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 27-ந்தேதி முதல் காட்சி மாலை 5 மணிக்கு, இரண்டாம் காட்சி இரவு 9 மணிக்கும் நடை பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Next Story